கோட்டையிலிருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘நான் சொன்னதுபோலவே நடந்ததா?” என்றபடி சிரித்தார். ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடியே கடந்த இதழின் அட்டைப் படத்தை எடுத்துக் காட்டினோம்.

‘‘ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி மறுத்த நிலையில், அவசர அவசரமாக இவர்களே திறந்துவைத்து விட்டார்கள்!”

‘‘இதைத்தான் நீர் சொல்லியிருந்தீரே!”

‘‘ஆமாம்! எப்படியாவது மோடியை வரவைத்து விட பகீரத முயற்சிகளை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் செய்தார்கள். ஆனால் அவர்களது ஆசையில் மொத்தமாக மண் விழுந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களாகப் பிரதமரை வரவைப்பதில் குறியாக இருந்தார் எடப்பாடி. 2017 மே 24-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா படத்திறப்பு விழாவிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொள்ளுமாறு’ அழைப்பு விடுத்தார். 2017 ஜூலையில் தேதி கொடுக்குமாறு கேட்டார். ஜூலையில் பிரதமர் தேதி தரவில்லை. பிறகு, டிசம்பரில் தேதி கேட்டார்கள். அதுவும் நடக்க வில்லை. ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரவழைத்து அதையொட்டி ஜெயலலிதா படத்தைத் திறந்து வைக்கக் கேட்டார்கள். அதற்கும் பிரதமர் தரப்பிலிருந்து பதில் இல்லை. இம்மாத இறுதியில் பிரதமர் மோடி, புதுச்சேரி வருவது உறுதியாகி உள்ளது. அந்த நாளிலாவது அவரை சென்னைக்கு அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தார்கள். இலவு காத்த கிளி கதையானதால், ஜெயலலிதா படத்திறப்பை சபாநாயகரை வைத்தே முடித்து விட்டார்கள். அதுவும் மோடி, புதுவை வருவதற்கு முன்பே அந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கிறார்கள்.’’

‘‘பிரதமர் புதுச்சேரி வந்து செல்லும் நாள் வரைகூட ஏன் காத்திருக்கவில்லை?”

‘‘பக்கோடா வேலைவாய்ப்பு கமென்ட்டை வைத்து மோடியை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நேரத்தில், எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் மோடி. ‘ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைப்பதில் தவறு இல்லை’ என்று தமிழக பி.ஜே.பி கருத்து கூறினாலும், டெல்லி பி.ஜே.பி இதனை ரசிக்கவில்லை என்கிறார்கள். இந்த விரிசல் போகப் போக இன்னும் பெரிதாகும்” என்ற கழுகார், ரஜினி மேட்டருக்கு வந்தார். ‘‘ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் நியமன விஷயத்தில் திடீர் சுணக்கம் ஏற்படுள்ளதாக மன்றத்தினர் சொல்கிறார்கள்” என்றார்.

‘‘ஏன்?”

‘‘ரஜினி மன்ற பொறுப்பாளர் சுதாகர், ரஜினியின் அலுவலகத்தைச் சேர்ந்த ராஜு மகாலிங்கம் உள்ளிட்ட சிலர் மாவட்ட வாரியாக டூர் சென்றனர். இதைத் தொடர்ந்து வேலூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இப்படி நியமிக்கப்பட்டவர்களைப் பற்றி பதவி கிடைக்காதவர்கள் ஏராளமான புகார்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பேரம்... பதவி விற்பனை... பணப் பரிமாற்றம் என்று தினமும் ரஜினி வீட்டுக்கு போன் அழைப்புகள் பறந்தன. குழம்பிப்போனார் ரஜினி. தனக்கு அருகில் இருப்பவர் கள் பற்றி வரும் புகார்களை யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனார்...”

‘‘ஓஹோ!”

‘‘இந்த நிலையில், ‘கோவை மாவட்டத்துக்குச் செயலாளராக யார் வரப்போகிறார் என்று எனக்குத் தெரியும். சென்னையில் மன்ற முக்கியஸ்தரை அவர் கவனித்துவிட்டார். இதுபற்றிய விவரங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’ என்று மன்றத்தின் பழைய நிர்வாகி ஒருவர் செய்தியை உலா விட... பதறிப் போனார்கள். அவரிடம் அன்பாகப் பேசி, அப்படி எதுவும் வராமல் பார்த்துக்கொண்டனர். ‘அவர் என்ன சொல்ல வந்தார்?’ என்பது இன்று வரை சஸ்பென்ஸாக இருக்கிறது. இதேபோல், சில இடங்களில் வசதியானவர்கள் தங்களுக்குப் பதவி வாங்கத் திட்டமிட்டு, பரிசுகளும் பணமும் கொடுத்து உறுப்பினர்களைச் சேர்ப்பதாகப் புகார் கிளம்பியது. கிருஷ்ணகிரி பிரமுகர் பெயர் இதில் அடிபட்டது. இதையெல்லாம் தாண்டி ரஜினியை ஷாக் அடைய வைத்த விஷயம் ஒன்று உண்டு...”

‘‘அது என்ன?”

‘‘அவரின் குடும்பத்தினருக்கு நெருக்கம் என்று சொல்லிச் சிலர் பந்தா செய்வதாகக் கேள்விப் பட்டார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் பெங்களூரில் இருக்கிறார். கர்நாடக மாநில ரஜினி மன்றத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் சந்திரகாந்த். இவரின் தம்பி சூரியகாந்த். சத்யநாராயணாவின் மகளை சந்திரகாந்த் திருமணம் செய்து கொண்டார். இந்த வகையில், ரஜினியின் மருமகன் ஆகிவிட்டார் அவர். ரஜினியின் அண்ணன் எங்கு சென்றாலும் சந்திரகாந்த், சூரியகாந்த் ஆகிய இருவரும் உடன் செல்வதுண்டு. இதைக்கேட்டு அங்குள்ள ரஜினி மன்றப் பிரமுகர்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள். ‘இந்த சகோதரர்கள் மனது வைத்தால்தான் பதவிக்கு வர முடியும்’ என்று கர்நாடகா எல்லையோர தமிழ்நாட்டு மாவட்டக்காரர்கள் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே புகாராகவும் ரஜினிக்குப் போனது.”

‘‘தூத்துக்குடியிலும் ஏதோ பிரச்னை என்றார்களே?”

‘‘அங்கே புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப் பட்டிருப்பவர் ஸ்டாலின். இவர் நாக்பூரில் பிசினஸ் செய்கிறார். இவரை போனில் பிடிக்கவே முடியாது. எப்போதும் தனியார் செக்யூரிட்டி பாதுகாப்புடன் வலம் வருகிறவர். ‘அப்படிப் பட்டவருக்கு எப்படி பதவி கொடுக்கலாம்?’ என்பது மாவட்டத்தின் ஒரு சாரரின் குற்றச்சாட்டு. அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் மன்ற நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடாத இரண்டு பேருக்குப் பதவி தரப்பட்டுள்ளதாம். இதுவும் பூசலை உண்டாக்கிவிட்டது.”

‘‘ரஜினி ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பாரே?”

‘‘ஆமாம்! நிர்வாகிகள் சென்ற மாவட்ட டூரை நிறுத்தச் சொல்லிவிட்டார். மாவட்டத்துக்கு சுமார் ஆயிரம் பேர் வீதம் சென்னைக்கு விரைவில் அழைக்கப்படவுள்ளனர். மாவட்ட அளவில் ஆறு பதவிகள். ஒரு பதவிக்கு ஐந்து பேரை சிபாரிசு செய்யச் சொல்லி பழைய நிர்வாகிகளிடம் லிஸ்ட் வாங்கு கிறார்கள். இந்த லிஸ்ட்டை அலசி ஆராய்ந்து சென்னைக் கூட்டத்தில் இறுதிச் சுற்று பெயர்களை அறிவிக்கப்போகிறார்கள். ஆதரிப்பவர்கள் எத்தனை பேர், எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் என்று கை தூக்கச் சொல்லப்போகிறார்கள். அதன் அடிப்படையில் நியமனம் இருக்குமாம்.”

‘‘பார்ப்போம்.”

‘‘33 வருடங்களாக திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளராக இருந்த சாகுல் ஹமீது இறந்துவிட்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். அவர் கோமா நிலைக்குப் போனதைக் கேள்விப்பட்ட ரஜினி, சென்னை யிலிருந்து போனில் அவரின் மனைவி, மகனிடம் பேசி ஆறுதல் சொன்னார். சாகுலின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மன்ற முக்கியஸ்தர்கள் திரண்டு வந்தனர். ரஜினி வருவார் என்று நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். வரவில்லை. மாநில மன்றப் பொறுப்பாளர் சுதாகரும் வரவில்லை. ரஜினியின் இரங்கல் கடிதத்தை யாரோ ஒருவர் எடுத்து வந்தாராம். ‘சுதாகர் வர இஷ்டமில்லாமல், யாரோ ஓர் அலுவலகப் பணியாளரிடம் கொடுத்தனுப்பிவிட்டார்’ என மன்றப் பிரமுகர்கள் குமுறுகிறார்கள்.’’

‘‘கட்சி ஆரம்பிப்பதற்குள் இவ்வளவு பிரச்னைகளா... ரஜினி இதை எப்படித் தாங்குவார்?” என்றோம்.

சிரித்தபடி பறந்தார் கழுகார்.

படம்: கே.ஜெரோம்

பி.ஆர்.ஓ-வாக இருந்த தினகரனின் கோஷ்டியைச் சேர்ந்தவர் களின் உறவினர்கள் இருவர் திடீரென்று மாற்றப்பட்டுள்ளனர். ஒருவர், கலை நேசன். தலைமைச்செயலக பி.ஆர்.ஓ-வாக இருந்த இவர், முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜனின் தம்பி. இன்னொருவர், கலைச்செல்வன். வள்ளுவர் கோட்டத்தின் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர். இவர், தங்க தமிழ்ச்செல்வனின் தம்பி.

தமிழக கவர்னர் அலுவலக பி.ஆர்.ஓ-வாக இருந்தவர் ஹேமநாதன். ஓய்வுக்குப் பிறகு அவருக்கு மூன்று மாதங்கள் பதவி நீட்டிப்பு தரப்பட்டது. ஆனால், எட்டாவது நாளே அதை ரத்துசெய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அந்த இடத்தில் சரவணன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பெயரை டிக் செய்தவர், கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.

உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் தினகரன் கோஷ்டி பிஸியாகிவிட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செந்தமிழனை நிறுத்தப்போவதாகப் பேச்சு. இதேபோல், எடப்பாடி கோஷ்டி சார்பில் பழைய மேயர் சைதை துரைசாமியை நிறுத்தப்போகிறார்கள்.

காங்கிரஸ்காரர்களில் சிலர், மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரின் புகைப்படத்தைச் சட்டை பாக்கெட்டில் வைத்தபடிவலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். கழக கலாசாரம் இப்போது கதர் கலாசாரம் ஆகியுள்ளது.