Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

Published:Updated:
புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

புக் தெரபி

ன அழுத்தத்தில் சிக்குண்டு கிடக்கிறீர்களா? ’பிரச்னை என்னன்னு மட்டும் சொல்லுங்க… எந்த புக் படிக்கணும்னு நாங்க சொல்றோம்’ என்று புத்தகங்கள்மூலம் மன அழுத்தத்திற்குத் தீர்வுதரும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது, ஆங்கில இலக்கியங்கள் குறித்த செய்திகளை வெளியிடும், LitHub இணையதளம். `புக் தெரப்பிஸ்ட்’ என்ற புதிய பகுதியின்மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ரோசலி நெக்ட் பதில்களை எழுதுகிறார். பிரச்னைகள் குறித்து விளக்கி, அவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களையும் பரிந்துரைக்கிறார்!  

புக்மார்க்

றவைக் காப்பிடங்கள் எவ்வளவு அவசியமானவை என்பதை விவரிக்கிறது இந்நூல். தமிழகத்தின் 16 பிரதான பறவைக் காப்பிடங்கள் குறித்த ஆழமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. காப்பிடங்களின் பெயர்க் காரணம் முதல் அதன் வரலாறு, பரப்பளவு, இயற்கை வளம், தனிச்சிறப்பு, அந்தக் காப்பிடம் சார்ந்த குறிப்பிட்ட பறவைகள்,  எதிர்கொள்ளும் பிரத்யேகச் சிக்கல்கள் எனக் கூர்மையான சூழலியல் பார்வைகொண்ட நூல் இது. பறவைகளைத் துல்லியமாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக வண்ணப்படங்களுடனும் பல்வேறு குறிப்புகளுடனும் நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

ஏ.சண்முகானந்தம், சா.செயக்குமார்

எதிர் வெளியீடு, பக்கம்: 216 விலை: 500

புக்மார்க்

1977-ல் நான்கு ஒட்டகங்கள் மற்றும் ஒரு கறுப்பு நாயோடு ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் தன்னந்தனியாக 2500 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டவர் ராபின். அந்தப் பயணத்தை ‘ட்ராக்ஸ்’ (Tracks) என்ற பெயரில் புத்தகமாகவும் பதிந்தார். ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் மீது எய்யப்பட்ட இனவெறி அம்புகளை உடைத்தெறிந்ததில் இந்தப் புத்தகத்திற்கு முக்கியப் பங்குண்டு. தமிழில் பத்மஜா நாராயணன் மொழிபெயர்ப்பில்   ‘தடங்கள்’ என்ற தலைப்பில்  வெளியானது.  ‘ட்ராக்ஸ்’  ஏற்படுத்திய தாக்கத்தில் 2010ம் ஆண்டு தன்னந்தனியாக ஆஸ்திரேலியா முழுக்க 20 ஆயிரம் கி.மீ தூர நடைபயணத்தைத் தொடங்கினார் டெர்ரா ரோம் (Terra Roam). எட்டு ஆண்டுகளான நிலையில், தற்போது தன் பயணத்தின் இறுதியில் இருக்கிறார் டெர்ரா.

புக்மார்க்

“என்னுடைய சின்ன வயதில் ‘எங்களுக்கும் தொழில்புரிய வாய்ப்பு கொடுங்கள்’ என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டிய அவசியம் பற்றிய கட்டுரைகள் அடங்கிய அற்புதமான நூல். பழநியப்பா பிரதர்ஸ் வெளியீடு. மாற்றுத்திறனாளிகள் குறித்த அக்கறையோடு பேசுகிற காலம் இது என்பதால்  மறுபதிப்பாக வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.” - யூமா வாசுகி

புக்மார்க்

எஸ்.சண்முகம், ரவி சுப்ரமணியம் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான ‘எழுத்தாளர் மா.அரங்கநாதன் விருது’ வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பணமுடிப்பும் மா.அரங்கநாதன் சிறு உருவச்சிலையும் பரிசாக வழங்கப்படும். இவ்விருது ஏப்ரலில் சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

புக்மார்க்

கலாப்ரியாவிடமும் சுகுமாரனிடமும் கேட்பதற்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன என்கிறார் இளம் எழுத்தாளர் போகன் சங்கர். ``இருவரும் முக்கியமான கவிஞர்கள். உரைநடையில் புனைவு எழுதுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார்கள்? உரைநடையில் புனைவை எழுதுவதற்கு, கவிஞர்களுக்கு இருக்கும் சிக்கல்களும் செளகரியங்களும் யாவை? எதைச் சுருக்கவும், விரித்து எழுதவும் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்த இரண்டாவது கேள்வி.”

புக்மார்க்

எழுத்தாளர் தமயந்தியின் `தடயம்’ சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது. அந்தக் கதையை மேலும் விரிவாக்கி, திரைக்கதை அமைத்துத் திரைப்படமாக இயக்கி வருகிறார் தமயந்தி. விரைவில் நாயகி வசந்தியைத் திரையில் பார்க்கலாம்.

புக்மார்க்

என்னுடைய எழுத்துக்கள் அனைத்துமே சமூகம் எழுதிய கதைகள் தான்

``மொழியைப் புதுப்பிப்பது, கதை நிகழும் இடத்தை அடையாளப்படுத்துவது, அதன் பண்பாட்டு நிலவியலைப் பதிவுசெய்வதுதான் என் எழுத்தின் நோக்கம், மாறாக வெறுமனே கதை சொல்வதல்ல” எனத் தனது படைப்புகளுக்கான அடிப்படைகள் குறித்துக் கூறுகிறார் எழுத்தாளர் இமையம். சமீபத்தில் படித்ததில் கவிஞர் சுகுமாரனின் ‘பெருவலி’, கவிஞர் சக்தி ஜோதியின் ‘சங்கப் பெண் கவிதைகள்’ ஆகியவை பிடித்த நூல்கள் என்று கூறினார். “எந்தவித உள்நோக்கமுமின்றி சமூகத்தை உற்றுநோக்க வேண்டும். மொழியைக் கவனமாகக் கையாள வேண்டும். அறிதலை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு எழுத வேண்டும். முக்கியமாக, தான் எழுதியதே உலகில் உன்னத இலக்கியம் என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும்” - புதிதாக எழுதவரும் இளம் தலைமுறையினருக்கு அவர் கூறவிரும்புவது இவைதான்.