காதல் பேசும் புதினங்களில் சில...

கன்னி - ஜெ. பிரான்சிஸ் கிருபா
மோகமுள் - தி. ஜானகிராமன்
மஞ்சள் வெயில் - யூமா வாசுகி
காதலின் துயரம் - கதே
காதல் தேவதை - மாஸோ
பால்யகால சகி - பஷீர்
மதில்கள் - பஷீர்
காதல் கடிதம் - பஷீர்
அஸிஸ்பே சம்பவம் - அய்பஃர் டுன்ஷ்
பட்டு - அலெசான்ட்ரோ பாரிக்கோ
செம்மணி வளையல் - அலெக்சாந்தர் குப்ரின்
வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவஸ்கி

``உங்கள் முத்தமொன்றால் என்னைச் சமாதானப்படுத்துங்கள். அது என் றெக்கைகளைச் சற்றே கத்தரித்துக் கொடுக்கட்டும். நான் தரையில் உலவ வேண்டியிருக்கிறது.”

“நீங்கள் இப்போது எட்டமுடியாத தொலைவில் இருக்கிறீர்கள். உங்கள் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நான் உங்களை இன்னும் விரும்புகிறேன். வேறெதை எதையோ எழுதினாலும் இதுதான் சாரம். நான் உங்களைக் காதலிக்கிறேன்.”

ஓவியம்: சண்முகவேல்

நெஞ்சுக்குழிக்குள் தடுமாறிக்கொண்டிருக்கும் காதலின் உணர்வுகளைப் பேசும் மஞ்சள் வெயில் நாவலின் ‘காதல்’ வரிகள் இவை. 11 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்நாவலை யூமா வாசுகி எழுதியுள்ளார். இன்றும் தமிழ் இலக்கிய வாசகர்களால் கொண்டாடப்படும் காதல் நாவல் இது. அதை எழுதிய யூமா வாசுகியிடம் அவரைக் கவர்ந்த காதல் நாவல்களைப் பற்றிக் கேட்டோம். வண்ணநிலவன் எழுதிய ‘கடல்புறத்தில்’ நாவலும், பிரான்சிஸ் கிருபா எழுதிய ‘கன்னி’ நாவலும் என்று பரிந்துரைத்தார் யூமா வாசுகி.

குலாப்: ஆனி ஜைதி

தமிழில் : பிரேம்

நாடக ஆசிரியர், நாவலாசிரியர் ஆனி ஜைதி எழுதி 2014-ம் ஆண்டு வெளிவந்த நாவல் `குலாப்.’ காதலை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு மினிமலிஸ பேய்க் கதை. பல சமயங்களில் பேசாமல் மெளனம் காக்கும் கதாபாத்திரங்களின் வழியே, காதலை, ஆணாதிக்கத்தை, மனிதர்களின் முன்தீர்மானிக்கும் தன்மையை சுருக்கமாக அதே சமயம் கூர்மையாக விளக்கிச் செல்கிறது ‘குலாப்.’ பள்ளிக்காலத்திலிருந்து ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் நேசித்த ஆருயிர் காதலிக்கு, இறுதி மரியாதை செலுத்துவதற்காக வந்த நிகுஜ் சேத்தின் ஒரு நாளை, ஒவ்வொரு சம்பவமாக, நிறைந்த நிஜமாகக் கண்முன் நிறுத்துகிறார் நாவலாசிரியர். ஆண்களின் கண்கள் வழியாகவே காதலை, தேவையைப் பேசும் வழக்கமான நடைமுறையிலிருந்து விலகி, பெண்ணின் காதலை, எதிர்பார்ப்பை, சுயமதிப்பைப் பேசியிருப்பதை நாவல் முழுவதும் உணரமுடிகிறது. ஆண்-பெண் உறவின் மீது சமூகம் உண்டாக்கிவைத்திருக்கும் கசடுகளை அதன் போக்கில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நாவல். இதை, பேராசிரியர் பிரேம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

குலாப் : ஆனி ஜைதி, தமிழில் : பிரேம், அணங்கு பதிப்பகம் விலை ரூ.125/-

தமிழ் இலக்கியத்தை இணையத்தில் இணைக்கும் ‘யூ டியூப்’ சேனல் `ஸ்ருதி டிவி’. தமிழகத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழா, எழுத்தாளர்களின் உரைகள், புத்தக விமர்சனம் என அனைத்தையும் வீடியோ கவரேஜ் செய்து ஸ்ருதி டிவி யூடியூப் சேனலில் பதிவேற்றிவிடுகிறார் கபிலன். தொலைக்காட்சித் தொடர்களுக்கு எடிட்டிங் செய்து வரும் கபிலனுக்கு, “எழுத்தாளர்களின் எழுத்தைப் போலவே குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று” என்ற எண்ணம் தோன்றவே கேமராவுடன் களமிறங்கிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கிய நிகழ்வுகளைப் பதிவுசெய்து வருகிறார் கபிலன். இதுவரை 1,800 இலக்கிய வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். இதுவரைப் பதிவுசெய்ததில் ‘கார்ல் மார்க்ஸ்’ பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் உரைதான் மெகா ஹிட்.