Published:Updated:

காமிக்ஸ் தேசம்!

காமிக்ஸ் தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
காமிக்ஸ் தேசம்!

வெய்யில்

காமிக்ஸ் தேசம்!

வெய்யில்

Published:Updated:
காமிக்ஸ் தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
காமிக்ஸ் தேசம்!
காமிக்ஸ் தேசம்!

ப்பான் பயணம் முடித்துத் திரும்பியிருக்கிறார் ஓவியர் மருது. அந்தப் பரவசம் நீங்காமலிருந்த அவரைச் சந்தித்தேன்.

“பல பத்தாண்டுக் காலங்களின் கனவு நிறைவேறி யிருக்கிறது. ஆம், ஜப்பானில் நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான ‘அனிமி கன்வென்ஷன்’ (ANIME Convention – 2018) சென்று திரும்பியிருக்கிறேன். ஜப்பான் குறித்த ஆச்சர்யங்களால் நிறைந்திருக்கிறது மனது. ஒரு மனிதனாக, கலைஞனாக  இந்தப் பயணத்திலிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

காமிக்ஸ் தேசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனிமேஷன் தொழில்நுட்ப சாத்தியங்களைத் தேடிக் கொண்டிருக்கும், உருவாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்பத் திறமையாளர்கள், படைப்பாளர்கள், தொழில்நுட்பங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பக் கருவி உற்பத்தியாளர்கள், அனைத்தையும் உரியவகையில் வணிகப்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் சந்தித்துக் கொள்வதற்கான ஓர் உலகளாவிய வாய்ப்பை உருவாக்குவது, புதிய அனிமேஷன் படங்களைத் திரையிடுவது போன்றவை இந்த அனிமி கன்வென்ஷனின் முக்கிய நோக்கங்கள். உண்மையைச் சொல்லப்போனால், இந்தியாவில், தமிழகத்தில் கலைஞர்களிடத்தில், இதுபோன்ற சர்வதேச அளவிலான கலை ஒன்றுகூடலை, சந்தைகளைப் பற்றிய அறிமுகமே இல்லை; இது சீரியஸ் ஆர்ட், இது கமர்ஷியல் ஆர்ட் என்ற குறுகிய விவாதங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

காமிக்ஸ் தேசம்!

ஜப்பானில் 95 சதவிகித மக்கள் காமிக்ஸ் புத்தக விரும்பிகள்தான். ஜப்பானில் பல்வேறு காமிக்ஸ் ஆவணக் காப்பகங்கள் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலம் முதல், இன்றுவரை ஒவ்வொரு பத்தாண்டாகப் பிரித்து அவற்றை ஆவணப்படுத்தி யிருக்கிறார்கள். எழுத்து, ஓவியம், உள்ளடக்கம், வடிவமைப்பு, அச்சு சார்ந்து காமிக்ஸ் புத்தகங்கள் எப்படி ஒவ்வொரு பத்தாண்டிலும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பார்க்க முடிகிறது. விரும்பிய புத்தகங்களை எடுத்து யாரும் படிக்கலாம். அங்கேயே மரத்தடிகளில் மெத்தைகளைப் போட்டுவைத்திருக் கிறார்கள். நான்கைந்து புத்தகங்களை வைத்துகொண்டு ஆங்காங்கே அமைதியாக மக்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காமிக்ஸ் தேசம்!

காமிக்ஸின் மார்க்கெட் மிகப் பெரியது. ஒரு வாஷிங் மிஷின் விளம்பரத்தில்கூட காமிக்ஸ் ஹீரோக்கள் இடம்பெறுகிறார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். காமிக்ஸ் மார்க்கெட்டுக்கும் அனிமி கன்வென்ஷன் போலவே கன்வென்ஷன்கள் நடக்கின்றன. ‘இந்த நூற்றாண்டுக் காலகட்டத்தை என்னால் சிறப்பாக வரைய முடியும்’ என்று ஒருவர் விளம்பரம் செய்வார், ‘இந்த கண்டெண்டில் எங்களுக்கு எழுத ஆள் வேண்டும்’ என ஒரு ஏஜென்ஸி விளம்பரம் தரும். ஆண்டுதோறும் இதில், பல லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.

AKIRA எனும் காமிக்ஸ், 1982ல் ஆயிரக்கணக்கான பக்கங்களில் வரையப்பட்டது. 2024ல் டோக்கியோ நகரம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சயின்ஸ் ஃபிக்‌ஷனாக வரையப்பட்டது. அதை 1992ல் நான் அனிம் படமாகப் பார்த்தேன். படத்தில் பார்த்த அதே டோக்கியோவை உண்மையாக நேரில் பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத சுத்தமும் பெண்களுக்கான பாதுகாப்பும் ஒருவகையில் பொறாமையாக இருந்தது.

காமிக்ஸ் தேசம்!

டோக்கியோ நேஷனல் மியூஸியம், நேஷனல் மியூஸியம் ஆஃப் வெஸ்டர்ன் ஆர்ட், ஏசியன் ஆர்ட் ஆஃப் மியூஸியம், Kyoto International Manga Museum , Osamu Tesuka Mueseum, ஹிரோஷிமா நினைவிடம், சுபாஸ் சந்திரபோஸின் சாம்பல் உள்ள கோயில், 10 மாடிகள் கொண்ட ஓவியர்களுக்கான பெரிய ஷாப்பிங் மால், அகிரா குரசோவா, ஒசு இருவரின் நினைவிடம் எனப் பல இடங்களையும் சுற்றிப் பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.

இவ்வளவு விஷயங்களுக்கு இடையிலும் இரண்டு பெண்கள் பற்றிய சித்திரங்கள் எனக்குள் அழுத்தமாகப் பதிந்துவிட்டன. வீட்டு வேலைகளுக்காக வெளி நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட கூலிப்பெண்கள், வீட்டு வேலை முடிந்ததும் அந்த வீட்டில் செருப்புகளைக் கழற்றிவிடும் இடத்தில் தங்கிக்கொள்வது எனக்குள் பெரும்பாதிப்பை உண்டாக்கிவிட்டது. ஒரு வீட்டைத் திறக்கும்போது ஒருக்களித்து அந்த சிறிய இடத்தில் மிரட்சியான கண்களோடு அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்ததும் ஒரு நிமிடம் கலங்கிவிட்டேன்.

காமிக்ஸ் தேசம்!

உட்புறம் ஏழெட்டு மாடிகள்கொண்ட ஒரு புத்தர் சிலை. அதற்குள் இயங்கும் லிஃப்டில் அதை இயக்கும் ஓர் இளம்பெண். அவள் கால்களுக்கு அருகே, மதிய உணவுக்கூடை. லிஃப்ட் பொத்தான்கள்கொண்ட சுவருக்கு முகம்கொடுத்து நிற்கும் அந்தப் பெண், எதையும் பொருட்படுத்தாமல், ‘எந்தத் தளத்தில் என்ன முக்கியமான விஷயம் இருக்கிறது, அதில் என்ன பார்க்கலாம்’ என இடைவிடாது சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஓர் ஆள் பயணித்தாலும் சரி, பத்து பேர் பயணித்தாலும் சரி, அவள் கடமையில் அவ்வளவு சிரத்தையாக இருந்தாள். லிப்ட் இயக்கும் இந்தப் பெண்ணின் குரல், அந்த கூலிப் பெண் தொழிலாளியின் கண்கள் இவையும் சேர்ந்ததுதான் ஜப்பான் என அறிந்தபோது உள்ளுக்குள் இனம்புரியாத ஓர் உணர்வு!

அனிமிற்கு அடிப்படையானது காமிக்ஸ். காமிக்ஸின் அடிப்படை தெசுக்கா. ஒசாமோ தெசுக்காவைத் தரிசிக்காமல் ஜப்பானியப் பண்பாட்டை நீங்கள் அறிந்து கொள்ளவே முடியாது. அவரை காமிக்ஸின் கடவுள் என்று மதிக்கிறார்கள். தெசுக்கா மியூசியம் சென்றிருந்தேன். அந்த ஊரின் ரெயில்வே ஸ்டேஷன் முதல் மியூஸியம் வரை எல்லாச் சுவர்களிலும் அவரது முகத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள்.

காமிக்ஸ் தேசம்!

தெசுக்கா குறித்து ஒரு முக்கியமான ஆவணப்படம் உண்டு. அதில், ஒரு காமிக்ஸ் கடையின் வாசலில் எட்டு வயது முதல் எண்பது வயது வரையிலானவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதில் ஒரு முதியவரிடம் கேட்கிறார்கள், ‘ஏன் இவ்வளவு பெரிய வரிசையில் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ அவர் பரவசத்தோடு சொல்கிறார், ‘தெசுக்கா!’. ஜப்பான் பயண நினைவுகளில் பாதியாக தெசுக்கா நிறைந்திருக்கிறார். தெசுக்கா போலவே ‘தோர்’ நாம் அறிந்துகொள்ளவும் கொண்டாடப்படவும் வேண்டிய கலைஞர்.

இந்த ஆண்டு இறுதியில் எனது ஓவியக் கண்காட்சி ஜப்பானில் நடக்கவிருக்கிறது. நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. கலையின் எல்லை தமிழ் நாட்டுக்குள்ளோ இந்தியாவுக்குள்ளோ இல்லை. அது பரந்துவிரிந்து உலகளாவியதாக மாறிவிட்டது. இன்றைய கலைஞன், அவன் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும், ஊடகத்தின் வாயிலாக உலகளாவிய செய்திகளால், தகவல்களால், கலையெழுச்சிகளால் பாதிப்பிற்குள் ளாகிறான்; எதிர்வினை செய்கிறான். நமது தமிழ் விமர்சகர்களோ 30 ஆண்டுகளுக்கு முன்பே உறைந்து போய்விட்டார்கள். ஆனால், புதிய இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism