Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

தன் சொந்த எழுத்துகளை வெறுத்த எழுத்தாளர்கள்!

கலைஞனுக்குக் கலைப்படைப்பை வெளியிடுவது, பிரசவிப்பதைப் போன்றது. அதுவும் எழுத்தாளனுக்கு அது ஒரு தவம். ஆனால், தன் சொந்தப் படைப்பையே வெளியிட்ட பிறகு புரிதலில் மற்றும் நம்பிக்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், புத்தகம் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கம் என்று பல காரணங்களால் தாங்கள் எழுதிய புத்தகத்தையே வெறுத்த எழுத்தாளர்களும் உண்டு.

டபிள்யூ. ஹெச். ஆடென் என்கிற கவிஞர் அவர் முன்பெழுதிய சில கவிதைகளை வெறுத்து, பல காலத்திற்கு எந்தப் பதிப்பகத்திற்கும் அதனை மறுபதிப்பு செய்ய அனுமதி தரவில்லையாம்! பிறகு ரொம்பவே சிரமப்பட்டு, “ஆடென் இந்த ஐந்து கவிதைகளையும் குப்பையாக நினைக்கிறார். இவற்றை எழுதியதற்காக வெட்கப்படுகிறார்” என்ற குறிப்புடனே அந்தக் கவிதைகளை வெளியிட்டிருக்கிறது ஒரு வெளியீட்டு நிறுவனம்!

புக்மார்க்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எழுத்தாளர் ஜே.ஜி. பால்லர்ட், தன் நாவலில் க்ளிஷேவான எதுவும் இருக்கக்கூடாது என்று விரும்பினார். ஆனால், பொருளாதார நெருக்கடியால், க்ளிஷேக்களின் கலவையாய், நாள் ஒன்றுக்கு 6,000 வார்த்தைகள் டார்கெட் வைத்து, The Wind from Nowhere புத்தகத்தை 10 நாள்களில் எழுதித்தீர்த்திருக்கிறார். ஆனால், அதன் பிறகு தான் சாகும் வரை, இரண்டாவதாக எழுதிய The Drowned World-ஐயே தன்னுடைய முதல் நாவலாகக் குறிப்பிட்டார்.

இயான் ஃப்ளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் தொடரில், The Spy Who Loved Me புத்தகம் மாறுபட்டது. ஒரு பெண் நரேட் செய்ய, பாதிக்கு மேல்தான் நாயகன் ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘குதிப்பார்’. ’எக்ஸ்பிரிமெண்ட்’ கொஞ்சம் எசக்கு பிசக்காகப் போக, ‘காண்டான’ வாசகர்கள், திட்டித் தீர்த்தனர். இயன் ‘அப்ரூவராக மாறி’ அந்தப் புத்தகத்தை மறுபதிப்பு செய்யப்போவதில்லை என்று அறிவித்ததுடன் இப்புத்தகம் திரைப்படமாக்கப்பட்டபோது கதையின் தலைப்பைப் மட்டுமே பயன்படுத்த அனுமதித்தார்.

நூல் அறிமுகம்  மெர்சோ: மறுவிசாரணை காமெல் தாவுத் | க்ரியா | ரூ. 195

அந்நியன் (L’Etranger) ஆல்பெர் காம்யு எழுதி 1942-ல் வெளிவந்த மிக முக்கியமான பிரெஞ்சு நாவல். ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் விற்கப்பட்ட இந்த நாவல் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது எழுதப்பட்டது.

புக்மார்க்

அந்த நாவலின் தொடர்ச்சியாகவும், இன்னொரு பார்வையாகவும் ‘மெர்சோ: மறுவிசாரணை’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத். ‘அந்நியன் நாவலில் பிரெஞ்சுக்கார மெர்சோவால் கொல்லப்பட்ட அராபியன், 25 இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவனுக்குப் பெயர் இருக்காது. அநாமதேயனாக இருந்தான்’ என்பதைக் குறிப்பிட்டு இந்நாவல் ஆரம்பிக்கிறது. கொல்லப்பட்ட அந்த அராபியனின் தம்பிதான்,  இந்நாவலின் கதைசொல்லி. பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்திலிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்த 1962-ல் கதை நடக்கிறது என்பதே மிக முக்கியமான ஒரு விஷயம். வெளியிடப்பட்ட நாளிலிருந்து பிரெஞ்சு இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நாவல் இது. 2013-ல் வெளியான இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை இந்த ஆண்டு க்ரியா வெளியிட்டிருக்கிறது. நேரடியாக பிரெஞ்சிலிருந்து வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார். இது ஸ்ரீராமின் பதினொன்றாவது மொழிபெயர்ப்பு.

சிவகுமாருக்கு பதில் ஸ்வேதா!

எளிமையும் சுவாரஸ்யமும் கூடிய கதைகளை, சிறுவர்களுக்கு எழுதுவதென்பது எளிதானதல்ல. குழந்தைமையையும் தவறவிட்டுவிடக்கூடாது. சிறுவர்களே தனக்குப் பிடிக்கும் விதமாகக் கதைகளை எழுதினால் அவை சிறுவர் இலக்கியத்துக்கு வலிமைகூட்டும். அவ்விதம் வலிமைகூட்டும் நபராக இணைந்திருக்கிறார் எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரின் மகள் ஸ்வேதா சிவசெல்வி. Festival of Fear என்று அவர் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை, ‘பயங்களின் திருவிழா’ என, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் உதயசங்கர்.

புக்மார்க்

சிறுவர்களுக்கு மிகப் பிடித்த த்ரில்லர் நாவல். ஸ்டேசி, ஜார்ஜ், எல்லா மற்றும் அவரின் நண்பர்களும் பேய் டாஸ்க்கில் சிக்கிக்கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் புதிய திருப்பங்களும் பயத்தையும் சுவாரஸ்யத்தையும் இணைத்து எழுதியிருக்கிறார் ஸ்வேதா. சிறுவர் நாவலில் அதிகமான கதாபாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா எண்ணற்ற கதாபாத்திரங்கள், சம்பவங்களைக் கொண்டுவந்திருந்தாலும் ஓர் இடத்திலும் குழப்பம்  வரவில்லை. ஃபேண்டஸியான கதை என்றபோதும், இயன்ற அளவுக்கான யதார்த்தச் சூழல்களைப் பிணைத்திருப்பது, அதிலும் கதையை ஒரு விளையாட்டின் நிறைவாக முடித்திருப்பது தேர்ந்த கதைசொல்லியாக மாறுவார் என்பதன் அடையாளம்.

புக்மார்க்

முன்னுரையில், தோழியுடன் கதை எழுதிய தருணத்தை அவர் சொல்லும்போது, “எப்போதெல்லாம் நாங்கள் கதை எழுத ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்களையே மறந்து மகிழ்ச்சியில் திளைத்தோம்’ என்றும், ‘உண்மையில் என் அப்பா என்ன செய்துகொண்டிருந்தாள், ஏன் அவர் எழுதுவதில் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்’ என்றும் குறிப்பிடுகிறார். மறைந்த க.சீ.சிவக்குமார் தன் மகளின் எழுத்துகளோடு இனி உரையாடுவார் எனும் நம்பிக்கையை அளிக்கிறது இவ்வரிகள். வருக!

புக்மார்க்

ஓவியம்: சண்முகவேல்

`கடல்புரத்தில்’, `ரெயினீஸ் ஐயர் தெரு’ போன்ற கிளாசிக் நாவல்களுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் வண்ணநிலவன். சிறு இடைவேளைக்குப் பிறகு,  தனது புதிய நாவல் ஒன்றின் மூலம் ரீ-என்டரி கொடுக்கிறார்.  நக்கசல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜும்தார்  1960 காலகட்டத்தில் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அதை மையமாக வைத்து வண்ணநிலவன் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் 16 அத்தியாயங்கள் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது என்பது எக்ஸ்ட்ரா தகவல். “தற்போதுள்ள இளம் எழுத்தாளர்களில் எஸ்.செந்தில்குமார், பா.வெங்கடேசன், நரன் ஆகியோர் நன்றாக எழுதுகிறார்கள்” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணநிலவனிடம் எழுத்துலகில் ஹிட் அடிக்க ஐடியா கேட்டதற்கு “வெளிநாட்டுப் படைப்புகளை நிறைய வாசிங்க, அப்போதான் பல வடிவங்களைத் தெரிஞ்சிகிட்டு இன்னும் சிறப்பான  படைப்புகளை உருவாக்க முடியும்” என டிப்ஸ் கொடுக்கிறார்.