Published:Updated:

சிற்பி... கற்பி!

மயக்கும் மல்லை சிற்பம்

##~##
சிற்பி... கற்பி!

மாமல்லபுரம் என்றாலே பல்லவர் காலத்து மரபு சார்ந்த சிற்பங்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், மாமல்லபுரத் தைச் சேர்ந்த சிற்பி முருகன், வெரைட்டியான மாடர்ன் சிற்பங்களைச் செதுக்கி அசத்துகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'சின்ன வயசில் இருந்தே எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். சிற்பக் கலையையும் அப்படித்தான் கத்துக்கிட்டேன். மகாபலிபுரம் சிற்பக் கலைக் கல்லூரியில் 1984-ல் இருந்து 1994 வரை 10 வருஷம் படிச்சேன். சிற்பக் கலைக்குப் பேர் போன மாமல்லபுரத்திலேயே என்னோட சிற்பக் கலைக் கூடத்தையும் தொடங்கினேன்.

சிற்பி... கற்பி!

பொதுவா மரபு சார்ந்த சிற்பங்கள்தான் அதிகமா உருவாக்கப்படுது. ஆனா, வித்தியாசமாப் புதுமையா சிற்பங்கள் செய்யணும்கிறது என்னோட ஆசை. தொடர்ச்சியா நவீன ஓவியங்களைக் கற்கவும் கவனிக்கவும் தொடங்கினேன். இப்போ நான் வடிவமைக்கிற நவீனச் சிற்பங்களுக்கு வெளிநாடுகள்ல நல்ல வரவேற்பு இருக்கு'' என்பவர், சிலைகளை வடிவமைப்பது பற்றிப் பேசத் தொடங்கினார்.

'சிற்பங்களை செதுக்குறதுக்கு முன்ன பல வடிவங்கள்ல மாடல் செஞ்சு பார்ப்பேன். சிறிய சிற்பம்னா களிமண்ல மாடலும் பெரிய சிற்பம்னா பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்ல மாடலும் செய்வேன். அதுக்குப் பிறகுதான் கல்லில் சிற்பங்களை வடிப்பேன். கிட்டத்தட்ட  நடிப்புக்கு  ஒத்திகைப் பார்க்கிற மாதிரிதான் இதுவும்.

இங்கிலாந்து, அயர்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா  போன்ற நாடுகளுக்குச் சிலைகள் செஞ்சு அனுப்புறேன். 1991-ல் அயர்லாந்தைச் சேர்ந்த விக்டர் லாங்ஹெல்டுங்கிற அறிவுஜீவி, தன்னோட எண்ணங்களுக்கு ஏற்ப சிலை செய்யணும்னு மகாபலிபுரம் வந்தார். என் செய்நேர்த்தி அவருக்குப் பிடிச்சுப்போச்சு. சிலை செய்ய முதல்முதலில் வாய்ப்பு தந்தது அவர்தான். அதில் இருந்து வருஷத்துக்கு ரெண்டு சிலையாவது அவருக்குச் செய்து கொடுத்துடுவேன்.

சிற்பி... கற்பி!

அப்படி உருவான படகோட்டி சிலை, எல்லாரையும் கவர்ந்தது. அது முழுக்க ஐரோப்பிய பாணியில் செஞ்சது. அந்தச் சிலை, மூவ்மென்ட்டில் இருக் கிற மாதிரியே இருக்கும். இப்ப அயர்லாந்தில் இருக்கு. அதேபோல 16 அடி கொண்ட ஆள் காட்டி விரல், சிறுவன் ஒருவன் தன்னைப் பிடிச்சிருக்கிற கைப்பிடியை விடுவிச்சுக்கிட்டு வெளியே வர்றது, இளைஞன் ஒருவன் தன்னோட குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழத் தயாரா வதை உணர்த்துறது மாதிரி மார்பை வேறொருத்தர் கையில் உள்ள கத்தியால்  குத்திக்கொள்வது, புத்தர் யோக நிலைக்குச் செல்றப்ப மரமாவே மாறிவிடுவதுனு புதிய சிந்தனைகளைச் சிற்பமா வடிக்கிறேன். 60 ஆயிரத்தில் இருந்து எட்டு லட்சம் மதிப்புள்ள சிலை வரை ஏகப்பட்ட சிலைகளை வெவ்வேறு நாடுகளுக்குச் செஞ்சு அனுப்பியிருக்கேன்.

இறுதிப் போர் அவலங்கள், முள்வேலி தமிழர்கள், வீரமரணம் அடைந்தவர்களின் சிலைகள் என, இலங்கைப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த  தஞ்சாவூரில் சிற்பக்கூடம் ஒன்றை உருவாக்குகிறோம். அடுத்த வருஷம் அதன் திறப்பு விழா நடக்க இருக்கு. தமிழ்நாட்டில் கும்பகோணம், சென்னை, மாமல்லபுரம்னு மூணு இடங்கள்லதான் சிற்பக் கலைக் கல்லூரிகள் இருக்கு. ஆனா, சிற்பக் கலை கற்க இப்போ இருக்கும் மாணவர்கள்கிட்ட பெரிய ஆர்வம் இல்லை. இன்னொரு பக்கம் சிற்பக் கலையில் ஆர்வம் இருந்தும் சிற்பக் கல்லூரிகள் பற்றி தெரியாத மாணவர்களும் இருக்காங்க. இந்த இரண்டு குறைகளும் போக்கப்பட்டால் சிற்பக் கலை இன்னும் ஓங்கிச் செழிக்கும்'' என்கிறார் முருகன்!

சிற்பி... கற்பி!
சிற்பி... கற்பி!

- பா.ஜெயவேல்