Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

Published:Updated:
புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக் மார்க்
புக் மார்க்

ழுத்தாளர்களின் கதைகள் மற்றும் கட்டுரைகளில் உள்ள சுவாரஸ்யமான பகுதிகளை, குறிப்புகளை, மேற்கோள்களைத் தன்னுடைய ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார் தாருண்யன் ரவி. இதுவரை 600க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கும் இவர், கடந்த இரண்டு
ஆண்டுகளாக இவற்றைப் பகிர்ந்துவருகிறார். https://www.facebook.com/tharunyan

புக் மார்க்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரண்டாம் உலகப்போர் காலத்தில்தான் நோபல் பரிசு அறிவிப்பு முதன்முதலாக நிறுத்திவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 75 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காரணம், ``தேர்வுக்குழுவில் உள்ள சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், பணம் தொடர்பான முறைகேடுகளும் உள்ள சூழலில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை அறிவிக்கும் நிலை இல்லை” என்று கவலையை வெளிப்படுத்திருக்கிறது `ஸ்வீடிஷ் அகாடமி’.

புக் மார்க்

மெரிக்க அடிமைகளின் விடுதலைக்கான குரலாக ஒலித்த `அங்கிள் டாம்ஸ் கேபின்’ புத்தகம், எனக்கு மிகவும் பிடித்த ஒரு படைப்பு. இந்த நாவல், அமெரிக்காவில் மிகப்பெரிய கிளர்ச்சியையும் உள்நாட்டுப் போரையும்  ஏற்படுத்தியது. இந்த நாவலில் வரும் சிறுமி இறக்கும் தறுவாயில் தன் அப்பாவிடம் இப்படிக் கூறுவார். `அப்பா, நம் வீட்டில் இருக்கும் அடிமையை விடுவித்துவிடுங்கள். இதுவே என் கடைசி ஆசை’. இதுதான் அமெரிக்க மக்களின் மனசாட்சியை உலுக்கியது. அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் நாவல் இது.”

- பிரின்ஸ் கஜேந்திரபாபு.

புக் மார்க்
புக் மார்க்

`சரீரம்’ என்ற பெயரில் 72 பக்கங்கள் கொண்ட நாவலை எழுதியிருக்கிறார் நரன். ``1921-ம் ஆண்டு கொடைக்கானலில் இருக்கும் பழைமையான  ஒரு தேவாலயத்தில் பியானோ இசைக்கும் 16 வயது பிரிட்டிஷ் பெண்ணுக்கும், அந்த மலைப்பகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞனுக்கும் நிகழும் காதலையும் அவர்களின் வாழ்வையும் மையமாகக்கொண்ட கதை’’ எனச் சொல்லும் நரன், இந்த நாவலை ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.

புக் மார்க்

“நமக்குத் தெரிந்த மகாபாரதக் கதையை முற்றிலும் வேறொரு கோணத்தில் அணுகிய படைப்புதான், எஸ்.எல்.பைரப்பா எழுதிய `பருவம்’ என்ற நாவல். மகாபாரதம் ஒரு காவியம் என்றால், அதை அடியொற்றி எழுதப்பட்ட பைரப்பாவின் `பருவ’மும் ஒரு காவியம்தான்”

- பொன்வண்ணன்

புக் மார்க்

விஞர் ஷங்கர ராமசுப்பிரமணியனிடம் ஒரு கேள்வி. பாடலோ, நாடகமோ, எழுத்தோ நம்மைப் பாதித்த விஷயங்களில் இருந்துதானே கசியத் தொடங்கி ஒரு படைப்பாக உருமாறுகிறது. அப்படியிருக்க, `சுயம்பு’ என்பது கலையில் சாத்தியம்தானா?  - ஜான் சுந்தர்

புக் மார்க்

தீவிர மொழிபெயர்ப்புப் பணிகளுக்கிடையில் ஏழு பெண்களைப் பற்றிய நாவல் ஒன்றை எழுதிவருகிறார் எழுத்தாளர் சி.மோகன். ``ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் ஏழு அத்தியாயங்களாக மொத்தம் 49 அத்தியாயங்களைக்கொண்டதாக இந்த நாவல் இருக்கும்’’ என்கிறார். ``மனித இருப்பைப் பற்றிய தீவிரத்தன்மை, புதிதாக எழுத வருபவர்களிடம் குறைவாக உள்ளது. அன்றாடங்களைப் பலரும் நன்றாகப் பதிவுசெய்கின்றனர். ஆனால், அவை தீவிர படைப்புத்தன்மை குறைந்த படைப்புகளாக இருப்பது வருத்தமளிக்கிறது. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, எதிர் நவீனத்துவ பாணியில் எழுதிவரும் செக் குடியரசு - பிரெஞ்சைச் சேர்ந்த மிலன் குந்தேராவின் படைப்புகள், தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டியவை’’ என்கிறார் சி.மோகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism