அம்மாவின் அடி!

அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்
பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.
அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான்
‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!
கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக
மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.
நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென
பருத்தி மாரில் பின்னியெடுத்தாள்
அன்று திருக்கார்த்திகை.
பெரியம்மா தடுக்கத் தடுக்க,
கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு
சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது
`உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என
கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.
எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது
தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்
அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!
ஆனாலும்,
`கைலி கட்டிட்ட... இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க...’
ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.
ஒருநாள்... மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப்
புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது
துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்
அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை!

- தா.ரமேஷ்

பிங்க் இரவு

மொட்டுகள் நாளை பூத்துவிடுமென
தொட்டியில் பதியமிட்ட
ரோஜாச்செடிகளைக் காட்டி
நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.
அன்றைய அந்திக்குப் பின்
ரோஜா வாசத்தோடு
பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.

- எஸ்.ஜெயகாந்தி

சன்னல்

பொன்னிற வெயில் ஊடுருவாமல்
தென்றல் வராமல்
வெண்ணிலா தெரியாமல்
ஒரு ரோஜா தலை நீட்டாமல்
ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தமராமல்
ஒரு பறவை எட்டிப்பார்க்காமல்
அப்புறம் என்ன சன்னல் அது?

- கண்ணன்

புலனாய்வு

`உங்க குலசாமி என்ன?’ என
பெரியாத்தா கேட்டபோதும்
`நம்ம சனமாடா?’ என
வாழையிலை அறுத்துக்கொண்டே
அம்மா என்னைக் கேட்டபோதும்
`ஸ்காலர்ஷிப்லாம் கரெக்டா வருதா?’
என அக்கா கேட்டபோதும்
‘உங்க சைடு அந்த ஆளுகதான
அதிகமா இருப்பாங்க’னு
அப்பா கேட்டபோதும்
சிரித்து மழுப்பி
விடைபெறுகிறாள் தோழி.
வழியனுப்பி வீடு திரும்பும்போது
வீடெங்கும் அக்கேள்விகளின் மலம்!

- அருண்

அம்மாவின் அடி!

அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்
பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.
அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான்
‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!
கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக
மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.
நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென
பருத்தி மாரில் பின்னியெடுத்தாள்
அன்று திருக்கார்த்திகை.
பெரியம்மா தடுக்கத் தடுக்க,
கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு
சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது
`உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என
கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.
எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது
தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்
அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!
ஆனாலும்,
`கைலி கட்டிட்ட... இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க...’
ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.
ஒருநாள்... மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப்
புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது
துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்
அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை!

- தா.ரமேஷ்

பிங்க் இரவு

மொட்டுகள் நாளை பூத்துவிடுமென
தொட்டியில் பதியமிட்ட
ரோஜாச்செடிகளைக் காட்டி
நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.
அன்றைய அந்திக்குப் பின்
ரோஜா வாசத்தோடு
பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.

- எஸ்.ஜெயகாந்தி

சன்னல்

பொன்னிற வெயில் ஊடுருவாமல்
தென்றல் வராமல்
வெண்ணிலா தெரியாமல்
ஒரு ரோஜா தலை நீட்டாமல்
ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தமராமல்
ஒரு பறவை எட்டிப்பார்க்காமல்
அப்புறம் என்ன சன்னல் அது?

- கண்ணன்

புலனாய்வு

`உங்க குலசாமி என்ன?’ என
பெரியாத்தா கேட்டபோதும்
`நம்ம சனமாடா?’ என
வாழையிலை அறுத்துக்கொண்டே
அம்மா என்னைக் கேட்டபோதும்
`ஸ்காலர்ஷிப்லாம் கரெக்டா வருதா?’
என அக்கா கேட்டபோதும்
‘உங்க சைடு அந்த ஆளுகதான
அதிகமா இருப்பாங்க’னு
அப்பா கேட்டபோதும்
சிரித்து மழுப்பி
விடைபெறுகிறாள் தோழி.
வழியனுப்பி வீடு திரும்பும்போது
வீடெங்கும் அக்கேள்விகளின் மலம்!

- அருண்