இசை மழை

வெட்டவெளியில் கிடத்தப்பட்டிருக்கும்
பியானோவின் மீது
மழை பெய்யத் துவங்குகிறது.
முதல் துளியின் தழுவலில்
உன் பெயரை இசைக்கிறது
அடுத்த துளியின் தழுவலில்
என் பெயரை உச்சரிக்கிறது
மழை வலுத்துத் தொடர்கிறது
உன் பெயரும் என் பெயரும்
இசைப்பது மழையா பியானோவா
தெரியவில்லை
நாம் இப்போது
நனைத்துக்கொண்டிருக்கிறோம்
பியானோவையும் மழையையும்..

- சௌவி

செவலை

முள்பிடுங்கக் கால் தூக்கிக் காட்டுகையில்
கிடைமாட்டு சிறுவனின் கீதாரி பாதங்களில்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பெரும் பரதேச கரடுமுரடு வயக்காடுகள்தான்

ஏதோவொரு தரிசில்
அச்சிறுவன் தனியாளாய் நின்று
பிரசவம் பார்த்துப் பிறந்ததுதான் செவலை

செல்லங்கொஞ்சி வளர்த்த செவலையை
அடிமாட்டுக்கு அனுப்புகையில்
அதன் கண்களில் வடிந்த கண்ணீர் இன்றும்
என் எச்சிலெங்கும் கரிக்கிறது

கூரைத் தாழ்வாரத்தில் செருகிய
மூக்கணாங்கயிற்றில் வீசும்
ஊரத்தண்ணீர் சாணி வாசம்
வீடெங்கும் சீறியும்
கொஞ்சியும்
செருமியும் கிடக்கிறது

நகரில் காகிதங்கள் தின்று
தனித்தலையும் பசுக்களின்
பிரசவகால இளங்கொடியின்
வீச்சத்தில் செவலையின்
வாசமடிக்கிறது...!

- முத்துராசா குமார்

புன்னகை

மோனலிசா ஓவியத்தை
வரைந்திருக்கிறேன்
பாருங்கள் என்றாள்
எங்கள் வீட்டு
மோனிகா குட்டி.

அவள் வரைந்திருந்தது
மோனலிசா மாதிரி
இல்லாவிட்டாலும்
அது அச்சு அசலாக
மோனலிசா மாதிரியே
இருப்பதாக
சொல்லிவைத்தேன்.

மோனிகா உதட்டில்
ஒரு மோனலிசா புன்னகை
வெளிப்பட்டது.

- பர்வீன் யூனுஸ்

மதுரை ஜி.ஹெச்

எவ்வளவு முயன்றும்
மதுரைப் பெரியாஸ்பத்திரியின்
பிணவறை இருளையும்
வராண்டாக்களின் ஓலங்களையும்
ஆதரவற்ற புண்களின் வலிகளையும்
மருந்துகளின் வாடைகளையும்
வரைய முடியவில்லையென

லாடனேந்தல் கரிக்கட்டை
கறுப்பு வண்ணமும்
தென்கரை விரலாகிய நானும்
புலம்பித் தவித்து ஒருகட்டத்தில்
ஒன்றானோம்
காலப்போக்கில்
கரிக்கட்டைக் கறுப்பைத் தின்று
கறுப்போடு தின்று
கறுப்பை உடுத்தி
கறுப்போடு மல்லுக்கட்டி
கறுப்பையே வீடாக்கி
கறுப்பும் நானும்
ஒன்றுக்குள் ஒன்றாகி
செருப்பில்லாமல்கூட
கடைவீதியெங்கும் சுற்றுவோம்
மழைநாளொன்றில்
கடையில் நின்று சிகரெட்
பற்றவைத்தபோதுதான்

அந்த ஓவியக் கண்காட்சியின்
பிரபல தைல வண்ண ஓவியம்
மூச்சிறைக்க ஓடிவந்து
எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னது

மூவரும் மாறி மாறி முகம்
பார்த்துவிட்டு நடந்தோம்
‘பெரியாஸ்பத்திரிக்குள்ள போயிருக்கியா’ என
கறுப்பு, தைல வண்ணத்திடம் கேட்க
மூவரும் ஒருநிமிடம் நின்றோம்..!

- முத்துராசா குமார்

இசை மழை

வெட்டவெளியில் கிடத்தப்பட்டிருக்கும்
பியானோவின் மீது
மழை பெய்யத் துவங்குகிறது.
முதல் துளியின் தழுவலில்
உன் பெயரை இசைக்கிறது
அடுத்த துளியின் தழுவலில்
என் பெயரை உச்சரிக்கிறது
மழை வலுத்துத் தொடர்கிறது
உன் பெயரும் என் பெயரும்
இசைப்பது மழையா பியானோவா
தெரியவில்லை
நாம் இப்போது
நனைத்துக்கொண்டிருக்கிறோம்
பியானோவையும் மழையையும்..

- சௌவி

செவலை

முள்பிடுங்கக் கால் தூக்கிக் காட்டுகையில்
கிடைமாட்டு சிறுவனின் கீதாரி பாதங்களில்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பெரும் பரதேச கரடுமுரடு வயக்காடுகள்தான்

ஏதோவொரு தரிசில்
அச்சிறுவன் தனியாளாய் நின்று
பிரசவம் பார்த்துப் பிறந்ததுதான் செவலை

செல்லங்கொஞ்சி வளர்த்த செவலையை
அடிமாட்டுக்கு அனுப்புகையில்
அதன் கண்களில் வடிந்த கண்ணீர் இன்றும்
என் எச்சிலெங்கும் கரிக்கிறது

கூரைத் தாழ்வாரத்தில் செருகிய
மூக்கணாங்கயிற்றில் வீசும்
ஊரத்தண்ணீர் சாணி வாசம்
வீடெங்கும் சீறியும்
கொஞ்சியும்
செருமியும் கிடக்கிறது

நகரில் காகிதங்கள் தின்று
தனித்தலையும் பசுக்களின்
பிரசவகால இளங்கொடியின்
வீச்சத்தில் செவலையின்
வாசமடிக்கிறது...!

- முத்துராசா குமார்

புன்னகை

மோனலிசா ஓவியத்தை
வரைந்திருக்கிறேன்
பாருங்கள் என்றாள்
எங்கள் வீட்டு
மோனிகா குட்டி.

அவள் வரைந்திருந்தது
மோனலிசா மாதிரி
இல்லாவிட்டாலும்
அது அச்சு அசலாக
மோனலிசா மாதிரியே
இருப்பதாக
சொல்லிவைத்தேன்.

மோனிகா உதட்டில்
ஒரு மோனலிசா புன்னகை
வெளிப்பட்டது.

- பர்வீன் யூனுஸ்

மதுரை ஜி.ஹெச்

எவ்வளவு முயன்றும்
மதுரைப் பெரியாஸ்பத்திரியின்
பிணவறை இருளையும்
வராண்டாக்களின் ஓலங்களையும்
ஆதரவற்ற புண்களின் வலிகளையும்
மருந்துகளின் வாடைகளையும்
வரைய முடியவில்லையென

லாடனேந்தல் கரிக்கட்டை
கறுப்பு வண்ணமும்
தென்கரை விரலாகிய நானும்
புலம்பித் தவித்து ஒருகட்டத்தில்
ஒன்றானோம்
காலப்போக்கில்
கரிக்கட்டைக் கறுப்பைத் தின்று
கறுப்போடு தின்று
கறுப்பை உடுத்தி
கறுப்போடு மல்லுக்கட்டி
கறுப்பையே வீடாக்கி
கறுப்பும் நானும்
ஒன்றுக்குள் ஒன்றாகி
செருப்பில்லாமல்கூட
கடைவீதியெங்கும் சுற்றுவோம்
மழைநாளொன்றில்
கடையில் நின்று சிகரெட்
பற்றவைத்தபோதுதான்

அந்த ஓவியக் கண்காட்சியின்
பிரபல தைல வண்ண ஓவியம்
மூச்சிறைக்க ஓடிவந்து
எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னது

மூவரும் மாறி மாறி முகம்
பார்த்துவிட்டு நடந்தோம்
‘பெரியாஸ்பத்திரிக்குள்ள போயிருக்கியா’ என
கறுப்பு, தைல வண்ணத்திடம் கேட்க
மூவரும் ஒருநிமிடம் நின்றோம்..!

- முத்துராசா குமார்