Published:Updated:

நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ

நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ
பிரீமியம் ஸ்டோரி
நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ

தமிழில்: செ.ஜார்ஜ் சாமுவேல்

நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ

தமிழில்: செ.ஜார்ஜ் சாமுவேல்

Published:Updated:
நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ
பிரீமியம் ஸ்டோரி
நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ

னக்கு எதிரில் தலைமைப் பாதிரி எர்னஸ்டோ நடந்து வருகையில்
வியர்வை படிந்த எனது முகத்தில் அப்பியிருந்த தலைமுடியோடு
நான் நடந்துகொண்டிருந்தேன்
அவரை வரவேற்ற பின் நான் கேட்டது,
பாதிரியாரே சொர்க்க ராஜாங்கத்தில்
அது கம்யூனிஸமும்கூட,

நானும் எர்னஸ்டோ கார்டினலும் - ராபர்ட் பொலோனோ


அங்கு ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு இடமுண்டா?
‘ஆம்’ என்றார் அவர்.
மற்றும் கழிவிரக்கமற்ற செயற்கைத் தற்புணர்ச்சியாளர்களுக்கு?
பாலுணர்வு அடிமைகளுக்கு?
பாலுணர்வு பேதைகளுக்கு?
மேலும் தன்னைக் காயப்படுத்தி சுயஇன்பம் காண்போர்
விலைமாதர்கள், குதவாய் வழியே குடல்கழுவுவதில் அடிமைப்பட்டோர்
உண்மையில் இதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாதோர்,
உறுதியாக, உண்மையாகவே இதற்கு மேல்
தன்னால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை என்பவர்கள்?
அதற்கும் தலைமைப் பாதிரி, ‘ஆமாம்’ என்றார்
நான் எனது பார்வையை உயர்த்தினேன்
பூனைகளின் வெளுத்த இளஞ்சிவப்பு சிரிப்பை
ஒத்திருந்தது மேகக்கூட்டம்.
மலையின் மேல் ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்திருந்த மரங்கள்
(நாம் ஏறிச் சென்றடைய வேண்டிய குன்றுகள் அவை)
தங்கள் கிளைகளைக் குலுக்கியபடி இருந்தன.
அக்கொடிய மரங்கள், ஒரு நாள் இப்படியாகச் சொல்லலாம்.
ஏதொவொரு நாளில் விரும்பத்தக்க வகையில்
வெகு சீக்கிரத்திலேயே,
எனது நெகிழ்வான கரங்களுக்குள் வந்து சேர்வீர்கள்
எனது ஒல்லியான தாவரக் குளிர்மை
இறுதியில் உங்கள் தலைமயிரை குத்திட்டு நிற்கச் செய்யும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism