தப்பிய காலம்

நட்சத்திரங்களின் வாலில்
பட்டாசு கட்டிக் கொளுத்திய காலம்.
அது கைநழுவிப்போயிருக்கிறது.
மேற்குமலைகளின் பச்சைப்புல்வெளி
நிலநடுக்கத்தின் விரிசலுற்றிருக்கிறது.
கடல் நம்மை விழுங்கத் தயாராயிருக்கிறது.
அதன் அலைகளுக்குக் கொடூரப்பற்கள்
முளைத்திருக்கின்றன.

கோடையில் வெடிப்புற்ற நிலங்களின் விரிசலும் நாம்தான்.
பெருமழையில் மிதக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளும் நாம்தான்.
காலத்தைச் சுருக்கி
ஓர் அலைபேசியாக்கிவிட்டோம்.
நீர்நிலைகளைத் தேடிவரும்
அயல்நாட்டுப் பறவைகளே
நம் தப்பிய காலத்தை நினைவூட்டுகின்றன.
சமயங்களில் அவையும்
காலத்தில் குழம்பி
நம் சட்டைப்பையின் அருகில் வந்துவிடுகின்றன.
அலைபேசியை இறுகப்பிடித்துக்கொள்கிறோம்.
சூரியனைக் குளிர்பதனப்பெட்டியில் வைக்கும்
பிரயத்தனங்களில் நாமிருப்பதை
இந்தப் பறவைகளுக்குச் சொல்லிவிட முடியுமா?

படையல் ஸ்மைலிகள்

ஆளாளுக்கு ஒரு வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பிக்கிறார்கள்.
கட்சி நடத்த முடியாதவர்கள்
புரட்சி செய்ய விருப்பமுள்ளவர்கள்
நோயுற்றுப் பிழைத்த அல்லது இறந்த குழந்தையை
மீண்டும் மருத்துவமனைக் கட்டிலில் கிடத்துபவர்கள்
முன்னோர்களின் கோவணத்தை
வற்றிக்கொண்டிருக்கும்
நதியில் அலசுபவர்கள்
ஆண்ட பரம்பரையின் இன்றைய வாரிசுகள்
ரத்த தானம் கொடுத்த கையோடு
அபிமான நடிகருக்காய்
ரத்தத் திலகமிடத் தயாராயிருக்கும் விடலைகள்
18 ப்ளஸ் படங்கள் பார்ப்பவர்கள்
பட்டியல் பெரிது.
சிதறிக்கிடந்த சொந்தங்கள் சேர்ந்து
ஒரு வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள்.
டி.பி.யில் குலதெய்வம்
உக்கிரமாய் முறைத்துக்கொண்டிருக்கிறது.
எப்படி சாந்தப்படுத்தலாம்?
நான்கைந்து ஸ்மைலிகளைப்
படையலாய் அனுப்பிவைத்தேன்.
பாவம் குலதெய்வம்
பதிலுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல்
இன்னும் உக்கிரமாய் முறைத்துக்கொண்டிருக்கிறது.

தப்பிய காலம்

நட்சத்திரங்களின் வாலில்
பட்டாசு கட்டிக் கொளுத்திய காலம்.
அது கைநழுவிப்போயிருக்கிறது.
மேற்குமலைகளின் பச்சைப்புல்வெளி
நிலநடுக்கத்தின் விரிசலுற்றிருக்கிறது.
கடல் நம்மை விழுங்கத் தயாராயிருக்கிறது.
அதன் அலைகளுக்குக் கொடூரப்பற்கள்
முளைத்திருக்கின்றன.

கோடையில் வெடிப்புற்ற நிலங்களின் விரிசலும் நாம்தான்.
பெருமழையில் மிதக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளும் நாம்தான்.
காலத்தைச் சுருக்கி
ஓர் அலைபேசியாக்கிவிட்டோம்.
நீர்நிலைகளைத் தேடிவரும்
அயல்நாட்டுப் பறவைகளே
நம் தப்பிய காலத்தை நினைவூட்டுகின்றன.
சமயங்களில் அவையும்
காலத்தில் குழம்பி
நம் சட்டைப்பையின் அருகில் வந்துவிடுகின்றன.
அலைபேசியை இறுகப்பிடித்துக்கொள்கிறோம்.
சூரியனைக் குளிர்பதனப்பெட்டியில் வைக்கும்
பிரயத்தனங்களில் நாமிருப்பதை
இந்தப் பறவைகளுக்குச் சொல்லிவிட முடியுமா?

படையல் ஸ்மைலிகள்

ஆளாளுக்கு ஒரு வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பிக்கிறார்கள்.
கட்சி நடத்த முடியாதவர்கள்
புரட்சி செய்ய விருப்பமுள்ளவர்கள்
நோயுற்றுப் பிழைத்த அல்லது இறந்த குழந்தையை
மீண்டும் மருத்துவமனைக் கட்டிலில் கிடத்துபவர்கள்
முன்னோர்களின் கோவணத்தை
வற்றிக்கொண்டிருக்கும்
நதியில் அலசுபவர்கள்
ஆண்ட பரம்பரையின் இன்றைய வாரிசுகள்
ரத்த தானம் கொடுத்த கையோடு
அபிமான நடிகருக்காய்
ரத்தத் திலகமிடத் தயாராயிருக்கும் விடலைகள்
18 ப்ளஸ் படங்கள் பார்ப்பவர்கள்
பட்டியல் பெரிது.
சிதறிக்கிடந்த சொந்தங்கள் சேர்ந்து
ஒரு வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள்.
டி.பி.யில் குலதெய்வம்
உக்கிரமாய் முறைத்துக்கொண்டிருக்கிறது.
எப்படி சாந்தப்படுத்தலாம்?
நான்கைந்து ஸ்மைலிகளைப்
படையலாய் அனுப்பிவைத்தேன்.
பாவம் குலதெய்வம்
பதிலுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல்
இன்னும் உக்கிரமாய் முறைத்துக்கொண்டிருக்கிறது.