“அந்த இசைத்தட்டை ரத்தத்தால் கழுவிக்கொண்டிருக்கிறாள்
விநோதம் அடைமழையெனப் பெய்கிறது!”
நீண்ட உறக்கத்திலிருந்த சந்திரபாபு விழித்துக்கொண்டார்
நலம்தான் என்றாலும்,
அவ்வப்போது நினைவிழக்கிறார் அல்லது நினைவுபெறுகிறார்.
“கண்ணீரின் பயணத்தைத் தடுக்கக் கூடாது!”
இளையராசா தந்தனக்குயில்களை
வேட்டைக்கு அனுப்பியிருக்கிறார்
அதன் பசியிடமிருந்து
நம் கபாலக்கூழைப்
பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வயலின் இசையில் கருவுற்றவள்
மதுவிடுதியிலிருந்து கிளம்ப மறுக்கிறாள்
அவளுக்குள்தான் எவ்வளவு பெரிய பனிக்குடம்.
சுவர்ணலதாவுக்கு நுரையீரல் பிரச்னையென்று
ஏன் டாக்டர் முதலிலேயே சொல்லவில்லை?
வெள்ளிவீதியின்
வெண்ணையுணங்கு பாறையில்
கனா இலைகள் உலர சாட்சியிருக்கும் பாணன்
வீழ்த்தப்பட்ட காட்டெருதின் உடலில்
யாழ் நரம்புகளைத் துழாவுகிறான்.
பெருகும் வைகையைக்
கனவில் சுமக்கும் புள்ளாய்
ஒருமுறை ரஹ்மான் வானில் மிதந்தார்
மேகம் கனியும் நறுமணத்தை
நாம் ஆனந்தித்தோம்.
யாவரும் கைவிட்ட தீவின் துயரை
விளரி யாழேற்றி அரற்றுகிறார் விஸ்வநாதன்
“சின்னஞ்சிறிய கடல் மின்மினிகளே...
ஒரு தூதுப்பாவாகச் சென்று
ஊழின் சிரசை மொய்ப்பீரோ?!”
யாரின் சிதையிலோ
பறைக்கு வார்பிடிக்கிறான் ராவணன்

பாருங்கள் சந்திரபாபு
அவன் நீந்திவந்த கடலை
அதன் தீரா உப்புக்கரிப்பை.
இந்த நூற்றாண்டின் தமிழ்ச்சித்திரம்
பிடரியில் துளையுள்ள மண்டையோடுகள்,
போர்ப்புழுதி நீங்கா சிறிய விழிகளை
முலைப்பால் பீச்சிக் குளிர்வித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பணகைகள்.
பனையேறியரின் லாகவத்தோடு
நினைவைப் பற்றி ஏறி
மங்கலான மன ஒளியில்
இசைக்குறிப்புகளைக் காவுகிறேன்
“உழுகுடிகளுக்கு
அன்னக்கிளி புள் நிமித்தமானது!”
குணகடல் துள்ளும் தூங்கும்
சந்திர ஒளி வற்றும் பெருகும்
நாயனம் இசைக்கும்போது முகூர்த்தம் அவ்வளவுதானே சந்திரபாபு

இந்தத் தேநீரை ருசித்துவிட்டு
காயத்தின் தையல் பிரிந்துவிடாமல்
சற்று ஹம் பண்ணுங்கள்
வாழ்வில் மட்டுமல்ல
நியாயமற்ற முறையில்
கவிதையிலும் காட்சிகள் மாறும்தானே?!

“அந்த இசைத்தட்டை ரத்தத்தால் கழுவிக்கொண்டிருக்கிறாள்
விநோதம் அடைமழையெனப் பெய்கிறது!”
நீண்ட உறக்கத்திலிருந்த சந்திரபாபு விழித்துக்கொண்டார்
நலம்தான் என்றாலும்,
அவ்வப்போது நினைவிழக்கிறார் அல்லது நினைவுபெறுகிறார்.
“கண்ணீரின் பயணத்தைத் தடுக்கக் கூடாது!”
இளையராசா தந்தனக்குயில்களை
வேட்டைக்கு அனுப்பியிருக்கிறார்
அதன் பசியிடமிருந்து
நம் கபாலக்கூழைப்
பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வயலின் இசையில் கருவுற்றவள்
மதுவிடுதியிலிருந்து கிளம்ப மறுக்கிறாள்
அவளுக்குள்தான் எவ்வளவு பெரிய பனிக்குடம்.
சுவர்ணலதாவுக்கு நுரையீரல் பிரச்னையென்று
ஏன் டாக்டர் முதலிலேயே சொல்லவில்லை?
வெள்ளிவீதியின்
வெண்ணையுணங்கு பாறையில்
கனா இலைகள் உலர சாட்சியிருக்கும் பாணன்
வீழ்த்தப்பட்ட காட்டெருதின் உடலில்
யாழ் நரம்புகளைத் துழாவுகிறான்.
பெருகும் வைகையைக்
கனவில் சுமக்கும் புள்ளாய்
ஒருமுறை ரஹ்மான் வானில் மிதந்தார்
மேகம் கனியும் நறுமணத்தை
நாம் ஆனந்தித்தோம்.
யாவரும் கைவிட்ட தீவின் துயரை
விளரி யாழேற்றி அரற்றுகிறார் விஸ்வநாதன்
“சின்னஞ்சிறிய கடல் மின்மினிகளே...
ஒரு தூதுப்பாவாகச் சென்று
ஊழின் சிரசை மொய்ப்பீரோ?!”
யாரின் சிதையிலோ
பறைக்கு வார்பிடிக்கிறான் ராவணன்

பாருங்கள் சந்திரபாபு
அவன் நீந்திவந்த கடலை
அதன் தீரா உப்புக்கரிப்பை.
இந்த நூற்றாண்டின் தமிழ்ச்சித்திரம்
பிடரியில் துளையுள்ள மண்டையோடுகள்,
போர்ப்புழுதி நீங்கா சிறிய விழிகளை
முலைப்பால் பீச்சிக் குளிர்வித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பணகைகள்.
பனையேறியரின் லாகவத்தோடு
நினைவைப் பற்றி ஏறி
மங்கலான மன ஒளியில்
இசைக்குறிப்புகளைக் காவுகிறேன்
“உழுகுடிகளுக்கு
அன்னக்கிளி புள் நிமித்தமானது!”
குணகடல் துள்ளும் தூங்கும்
சந்திர ஒளி வற்றும் பெருகும்
நாயனம் இசைக்கும்போது முகூர்த்தம் அவ்வளவுதானே சந்திரபாபு

இந்தத் தேநீரை ருசித்துவிட்டு
காயத்தின் தையல் பிரிந்துவிடாமல்
சற்று ஹம் பண்ணுங்கள்
வாழ்வில் மட்டுமல்ல
நியாயமற்ற முறையில்
கவிதையிலும் காட்சிகள் மாறும்தானே?!