கடும்புனல் வழித்தடம்
காய்ந்த நாணல் காற்றுக்கு அசைகிறது
ஆறும் வழியற்றதாய் இருக்கிறது ஆற்றின் வடு
வறண்ட மலத்துண்டை ஈரப்படுத்தி உண்ணும் நாய்
பாழ் மருதக் குலக்குறி
நன்செய்யின் அறம் பிழைத்து நாளாயிற்று
ஊழின் கொதிப்புடையது கானல்.

காய்ந்த சருகைக் கொளுத்திவிட்டுப் போகிறான்
உழவு பொய்த்துப்போனவன்
வேலியில் துவள்கின்றன செறுவிளை மலர்கள்
புகை மிதக்கும் நிலத்தை
பல்லுயிர்க்கு நேர்ந்த துர்க்கனவுகள் சூழ்கின்றன.

கல் பெயர்ந்த சாலையில் போகும்

கூட்டு வண்டிகளில் லாந்தர் விளக்குகள் அசைகின்றன
அதற்குள் சுடர்கின்ற திரிகள் கனத்த இருளால் நடுங்குகின்றன
மாட்டின் குளம்புகளில் சிக்கி உடைகின்ற நத்தைகளின் நாற்றம்
காற்றில் கலக்கிறது
பிழைக்கச் செல்பவர்களின் பாடல்
ஊரின் எல்லையைத் தாண்டுகிறது.

கல் பெயர்ந்த திண்ணையில்
நெடுநாள் புழுதி
ரெட்டைக் கதவின் தாழ்ப்பாளில்
ஏறியிருந்தது துரு
அந்த நிர்க்கதி பிராந்தியத்தில் அலைகிறது
பொறுக்கவியலாத நெடி.

எறும்புக் குழியின் வெளித்துவாரத்தில்
தியானத்திலிருக்கும் குட்டிப் புத்தனைப்போல்
அமர்ந்திருக்கிறது தேய்ந்த தானியம் ஒன்று
புளித்த நீராகாரத்தில் உப்புக்கல் இட்டு
கரைத்துக்கொண்டிருக்கிறான் சம்சாரி
ஊரில் தனித்தலைகிறது
பசி என்னும் சொல்.