Published:Updated:

கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி

கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி

ஓவியம் : மணிவண்ணன்

கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி

ஓவியம் : மணிவண்ணன்

Published:Updated:
கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி

மிதக்கும் பயணம்

மேலே மிதக்கும் பயணம்
கீழே நட்சத்திரங்கள்
பாதம் நோகும் குளிர்
சதைக்குள் ஊடுருவும் பனி

கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி


புகை உமிழும் ஒழுங்கற்ற மலைகள்
தற்கொலைக்குத் தூண்டும் உயரத்தின் அபார அழகு
சரிந்து இறங்கும் பள்ளத்தாக்கு
படிப்படியான நிலங்கள் விளைவிக்கும்
கேரட், பீட்ரூட், பூண்டு, முள்ளங்கி, நூல்கோல், முட்டைகோஸ்...
வான் நோக்கிய யூகலிப்டஸ் பரப்பும் நறுமணம்
பேய்கள் அப்பிய மூதாதை மரங்கள்
நிலக்கடலையின் உள்தோலைக் கசக்கித் தின்னும் அறிவுஜீவிக் குரங்குகள்
இரவு வளர்த்த நெருப்பு
சூரிய உடல் பனி உடலுக்குள் பூத்த
நீல அல்லி.

கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி

ஞாயிறு விரித்த மலர்

இயேசு பாதிரியாராகி
தனது வசீகரக் குரலில்
ஞாயிற்றுக்கிழமைக் காலைகளை
குட்டி நட்சத்திரங்களைக்கொண்டு அலங்கரிக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில்
கோழியோ ஆடோ மாடோ ஏதோ ஒன்று...
மரித்த உயிரில் இயேசுவின் கருணைக்குருதி.

ஞாயிற்றுக்கிழமைத் தூக்கங்களில்தான்
எக்கவலையுமற்று உரக்கச் சத்தம்போடுகிறது எருமை.

ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சருகுகள் துளிர்க்கும் முற்றம்
மங்கிய கோலம்
பால்காரனின் பலத்த மணியோசை.

ஞாயிற்றுக்கிழமைகளில்தான்
பரபரப்பற்று ஊர்ந்து திரியும் ஆமைகள்
அதன் மெல்லலில் ஞாயிறு விரித்த மலர்.