Published:Updated:

கவிதைகள் - சந்திரா

கவிதைகள் - சந்திரா
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள் - சந்திரா

ஓவியங்கள் : வேல்

கவிதைகள் - சந்திரா

ஓவியங்கள் : வேல்

Published:Updated:
கவிதைகள் - சந்திரா
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள் - சந்திரா
கவிதைகள் - சந்திரா

ஊழியின் காலம்

வெயில் வெதும்பும் ஊரைக் குறை சொல்லாதே மகளே
முன்பொரு காலம் ஆயிரமாயிரம் அத்திப்பூக்கள் பூத்த
வனதேசத்தின் ஆதிப்பிள்ளைகள்தான் நாம்
இருந்தும்
கொத்துமண் நிரம்பிய கப்பங்கிழங்கும் கிடைக்காமல்
நாம் நாடோடிகளானோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவிதைகள் - சந்திரா


பருவம் பொய்த்துப்போன ஊழிக்காலம்
நம்மை நகரத்திற்குத் துரத்தியது.
இங்கு பருவம் மீறிய மழை வெள்ளம் வீட்டை நிரப்ப
நீ அரசாங்கத்தைக் குறை சொல்லியபடி
தண்ணீரைக் கை வலிக்க வலிக்க அள்ளி ஊற்றுகிறாய்.
நாம் நம் ஓட்டுகளைத் தேர்தல் பணமுதலைகளுக்கு
விற்றுவிட்டதைப்போல
அரசாங்கமும் நாமும்
மேலை தேசங்களுக்கு விற்கப்பட்டுவிட்டோம்.
நம் வினைகள் அவை
வெள்ளத்தில் மூழ்கிச் சாவு
இல்லை நீயே அள்ளித் துப்புரவு செய்
இனி நம் நிலத்திற்குத் திரும்ப முடியாது யாத்திரிக்கா
நம் தாத்தனின் குரும்பைப் பயிர் செழித்த ஆதிநிலமும்
வட்டிக்கு இரையாகிவிட்டது
இனி ஊரில் என்ன இருக்கிறது
நம் குலசாமியைத் தவிர.

கவிதைகள் - சந்திரா

வலியின் வாசனை

பு
றா அனத்தும் பின்னிரவில்
குளிர் உன்னைத் தொந்தரவு செய்ய
நீ விட்டத்தில் தூக்குக்கயிற்றை மாட்டினாய் மகளே
நான் படப்பிடிப்பில் நடிகையின் மாராப்பை
கிளிவேஜ் தெரியுமாறு இன்னும் சற்று விலக்கச் சொல்லி

கவிதைகள் - சந்திரா

உதவியாளரிடம் கூறினேன்
அக்கணத்தில் நீ என் தோளில் அமர
முன்வசந்த காலத்தில் நாம் மலையேறிச் சென்ற
மிளகுக்காட்டின் வாசனை மூளையைக் கசக்கியது.
பலாத்காரக் காட்சியில்
நடிகன், நடிகையின் மார்பில் நகங்களால் நிஜமாகவே கீற
அவள் வலியில் அலறினாள்
“வருங்காலக் கணவனிடம் என்ன காரணம் சொல்வேன்?”
நடிகை என்னை ஏசுகிறாள்
அந்திம நேரத்தில் கண்ட கனவின் பயத்தில்
நீ என்னை அணைத்துக்கொள்ளும் கதகதப்பு நினைவுடன்
அவள் காயங்களுக்கு நான் மருந்திட்டபோது
பாரந்தாங்காமல் நீ பூட்டிய கயிறு அறுந்தது மகளே
நாளை நிச்சயம்
நான் நல்ல கனவைக் காண்பேன்
அதில் நாமிருவரும் பனிரோஜாக்களை நுகர்ந்தபடி
கூதல் காய்ந்துகொண்டிருப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism