Published:Updated:

“விருது வழங்க வேண்டும்!” - டிராஃபிக் ராமசாமி - ஜூ.வி-யுடன் நாங்கள்

“விருது வழங்க வேண்டும்!” - டிராஃபிக் ராமசாமி - ஜூ.வி-யுடன் நாங்கள்
பிரீமியம் ஸ்டோரி

னக்கும் ஜூனியர் விகடனுக்குமான உறவை, குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. ஏனென்றால், ஒட்டுமொத்த விகடன் குழுமத்துடனும் எனது நெருங்கிய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விகடன் குழுமத்தின் ‘ஜூனியர் போஸ்ட்’ பத்திரிகைதான், என்னை ‘டிராஃபிக்’ ராமசாமி என அழைத்து, ‘சமூகப் போராளி’ என அடை யாளப்படுத்தியது. என் போராட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் சென்றது. அந்த அறிமுகம், அந்தக் காலகட்டத்தில் எனக்கும் என் போராட் டங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். 

“விருது வழங்க வேண்டும்!” - டிராஃபிக் ராமசாமி - ஜூ.வி-யுடன் நாங்கள்

தவறு செய்யும் அரசியல்வாதிகள் குறித்து ஜூனியர் விகடனில் வெளிவரும் கட்டுரைகளால், அரசியல் தலைவர்கள் அரண்டு போகிறார்கள். காவல்துறைமீதும் நீதித்துறைமீதும் இல்லாத பயம், நம் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஜூனியர் விகடன் இதழிடம் இருந்தது; இருக்கிறது. ஓர் அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஜூனியர் விகடன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அதை, ஆளும் வர்க்கம் ஏற்கிறது. இல்லையென்றால், அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதை, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களும் கவனிக்கிறார்கள். அந்த அளவுக்கு ஜூ.வி கட்டுரைகள் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளன. 

நான் தனிமனிதனாக இந்தச் சமூகத்துக்காகப் போராடிய காலத்திலிருந்து இப்போதுவரை ஜூ.வி என்னுடன் தொடர்ந்து பயணிக்கிறது. ஜூ.வி மட்டும் இல்லையென்றால், இந்த டிராஃபிக் ராமசாமியை இந்தச் சமூகம் அடையாளம் கண்டிருக்காது. என் போராட்டங்களை ஜூ.வி பதிவுசெய்த விதமும், அந்த எழுத்து நடையும் பலரையும் ஈர்த்துள்ளது. அவற்றால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், பெண்கள், நடுத்தர மக்கள் இன்று சமூக அவலங்களுக்கு எதிராகத் துணிச்சலான எதிர்வினைப் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். அதைப் பார்க்கும்போது, அடிமைச் சமூகத்தில் இருந்தவர்கள் மீண்டு மேலே வருவதற்கான ஆதரவுக்கரத்தை முதன்முதலாகக் கொடுத்து உதவுவது ஜூனியர் விகடன் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“விருது வழங்க வேண்டும்!” - டிராஃபிக் ராமசாமி - ஜூ.வி-யுடன் நாங்கள்

தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக என் கருத்துக்கு ஜூ.வி முக்கியத்துவம் அளித்தது. விளம்பர பேனர்கள், விதிமுறைகள்மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் எனப் பல பிரச்னைகளைச் சமூகத்தின் முன்பும், சட்டத்தின் முன்பும் நான் கொண்டுசென்றபோது, அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஜூனியர் விகடன் கட்டுரை களை வெளியிட்டது என்னை மிகவும் கவர்ந்த, ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம். இந்த விஷயத்தில் சமூகப் போராளிகள் அனைவரும் ஜூனியர் விகடனுக்குத்தான் விருது வழங்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism