Published:Updated:

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?
பிரீமியம் ஸ்டோரி
தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

Published:Updated:
தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?
பிரீமியம் ஸ்டோரி
தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

‘வடகிழக்கு மாநிலங்கள்’ என இரண்டே வார்த்தைகளில் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் அடையாளப்படுத்தி விடுகிறோம். உலகையே உலுக்கிப்போடும் விதமாக ஏதேனும் பெரிதாக நடந்தால் தவிர, இந்த மாநிலங்களை நாம் கவனிப்பதில்லை. குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது இந்தியாவே உற்றுக் கவனித்தது. இப்போது திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து என மூன்று மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டு, அதற்கான நடைமுறைகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. ஆனால், இந்தியர்களின் கவனம் அந்தப் பக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து, நாகாலாந்து இப்போது நம் கவனத்தைக் கலைத்திருக்கிறது! ஆம், காங்கிரஸ் உள்பட 11 முக்கியக் கட்சிகள் நாகாலாந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனப் பிரகடனம் செய்திருக்கின்றன. காஷ்மீர் போல ஒரு மோசமான சூழலை நோக்கி அந்த மாநிலம் போகிறதோ என்ற கவலையை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளது இந்த முடிவு.

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து நாகா பழங்குடி இனக்குழுக்களின் உயர்மட்ட அமைப்பான Naga Hoho, அனைத்துக் கட்சித் தலைவர்களை வரவழைத்து ஒரு கூட்டம் போட்டது. ‘நாகா மக்களுக்குத் தேர்தல் வேண்டாம், தீர்வுதான் வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவரும் மத்திய அரசு முதலில் தீர்வை அறிவிக்கட்டும்; அதன்பின் தேர்தலை நடத்தட்டும். மீறி தேர்தல் நடைபெற்றால், நாங்கள் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்’ என இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் ஒப்புக்கொண்டு, ஒரு கூட்டுப் பிரகடனம் வெளியிட்டனர். காங்கிரஸ், பி.ஜே.பி, இப்போது நாகாலாந்தை ஆளும் நாகா பீப்புள் ஃபிரன்ட், தேசியவாத காங்கிரஸ் என நாகாலாந்தில் செல்வாக்குள்ள அனைத்துக் கட்சிகளுமே இதற்கு ஒப்புக் கொண்டிருப்பதுதான் பெரும் திருப்பம். (இந்தக் கூட்டத்தில் பி.ஜே.பி சார்பில் பங்கேற்ற மாநிலத் துணைத் தலைவர் கீடோ சேமா இந்தத் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டிருந்தார். ‘கட்சித் தலைமையை ஆலோசிக்காமல் முடிவெடுத்தார்’ எனச் சொல்லி அவரை சஸ்பெண்டு செய்துள்ளது பி.ஜே.பி.)

நாகாலாந்தில் என்ன பிரச்னை? வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதக் குழுக்கள் நிறைய உண்டு. நாகாலாந்தில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ‘‘அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் என அண்டை மாநிலங்களிலும் நாகா மக்கள் ஏராளமானவர்கள் வாழ்கிறார்கள். அந்தப் பகுதிகளையெல்லாம் நாகாலாந்துடன் இணைத்து ஒரே பிரதேசமாக அறிவிக்க வேண்டும்’’ என்பது நாகா மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வைத்து பல ஆயுதக்குழுக்கள் இந்திய ராணுவத்தோடு சண்டையிட்டன. இந்தச் சூழலில், நாகாலாந்தின் பெரிய ஆயுதக்குழுவான National Socialist Council of Nagalim (NSCN-IM) என்ற அமைப்புடன் மத்திய அரசு கடந்த 97-ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் போட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

அது மெகா சீரியல்போல தொடர்ந்து கொண்டிருக்க, நரேந்திர மோடி பிரதமரானபிறகு 2015-ம் ஆண்டு மீண்டும் ஓர் ‘ஒப்பந்தச் செயல் வரைவு’ இந்த அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையே போடப்பட்டது. ‘நாகா மக்களின் தனித்து வமான வரலாற்றையும் பண்பாட்டையும் மதிக்கி றோம்’ என மத்திய அரசு சொன்னது; ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறோம்’ என NSCN-IM அமைப்பு சொன்னது. ‘‘இது பிரச்னையின் முடிவு மட்டுமல்ல; புதிய எதிர்காலத்தின் தொடக்கம்’’ எனப் பரவசத்தோடு சொன்னார் மோடி. இதைத் தவிர, இந்த ஒப்பந்தத்தில் என்ன விஷயங்கள் இருந்தன, என்ன பேசினார்கள் என்ப தெல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டன. பேச்சு வார்த்தையை இழுத்தடித்ததும், ரகசியம் காத்ததுமே இப்போது சிக்கலுக்குக் காரணமாகியுள்ளன.

இந்த விவரங்கள் வெளியானால், பல மாநிலங்களில் அமைதி குலைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. உதாரணமாக, ‘அசாமின் திமா ஹசோ மாவட்டம் விரைவில் நாகாலாந்துடன் இணைக்கப் படும்’ எனச் சில நாள்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர் சொல்ல, அங்கே பெரும் கலவரம் ஏற்பட்டு இரண்டு பேர் இறந்தார்கள்.

NSCN-IM அமைப்பின் கூட்டுத் தலைவர் ஏடெம், ‘‘நாகாலாந்து மக்களுக்குத் தேர்தல் முக்கியமல்ல, தீர்வுதான் முக்கியம். உலகிலேயே இப்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிப் பேச்சுவார்த்தை வேறெங்கும் நடக்கவில்லை. நாங்கள் பொறுமை இழந்துவிட்டோம்’’ என்கிறார். இதே தொனியில் நாகாலாந்தின் தற்போதைய முதல்வர் ஜீலியாங் பேசுவது இன்னும் ஆச்சர்யம்.

தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகள்! - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து?

‘‘இந்த முடிவை எதிர்த்து யாராவது தேர்தலில் போட்டியிட்டால், அவர்கள் நாகா மக்களுக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவார்கள்’’ என எச்சரித்துள்ளன நாகா இனக்குழுக்கள். கிட்டத் தட்ட, ‘தேர்தலில் யாராவது போட்டியிட்டால், அவர்கள் நாகாலாந்தில் இருக்க முடியாது’ என்பதே இதன் அர்த்தம். 

இதேபோன்ற ஒரு சூழல், 1998-ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது எல்லா கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க, காங்கிரஸ் மட்டும் போட்டியிட்டு 60 தொகுதிகளில் 53 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. இப்போது பி.ஜே.பி அதே பாதையில் போகிறது. ‘‘உரிய நேரத்தில் தேர்தல் நடத்துவது, அரசியல் சட்டப்படியான கடமை. அதை மத்திய அரசு செய்யும். பி.ஜே.பி தேர்தலில் போட்டியிடும்’’ என்கிறார் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

நாகாலாந்தில் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது.

- அகஸ்டஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism