Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மானுட வளர்ச்சியின் பரிணாமத்திலும் பரிமாணத்திலும் பெண்கள் செலுத்தியிருக்கும் உழைப்பு மகத்தானது. மொழி, தொழில், கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் என மனித நாகரிகத்தின் வளர்ச்சி

தலையங்கம்

நிலைகள் பெண்ணிலிருந்தே உண்டாயின. நவீன அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளின் வழியே பெண்களுக்கான பல்வேறு புதிய கதவுகள் திறந்திருந்தாலும், காலந்தோறும் தொடரும் அடிப்படையான பால்நிலைப் பாகுபாடுகள், கலாசாரக் கட்டுப்பாடுகள் போன்றவை இன்னும் தொடரவே செய்கின்றன. மார்ச் 8-ல் மகளிர் தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். எல்லா தினங்களையும்போல சம்பிரதாயமாகக் கடந்து செல்லக்கூடிய தினம் அல்ல இது. பெண்ணியப் பார்வையோடு, பல முக்கியமான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், நம்மை நாமே உரசிப் பார்த்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. பெண்கள்மீதான உடல்ரீதியிலான தாக்குதல்களும் கருத்தியல்ரீதியிலான தாக்குதல்களும் தொடரும் சூழலில் நம் சிந்தனைமுறைகளை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

தலையங்கம்


தமிழ்ச்சூழலின் முக்கியமான பல்வேறு ஆளுமைகள் பங்களித்திருக்கும் இந்த இதழில், மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறோம். மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் எனப் பல்வேறு தளங்களிலும் பெண்கள் கடந்துவந்த பாதை, எதிர்கொண்ட ஒடுக்குதல்கள், அவர்களின் பங்களிப்புகள் குறித்து பல்வேறு விவாதப்புள்ளிகளில் கட்டுரைகள் உரையாடுகின்றன. இந்த உரையாடலை வெவ்வேறு களங்களில் விரித்துச் செல்ல வேண்டியது காலத்தின் அவசியம்.

- ஆசிரியர்