Published:Updated:

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!
பிரீமியம் ஸ்டோரி
சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

Published:Updated:
சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!
பிரீமியம் ஸ்டோரி
சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

னவரி 25-ம் தேதி அனைத்து திராவிடக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் முக்குக்கு முக்கு மைக்செட் கட்டி, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்தி, கரகர குரலில் பேசிக் கைத்தட்டலை வாங்கினர். ஆனால், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம் பாளையம் மக்கள், ‘‘மொழிப்போரில் தனது இன்னுயிரை நீத்த தியாகி வீரப்பனின் மணிமண்டபத்தைத் திறக்கவும், அவரின் சிலையை அங்கு வைக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பாழடைந்த அறையில் சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கிறது அவரது சிலை. இதற்குக் காரணம் பி.ஜே.பி-யும், இதற்கு அனுமதி தராத இன்றைய ஆட்சியாளர்களும்தான். அப்புறம் எதற்கு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்துகிறார்கள்?’’ என்று எள்ளும்கொள்ளுமாக வெடிக்கிறார்கள்.

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளில் ஒருவர், ஆசிரியர் வீரப்பன். இவர் பற்றிப் பேசிய இந்தக் கிராமத்தைச் சேர்ந்த புலவர் கருப்பையா, ‘‘ஆசிரியர் வீரப்பனுக்குச் சொந்த ஊர் இதே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்பட்டி. ஆனால், 1965-ல் மொழிப்போர் நடந்தப்ப, அவர் ஆசிரியரா எங்கள் ஊரில்தான் பணியாற்றினார். தமிழ்மொழிமீது தீராத காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தபோது, 30 வயதைக்கூட நெருங்காத அவர், மொழிக்காகத் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

11.2.1965 அன்று அதிகாலையில் வீட்டிலிருந்தே ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். பள்ளி கரும்பலகையில், ‘தமிழ் வாழ்க... இந்தி ஒழிக’ என எழுதி வைத்ததோடு, தான் இறப்பது பற்றியும், தமிழ்மொழிமீதான தன் காதல் பற்றியும் அனைவருக்கும் கடிதங்களைத் தனித்தனியே எழுதி மேஜையில் வைத்திருக்கிறார். பள்ளிக்கு முன்பு இருந்த கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தவர், பிறகு பள்ளிக்கு எதிரேயே மண்ணெண்ணெயைத் தன் உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். வலியில் சத்தம் போடக்கூட இல்லை. அருகிலி ருக்கும் சாவடியில் படுத்திருந்த ஆள்கள் ஓடிவந்து துணியைப் போட்டு அணைப்பதற்குள் முழு மையாக எரிந்து கரிக்கட்டையாகி விட்டார். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் எங்க ஊரில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த ஆரம்பிச்சோம்.

2015-ம் வருஷம், எங்க ஊரைச் சேர்ந்த புலவர் மணிமாறன் ‘இப்படி ஒரு வரலாற்று நாய கனைப் பற்றி காலகாலத்துக்கும் நம் ஊர் சந்ததியினர் நினைத்துப் பார்க்கணும்’ என்று முயற்சி எடுத்தார். ஊர் சார்பாக வீரப்பனுக்கு மணிமண்டபமும், வெண்கலச் சிலையும் அமைக்க முடிவு செஞ்சோம். அதற்காக நிதி திரட்டி, அவர் உயிர்நீத்த இடத்துக்கு அருகிலேயே நான்கு லட்ச ரூபாயில் மணிமண்டபம் அமைத்தோம். ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து அவரது மார்பளவு வெண்கலச் சிலையைச் செய்தோம். கடவூர் காவல்துறையில் இதை அமைக்க அனுமதியும் வாங்கினோம்.

2016-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனையும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை யும் வைத்துத் திறக்க ஏற்பாடு செய்தோம். ஆனால், இங்கிருந்த பி.ஜே.பி கரூர் மாவட்டப் பொதுச்செயலாளர் கைலாசம், கடவூர் ஒன்றியத் தலைவர் அண்ணாவி இருவரும் பிரச்னை செய்தாங்க. அதனால போலீஸும் தடை போட்டுடுச்சு’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை!

சிலை அமைப்புக் கமிட்டி கௌரவத் தலைவர் மேலை.பழனியப்பன், ‘‘அதன்பிறகு கரூர் கலெக்டரைப் பலமுறை பார்த்து, மணிமண்டபத்தையும், வீரப்பன் சிலையையும் திறக்க அனுமதி கேட்டோம். முதல்வர் தனிப் பிரிவுக்கும் பல முறை மனு கொடுத்துட்டோம். எதுவும் நடக்கலை. இதனால், வீரப்பன் சிலை சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கு. இதுபோன்ற வர்களின் உயிர்த் தியாகத்தில்தான் திராவிடக் கட்சிகள் வளர்ந்தி ருக்கு. ஆனால், ஒரு தியாகிக்குச் சிலை வைக்கவோ, மணிமண்டபம் அமைக்கவோ அ.தி.மு.க அரசு தடையாக இருப்பது நியாயமா?’’ என்று கேட்டார்.

தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ‘‘இதற்குத் தடையாக பி.ஜே.பி-யும், ஆளும் கட்சியும் இருப்பதாகச் சொன் னார்கள். முறைப்படி அனுமதி கிடைக்கலன்னா நீதிமன்றம் மூலமாவோ, போராட்டங்கள் நடத்தியோ அனுமதி பெறுவோம். விரைவில் மு.க.ஸ்டாலினை அழைத்து, சிலை திறப்பு விழாவை நடத்துவோம்’’ என்றார்.

பி.ஜே.பி கரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம்,  ‘‘பி.ஜே.பி மாவட்ட பொதுச் செயலாளர் கைலாசமும், ஒன்றியத்தலைவர் அண்ணாவியும் வீரப்பன் சிலை அமைக்க நிதியெல்லாம் கொடுத்திருக்காங்க. சிலையைத் திறக்க அவங்க தடையா இல்லை. இப்போதும் சிலையை அமைக்கவும், மணி மண்டபத்தைத் திறக்கவும் நாங்க எதிராக இல்லை. ஆனால், நாத்திகம் பேசுபவர்களை வைத்து வீரப்பன் சிலையைத் திறப்பதை அந்த ஊர் மக்களே விரும்பலை’’ என்றார்.

தியாகிகளுக்கு மரியாதை செலுத்த மறுப்பது, அவர்கள் செய்த உயிர்த்தியாகங்களை மறுதலிப்பது போன்றது.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism