Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்

வ்வொரு மாதமும் காத்திரமான கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம். இந்த மாதம் ‘தமிழர் எனும் அடையாளம்: பெருமிதங்களும் கற்பிதங்களும்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். சில பத்தாண்டுகளாக அடையாளத்தை முன்வைத்த விவாதங்களும் அரசியல் போக்குகளும் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கறுப்பர் அரசியல், பெண்ணிய அரசியல், தலித்திய அரசியல், திருநங்கைகள் அரசியல், பாலியல் சிறுபான்மையினர் அரசியல் என அடையாள அரசியல்களுக்கான காலம் இது.

தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழர், திராவிடர், இந்தியர், ஆசியர், ஐரோப்பியர் என்ற அடையாளங்கள் பேரடையாளங்கள் என்றும் இந்த அடையாளங்கள் தங்களுக்கான நலன்களை முற்றிலுமாகப் பிரதிபலிக்கவில்லை என்றும் மேற்கண்ட அடையாள அரசியலை முன்வைப்பவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அரசியல் கூர்மை அதிகமாகிவரும் சூழலில் இன்றைய காலகட்டத்தில் தமிழர் என்னும் அடையாளத்தின் பின்னுள்ள அரசியல் மனநிலையைப் பேச வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் வெவ்வேறுவிதமான நோக்குகளிலிருந்து தமிழர் என்னும் அடையாளத்தை எப்படி அணுகுவது என்பது குறித்தான கட்டுரைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இந்தக் கட்டுரைகள் தொடர்ச்சியான உரையாடலுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism