கொங்கனியிலிருந்து முதல் நாவல்

கோவா மக்களால் பரவலாகப் பேசப்படும் கொங்கனி மொழியில் சிறந்த நாவல்களும் சிறுகதைகளும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. முதன்முறையாகக் கொங்கனி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது ஒரு நாவல். எழுத்தாளர் இரா.தமிழ்ச்செல்வன் அந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தனிமனித மனத்துயரைப் பற்றிப் பேசும் அந்த நாவலின் பெயர் ‘யார் அறிவாரோ.’ சரஸ்வதி சம்மான் விருதுபெற்ற கொங்கனி எழுத்தாளர் மஹாபளேஷ்வர் ஸைல் இந்த நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலை மொழிபெயர்த்த தமிழ்ச்செல்வன் புனேவில் ஒரு வருடம் ‘கொங்கனி’ படித்துள்ளார். ``என் கொங்கனி ஆசிரியர்தான் இந்த எழுத்தாளரோட நாவலப் பத்தி சொன்னாரு, இதுக்கு முன்னாடி சிறுகதைகள் கொஞ்சம் கொங்கனியிலிருந்து தமிழ்ல மொழிபெயர்த்திருக்கேன்” எனச் சொல்லும் தமிழ்ச்செல்வனுக்குச் சொந்த ஊர் கோவை.

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

சாதி சார்ந்த பொதுவான அனுமானங்களை நம்பிக்கைகளைக் கருத்தியல் சூழலில் ஏராளமாகப் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழகத்தில் சாதி எவ்வாறு வடிவம்கொண்டிருந்தது; இயக்கம்கொண்டிருந்தது என்பதை ஆய்வுப்புலத்தில் மிகுந்த முக்கியத்துவம்கொண்ட கல்வெட்டு ஆதாரங்களைக்கொண்டு முன்வைக்கிறார்கள் நூலின் ஆசிரியர்கள். சோழர்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் ‘தீண்டாச்சேரி’ குறித்த பதிவுகள், பெரியபுராணத்திலுள்ள நந்தனார் பற்றிய விவரிப்புகள், கல்வெட்டுகளில் சாதிவாரியாக முக்கியத்துவம் பெற்றிருந்த காலப்பட்டியல் போன்றவை ஆய்வாளர்களின் உழைப்பை வெளிப்படுத்துகின்றன. 11ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய போர்ச்சூழல், நிலையற்ற அரசியல்தன்மைகள் போன்றவற்றால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட நேரடியான, மறைமுகமான பாதிப்புகள், 15ம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட ‘உழவர் கிளர்ச்சி’ என விரிந்து செல்லும் இந்த நூல், இன்னும் செல்ல வேண்டிய ஆய்வுப் பாதைகள் குறித்த பெருமூச்சை உண்டாக்குகிறது.

நொபொரு கராஷிமா - எ.சுப்பராயலு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. பக்கம்: 84 விலை: 70

கருக்கு 25

சமீபத்தில் தமிழ் நாவல் ஒன்றுக்கு 25வது ஆண்டு விழா கொண்டாடியிருக்கிறார்கள் அதன் வாசகர்கள். அந்த நாவல் எழுத்தாளர் பாமா 1993ல் எழுதிய ‘கருக்கு.’ தமிழில் மட்டும் அல்லாது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தை ஈர்த்த நாவல் இது. தமிழில் ஒரு பெண் எழுத்தாளரின் பார்வையில் தலித் ஒடுக்குமுறை பற்றிப் பேசிய முதல் நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘இன்றும் இந்த நாவல் பேசப்படுகிறதென்றால், என்ன காரணத்திற்காக அந்த நாவல் எழுதப்பட்டதோ அந்தத் தேவை நிறைவேறவில்லை என்று அர்த்தம்!’’ என்கிறார் பாமா. ஆசிரியராகப் பணியாற்றியபோது கற்றல், கற்பித்தலில் தனக்கு ஏற்பட்ட அனுபவம், தன் மாணவர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து தற்போது புதிய நாவலை எழுதிவருகிறார் பாமா. சமீபத்தில் வாசித்ததில் தன்னை மிகவும் பாதித்த நாவல் கரன் கார்க்கி எழுதிய ‘கருப்பர் நகரம்’ என்கிறார்.

சட்டமன்றத்தில் இலக்கியம்

கேரள பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை முழுக்கத் திட்டங்கள் இருந்ததோ இல்லையோ ஏராளமான இலக்கியம் இருந்தது. அதிரடியான இலக்கிய ரெஃபரென்ஸுகளால் சட்டமன்றத்தையே இலக்கியக் கூட்டமாக மாற்றியிருக்கிறார் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக். ‘‘கடலம்மனின் பிள்ளைகள் மீண்டும் எழுவார்கள்’’ என்று கவிஞர் சுகதாகுமாரியின் கவிதையை மேற்கோள்காட்டி ஒக்கிப்புயல் பாதிப்புகள் பற்றிக் குறிப்பிட்டார். புதிய உணவுத்திட்டத்தைப் பற்றிச் சொல்லும் போது மலையாள எழுத்தாளர் லலிதாம்பிக்கா அந்தர்ஜனத்தின் ‘விதவாவிவாஹம்’ நாவலில் வரும் பாத்திரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

வடிவான நூல்கள்!

சிறுவர்களுக்கான நூல்கள் தற்போது நிறையவே வருகின்றன என்றாலும் அவை குழந்தைகளைக் கவரும் வகையில் வருவதில்லை. அதனால்தான் நூல்களின் வடிவங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறது, குழந்தைகள் நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் வானம் பதிப்பகம்.

‘மாயக்கண்ணாடி’ என்கிற நூலில் அட்டையிலேயே சிறு கண்ணாடியைப் பதித்து வெளியிட்டிருந்தனர். அதற்குப் பிறகு ஆல்பம் போன்ற வடிவத்தில் `வித்தைக்காரச் சிறுமி’ எனும் நூலையும், ஸ்பைரல் பைண்டிங் போல இருக்கும் ஸ்வைரோ வடிவத்தில் `மரப்பாச்சி ரகசியம்’ நூலையும், எல்லா நூல்களையும் மெகாசைஸிலும் ஒரு பதிப்பு என விதவிதமான வடிவங்களில் நூல்களை வெளியிட்டு வியக்கவைக்கிறது இப்பதிப்பகம். “எங்களின் இந்த வடிவ மாற்ற முயற்சி எல்லாமே குழந்தைகளை வாசிக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகவே. எழுத்துக்கூட்டிப் படிக்கும் குழந்தைகளிலிருந்து திரில் கதைகள் படிக்கும் சிறுவர்கள் வரை எல்லோரையும் வாசிக்கப் பழக்க வேண்டும்” என்கிறார் வானம் மணிகண்டன்.