Published:Updated:

எம்.ஜி.ஆர் விருப்பம்... எதிர்பார்ப்பில் பிசியோதெரபிஸ்ட்கள்!

எம்.ஜி.ஆர் விருப்பம்... எதிர்பார்ப்பில் பிசியோதெரபிஸ்ட்கள்!
பிரீமியம் ஸ்டோரி

‘‘இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபிஸ்ட்) பயின்ற எங்களுக்கு, தனியாக கவுன்சில் அமைக்காமல் அரசு காலம் தாழ்த்திவருகிறது. அதனால், சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இன்னொருபுறம், லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள், பிசியோதெரபி சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். எங்களைப் பணியில் அமர்த்தினால், தங்கள் வருமானத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களுக்கு எதிராக ‘லாபி’ செய்கின்றன’’ என்று குமுறுகிறார்கள், தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தினர்.

எம்.ஜி.ஆர் விருப்பம்... எதிர்பார்ப்பில் பிசியோதெரபிஸ்ட்கள்!

உடல்வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஏராளமானோர், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சிகிச்சைக்காக வருகிறார்கள். பிசியோதெரபி சிகிச்சை மூலமாகவே அவர்களைக் குணப்படுத்த முடியும். ஆனால், பல மருத்துவ மனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிசியோ தெரபிஸ்டுகள் இல்லை. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பிசியோதெரபி படித்தவர்கள் தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், சரியான வேலைவாய்ப்பு இல்லை. இந்த நிலையில்தான், சமீபத்தில் மதுரை அருகே காரியாபட்டியில், தங்களுடைய அகில இந்திய மாநாட்டை நடத்திய இயன்முறை பெருமன்றத்தினர், தங்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார், ‘‘பிசியோதெரபி என்பது மருத்துவ முறைகளில் ஒன்று. இது, பக்க விளைவுகள் இல்லாதது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், அவருடைய விருப்பத்தின் பேரில் இந்தத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அவருடைய விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. கவுன்சில் அமைக்க பல ஆண்டுகளாகப் போராடினோம். 16.10.2008-ல், தி.மு.க ஆட்சியில் பிசியோதெரபி கவுன்சில் கொண்டுவருவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதனால்தானோ என்னவோ,  அதை அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்த விரும்பவில்லை போல. அதை நடைமுறைப்படுத்துவதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால், சுகாதாரத் துறை அமைச்சரும், செயலாளரும் நன்கு ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறோம்.

சுகாதாரத் துறைக்கு அமைச்சராக வருபவர்களும், இயக்குநராக வருபவர்களும் பெரும்பாலும் அலோபதி மருத்துவர்களாக இருப்பதால், எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்காமல் காலம்கடத்துகிறார்கள். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறைத் தலைவராக மாற்று மருத்துவத் துறையைச் சேர்ந்தவரே இருக்கிறார். குறிப்பிட்ட துறையின் கொள்கை முடிவெடுக்கும் இடத்தில், அதற்குச் சம்பந்தமில்லாத துறையைச் சேர்ந்தவர் இருப்பது தவறு. இதெல்லாம்தான் எங்கள் வாய்ப்புகளைக் கெடுக்கிறது’’ என்றார்.

எம்.ஜி.ஆர் விருப்பத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றுமா?

- செ.சல்மான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism