ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்!

இதோ மறுபடியும்
ஏமாற்றம் பிறந்திருக்கிறது
ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்
அடுத்த முறை நம்பிக்கை பிறக்கும்
அதற்காக இப்போது பிறந்திருக்கும்
ஏமாற்றத்தைக் கொண்டாடாமல் விடுவதா
நம்பிக்கை பொய்க்கும்
ஏமாற்றம் பொய்க்குமா?
நம்பிக்கையைப்போல
ஏமாற்றம் எப்போதும் துரோகம் பண்ணாது
அதற்காகவேனும் ஏமாற்றத்தைக் கொண்டாடுங்கள்
மிக மோசமான பரிசைக்
கொடுக்க நினைத்தவன் ஏமாந்து நிற்கட்டும்
அவனுக்கும் சேர்த்து ஏமாற்றத்தைக் கொண்டாடுவோம்

- விகடபாரதி

கைக்குழந்தை!

கூட்ட நெருக்கடி பேருந்தில்
கேளாமலேயே எழுந்து
தன் இருக்கையை விட்டுக்கொடுத்து
நின்றுகொள்கிறார்கள்.
வெகுநீள
மருத்துவமனை வரிசையில்
காத்திருக்காமல் முந்திச் செல்ல
கருணை காட்டுகிறார்கள்.
தள்ளுவண்டி கடைக்காரர்கள்
தாமதப்படுத்தாமல்
வழமையினும் கூடுதலான
சுறுசுறுப்போடு
பார்சல் கட்டித் தருகிறார்கள்.
கணநேரத்தில் அனைவரையும்
கர்ணவள்ளல் ஆக்கிட
கைக்குழந்தை ஒன்று
போதுமானதாய் இருக்கிறது.

- தமிழ்த்தென்றல்

பிரபஞ்சத்தை வழிநடத்துபவள்!

நிலையத்தின் இரண்டாம் நடைமேடையில் மூச்சிரைக்க வந்து
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்
ரயிலை விட்டு
மெள்ள இறங்குகிறாள் அந்த மூதாட்டி
துழாவும் கரங்களில் அகப்படும்
சில கரங்கள் அவளை நிராகரிப்புக்குள்ளாக்குகிறது
இறுகப் பற்றி வழிநடத்தி
சேருமிடம் சேர்க்க விழையும்
அக்கணத்தின் மனதைப் புறக்கணித்து
நகர்மயமாதலின் அலுவல் நிமித்தமாய்
சராசரி மனிதனைப்போல் வேகவேகமாய்
கடக்கையில்
நானுட்பட அத்தனை மாந்தர்களும்
பார்வை மலடாகிப்போக
தன்னிரு கரங்களால் இப்பிரபஞ்சத்தை
அவள்
வழிநடத்திக்கொண்டிருக்கிறாள்.

- கோவிந்த் பகவான்

ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்!

இதோ மறுபடியும்
ஏமாற்றம் பிறந்திருக்கிறது
ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்
அடுத்த முறை நம்பிக்கை பிறக்கும்
அதற்காக இப்போது பிறந்திருக்கும்
ஏமாற்றத்தைக் கொண்டாடாமல் விடுவதா
நம்பிக்கை பொய்க்கும்
ஏமாற்றம் பொய்க்குமா?
நம்பிக்கையைப்போல
ஏமாற்றம் எப்போதும் துரோகம் பண்ணாது
அதற்காகவேனும் ஏமாற்றத்தைக் கொண்டாடுங்கள்
மிக மோசமான பரிசைக்
கொடுக்க நினைத்தவன் ஏமாந்து நிற்கட்டும்
அவனுக்கும் சேர்த்து ஏமாற்றத்தைக் கொண்டாடுவோம்

- விகடபாரதி

கைக்குழந்தை!

கூட்ட நெருக்கடி பேருந்தில்
கேளாமலேயே எழுந்து
தன் இருக்கையை விட்டுக்கொடுத்து
நின்றுகொள்கிறார்கள்.
வெகுநீள
மருத்துவமனை வரிசையில்
காத்திருக்காமல் முந்திச் செல்ல
கருணை காட்டுகிறார்கள்.
தள்ளுவண்டி கடைக்காரர்கள்
தாமதப்படுத்தாமல்
வழமையினும் கூடுதலான
சுறுசுறுப்போடு
பார்சல் கட்டித் தருகிறார்கள்.
கணநேரத்தில் அனைவரையும்
கர்ணவள்ளல் ஆக்கிட
கைக்குழந்தை ஒன்று
போதுமானதாய் இருக்கிறது.

- தமிழ்த்தென்றல்

பிரபஞ்சத்தை வழிநடத்துபவள்!

நிலையத்தின் இரண்டாம் நடைமேடையில் மூச்சிரைக்க வந்து
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்
ரயிலை விட்டு
மெள்ள இறங்குகிறாள் அந்த மூதாட்டி
துழாவும் கரங்களில் அகப்படும்
சில கரங்கள் அவளை நிராகரிப்புக்குள்ளாக்குகிறது
இறுகப் பற்றி வழிநடத்தி
சேருமிடம் சேர்க்க விழையும்
அக்கணத்தின் மனதைப் புறக்கணித்து
நகர்மயமாதலின் அலுவல் நிமித்தமாய்
சராசரி மனிதனைப்போல் வேகவேகமாய்
கடக்கையில்
நானுட்பட அத்தனை மாந்தர்களும்
பார்வை மலடாகிப்போக
தன்னிரு கரங்களால் இப்பிரபஞ்சத்தை
அவள்
வழிநடத்திக்கொண்டிருக்கிறாள்.

- கோவிந்த் பகவான்