சென்னைப் பெருநகரப் பகுதி (Chennai Metropolitan Area) மற்றும் சென்னை மாவட்டம் ஆகிய இரண்டையும் விரிவாக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய சென்னைப் பெருநகரப் பகுதி என்பது சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள 1,189 ச.கி.மீ பரப்பளவு மட்டும்தான். இதனை இப்போது, 8,878 ச.கி.மீ பரப்பளவாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி சென்னை என்பது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி பகுதிகளும் சேர்ந்ததாக விரிவடைந்துள்ளது. இதன்படி, சென்னையில் 1,709 கிராமங்கள் புதிதாக இணையவுள்ளன. இதனால், இந்தியாவில் டெல்லி பெருநகரப் பகுதிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய பெருநகரப் பகுதியாக சென்னை ஆகியுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) முன்னாள் தலைமைத் திட்ட அதிகாரி தூயவனிடம் பேசினோம். ‘‘ சென்னையைச் சுற்றி விவசாய நிலங்கள் மாற்றம் அடைந்து, நகர்மயமாதல் அதிகரித்துள்ளது. அதனால், பெருநகரப் பகுதியை விரிவாக்கம் செய்தால், இன்னும் முறையாகத் திட்டமிட முடியும். மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் மானியம் கிடைக்கும். பாதாளச் சாக்கடை வசதிகள், போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சி.எம்.டி.ஏ அப்ரூவல் வாங்குவதற்கு, தனித்தனியாக மண்டல அலுவலகங்கள் அமைக்க வேண்டும். பெருநகரப் பகுதியின் பரப்பை அதிகரிக்கும்போது, நிலத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், இது மக்களுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும். அதேநேரத்தில் பத்திரப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கும். அரசுக்கு வருமானம் அதிகம் கிடைக்கும்” என்றார்.

சி.எம்.டி.ஏ-வின் முன்னாள் திட்ட அதிகாரியும், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் உரிமையாளருமான குமார், “எதற்காக சென்னை பெருநகரப் பகுதியின் பரப்பளவை அதிகரிக்கின்றனர் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. இந்த விஷயத்தில், ஆய்வு செய்து அரசு முடிவெடுக்கவில்லை. சென்னையைச் சுற்றி, கட்டமைப்பை மேம்படுத்த நிறைய இடம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், மக்கள் அடர்த்தி எவ்வளவு இருக்க வேண்டும், விவசாய நிலப்பகுதி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். இதை முறையாகத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்” என்றார்.

சென்னை மாவட்டத்தின் எல்லைகளையும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. இப்போது, 178 ச.கி.மீ ஆக இருக்கும் சென்னை மாவட்டம், 426 ச.கி.மீ ஆக விரிவுபடுத்தப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்படும் மாவட்டத்தில், 122 வருவாய் கிராமங்கள் இடம்பெறுகின்றன. காஞ்சிபுரத்தில் 67 கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 55 கிராமங்களும் சென்னை மாவட்டத்தில் இணைய உள்ளன. வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று வருவாய் மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் பேசினோம். “சென்னை மாவட்டத்தை அதிகரிப்பது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சம்பாதிப்பதற்கு மட்டும்தான் உதவும். இப்போதைய சென்னை மாவட்டத்தையே இவர்களால் நிர்வாகம் செய்ய முடியவில்லை. சென்னை மாவட்டத்தில், பசுமைப் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இது, பெரும் ஆபத்தை விளைவிக்கும். நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புப் பகுதிகளை அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை. மாவட்டத்தை அதிகரிக்கும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கேள்வி வரும். சென்னை மாவட்டத்தை நோக்கி மக்கள் வருவார்கள். அது, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நகர் வளர்வதற்குதான் வழிவகுக்கும். எனவே, மக்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

ஸ்மார்ட் சிட்டியின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில், நகருக்கு வெளியேயும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தை விரிவாக்கம் செய்வதால், அதுபோல திட்டமிட வாய்ப்புகள் இருக்கின்றன. திட்டமிட்டு சென்னை மாவட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, மக்களுக்குத் தரமான வாழ்க்கை கிடைக்கும். அதற்குச் சரியான தருணம் இதுதான்” என்றார் சுருக்கமாக.

தமிழக வருவாய்த் துறைச் செயலாளர் சந்திரமோகனிடம் பேசினோம். “சென்னை மாவட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை வெளியிட்டுள்ளோம். எந்தெந்தப் பகுதிகளைச் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களையெல்லாம் ஆலோசித்து வருகிறோம். தற்போதைய நிலையில், முழுமையான தகவல்களைத் தர இயலாது” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி
படம்: ப.சரவணக்குமார்

கருத்து தெரிவிக்கலாம்!

சென்னை பெருநகரப் பகுதி அதிகரிக்கப்படுவது குறித்து தங்கள் கருத்துகளை அரசுக்குப் பொதுமக்கள் தெரிவிக்கலாம். கருத்துகளை, அரசின் முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600009 என்ற முகவரிக்கு மார்ச் 20-ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும்.