Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

Published:Updated:
புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

இந்தியாவில் கூகி!

புக்மார்க்

`சிலுவையில் தொங்கும் சாத்தான்’, `இடையில் ஓடும் நதி’, `ரத்தப்பூ இதழ்கள்’, `கறுப்பின மந்திரவாதி’,  `காலனிய ஓர்மையிலிருந்து விடுபடல்’ ஆகிய நூல்களை எழுதியவர் கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ. `நான் விரும்பும்போது மணம் செய்துகொள்வேன்’ என்கிற நாடகத்துக்காகக் கைதானவர் இவர். சிறையில் மலம் துடைக்கக் கொடுக்கப்பட்ட காகிதத்தில் நாவலை எழுதியது உட்பட பல வீரதீரச் செயல்களுக்குச் சொந்தக்காரர் கூகி. சமீபத்தில் இந்தியா வந்த கூகி கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் வாசகர்களோடு உரையாடினார். அவரைச் சந்தித்து உரையாடியுள்ளார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. ``கதைசொல்லியாகவும் கருத்தியல்ரீதியாகவும் மிக நெருக்கமானவர் என்று நான் உணரும் கூகியை பெங்களூரில் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம். `இயற்கையும் வாழ்வும் வண்ணமயமானவை. சிறை ஒரே வண்ணமாக வாழ்வைச் சுருக்குகிறது. வண்ணங்களை மீட்டுக்கொள்ளும் ஆவேசம் எழுதத் தூண்டுகிறது’ என்று அவர் சொன்னார்’’ எனச் சிலாகிக்கிறார் ஆதவன்.

பேரன்பின் கவிஞன்!

புக்மார்க்

``அதிகாலையில் நான் சந்திக்கும் இயற்கையைப் பற்றியவைதான் என் கவிதைகள். பறவைகள், பூக்கள், மீன் வியாபாரி என நான் கடந்து செல்பவர்களைப் பற்றி எழுதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், ஓர் ஓவியரும் புகைப்படக்காரரும் பதிவு செய்வதைத்தான் நான் என் கவிதைகளின் வழியே பதிவு செய்கிறேன்” என்கிறார் வண்ணதாசன்.  தற்போது எழுதிக்கொண்டிருக்கும் கவிதைத் தொகுப்புக்கு  ‘அந்தரப்  பூ’ எனப் பெயரிட்டிருக்கிறார். பலருக்கும் பிடித்தமானவராக இருக்கும் வண்ணதாசனுக்கு சமீபத்தில் பிடித்த கவிதைப் புத்தகங்கள் தேன்மொழிதாஸ் எழுதிய ‘காயா’, போகன் சங்கர் எழுதிய ‘சிறிய எண்கள் உறங்கும் அறை’, ரவி சுப்ரமணியன் எழுதிய ‘விதானத்துச் சித்திரங்கள்.’ பறவைகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கும் வண்ணதாசனுக்குப் பிடித்த பறவை என்ன என்ற கேள்விக்கு, ``ஆர்.கே லக்ஷ்மணைப் போலவே எனக்குப் பிடித்தமான பறவை ‘காகம்’ ’’ என்கிறார் பேரன்பின் கவிஞன்.

``நாங்கள் பொம்மைகள் மாதிரிதான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற்போல நாங்கள் ஆடுகிறோம், பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதே  எங்கள் காலடியில்  உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடுங்கிவிட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?” - இப்படியான வார்த்தைகளுடன் தொடங்குகிறது தூக்கத்தைக் கலைக்கும் எட்டுக் கதைகளின் தொகுப்பு `ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்.’ இயற்கை வளங்களுக்காக உயிர்வரை சுரண்டப்படுவதுடன், பல்வேறு விதமான துயரங்களைச் சுமக்கும் சந்தால் பழங்குடியினரின் வாழ்வைப் பல கோணங்களில் கதையாகச் சொல்கிறார் மருத்துவரும் எழுத்தாளருமான ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர். யுவ புரஸ்கார் விருதுபெற்ற இந்த  நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் லியோ ஜோசப். இத்தொகுப்பின் மிகச்சிறிய கதை  `புலம் பெயரத் தகுந்த மாதம் – நவம்பர்.’ ஜார்க்கண்ட் மாநில அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டதும், ஆசிரியர் அவரது மருத்துவப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதும் இந்தக் கதைக்காகவே. மறக்கப்பட்ட மனிதர்களின் இடத்தில் நின்று, தேர்ந்த நடையில் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 

புக்மார்க்

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் (சிறுகதைத் தொகுப்பு)

ஹண்ஸ்டா செளவேந்திர சேகர்

தமிழில் : லியோ ஜோசப்

பதிப்பகம் : எதிர் வெளியீடு

விலை : 180

புக்மார்க்

நிழற்தாங்கலில் எழுதலாம்!

எழுதுவதற்குக் கதைகள் இருந்தாலும், அவற்றை எழுதச் சரியான சூழலின்றித் தவிக்கும் படைப்பாளிகளுக்குத் தங்க இடம் கொடுத்து, எழுதுவதற்கான வெளியையும் உண்டாக்கியிருக்கும் ஓர் இடம்தான் நாகர்கோவிலில் உள்ள ‘நிழற்தாங்கல்.’ இவ்விடத்தை கவிஞர் லக்‌ஷ்மி மணிவண்ணன் ஏற்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் அவ்வப்போது படைப்பாளர்களை அழைத்து படைப்புகள் குறித்து ஓர் ஆக்கபூர்வமான உரையாடலையும் செய்துவருகிறார்.  மதம்,  இனம், சாதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு ஓர் அறக்கட்டளையின் மேற்பார்வையில் கடந்த ஓராண்டுக்கும் மேல் இயங்கிவருகிறது நிழற்தாங்கல்.