Published:Updated:

தேன் என. - சஹானா

தேன் என. - சஹானா
பிரீமியம் ஸ்டோரி
தேன் என. - சஹானா

ஓவியம் : ரமணன்

தேன் என. - சஹானா

ஓவியம் : ரமணன்

Published:Updated:
தேன் என. - சஹானா
பிரீமியம் ஸ்டோரி
தேன் என. - சஹானா

ன் மயில்
நடனமாடிக்கொண்டிருக்கிறது
மழை வரவே வராத கோடையின் முற்றத்தில்

மா
ங்காய்கள்போல
வேப்பமரத்தில்
பச்சைக் கிளிகள்

ன் மனம் முறிந்து
ஆசைக்கூடு தரையில் விழுந்தது
கவிதை முட்டைகள் உடைந்தன

தேன் என. - சஹானா

வளுக்குப் பூனைமீது ஆசை
கண்ணுக்கு எட்டிய பூனை அவள் கைக்கு எட்டவில்லை
ஒருநாள் கறுப்பு வெள்ளைப் பூனை
அவளைத் தேடி வந்தது
அவளிடம் பேசியது
விளையாடியது
தடவச் சொல்லியது
செல்லமாகப் பிறாண்டியது
அவள் வாழ்வின் பக்கங்களில் கறாம் புறாம் வரைந்தது
இப்படி ஓர் அழகான பூனை
ரொம்ப நாளுக்கு அப்புறம்
அவள் செடியில் பூவாய்ப் பூத்திருந்தது

ரு வாள்
என் தலையை அறுத்து எறிந்தது
ஒரு கழுகு என் உடலைத் தூக்கிச்சென்று எங்கேயோ போட்டது
ஒரு சிங்கம் என் கையைக் கடித்துத் தின்றது
ஒரு சிறுத்தை என் காலைக் கவ்வி ஓடியது
வண்டுகளும்
பட்டாம்பூச்சிகளும்
தேனீக்களும் வந்து
என்னைச் சூழ்ந்து மொய்த்தன
தேன் என நினைத்து.