Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

Published:Updated:
புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக் மார்க்
புக் மார்க்

சாருநிவேதிதாவிடம் ஒரு கேள்வி: “தமிழ் இலக்கியச் சூழலில் மடாதிபதிகளின் ஆதிக்கம் இருப்பதாக நினைக்கிறீர்களா? சில வாசகர் வட்டங்கள் ஆன்மீகச் சொற்பொழிவு கூட்டங்களாக மாறிவருகின்றன. இந்தச் சூழல் தொடருமெனில் எந்த மாதிரியான விளைவுகளை இலக்கியத்தில் இது உண்டுபண்ணும் என நினைக்கிறீர்கள்? நிறுவனமயமாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராகத் தொடர்ந்து நீங்கள் இயங்குவதால் இதைக் கேட்கிறேன்.” - லக்ஷ்மி சரவணகுமார்

புக் மார்க்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் படித்த, எமர்ஜென்சி காலத்தில் கடத்திக்கொல்லப்பட்ட கேரள இளைஞர் ராஜனைப் பற்றிய ‘பிணந்தின்னிகள்’ நாவல் இன்னும் என் மனதில் வலிமையாக நின்றுகொண்டிருக்கிறது. இந்திராவின் எமர்ஜென்சி ஆட்சிக்காலக் கொடுமைகளை  கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் ஓர் எழுத்தாக்கம் அது. தற்போது பழனி ஷஹான் எழுதிய ‘மோடி ஏன் நமக்கானவர் அல்ல?’ எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வெறும் குற்றச்சாட்டுகளாக அல்லாமல், ஆட்சிக்கு முன்னரும் பின்னருமான  மோடியின் இரட்டைத்தன்மையை புள்ளிவிவரங்களோடு தெளிவாக விளக்குகிறது, இந்த நூல். நண்பர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும்” - கே.பாலபாரதி

புக் மார்க்

‘அமெரிக்கதேசி’ புதினத்தைப் படைத்தவரும் அறிவியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருப்பவரும் ஐஐடி பேராசிரியருமான எழுத்தாளர் அருண் நரசிம்மனிடம் ஒரு கேள்வி; உங்களுடைய மொழிப்பிரயோகம் வியப்பிற்குரியது.  நீங்கள் எழுதும் அறிவியல் கட்டுரைகளுக்கு வேண்டிய தமிழ்ச்சொற்களுக்கு எவ்வாறெல்லாம் முயல்கிறீர்கள்...?  அவற்றிலுள்ள இடர்ப்பாடுகள் என்னென்ன? தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்கத்திற்கு மனதில் கொள்ளவேண்டிய நெறிமுறைகள் என்று எவற்றைப் பரிந்துரைப்பீர்கள்? - கவிஞர் மகுடேசுவரன்

புக் மார்க்
புக் மார்க்

விதைகளில் பயணித்துக் கொண்டிருந்த யவனிகா ஸ்ரீராம் விரைவில் சிறுகதைத் தொகுப்பை வெளியிட உள்ளார். அடுத்து நாவல் எழுதவும் திட்டம். சமகாலக் கவிதைகள் குறித்துக் கேட்டபோது  "சிலரைத் தவிர, சமீபமாக எழுதப்படுகிற கவிதைகள்  பெரும்பாலும் உரையாடல்களாவும், செய்திகளாகவும் இருக்கின்றன. சங்க காலக் கவிதைகளையும் , முந்தைய கவிஞர்களின் கவிதைகளையும் வாசிப்பதன் மூலம் கவிதைக்கான வடிவம் பிடிபடும். அது அவர்களைக் கவிதையின் அடுத்த கட்டத்திற்குச் செலுத்த உதவும்" என்றார்.

புக் மார்க்

“யுவன் சந்திரசேகர் தமிழில் மொழிப்பெயர்த்த ‘பெயரற்ற யாத்ரீகன் - சில ஜென் கவிதைகள்’ எனக்கு ரொம்பப் புடிச்ச கவிதைத் தொகுப்பு. அதை எடுத்துப் படிக்கும்போதெல்லாம் விவரிக்க முடியாத ஒரு பரவசமும் உற்சாகமும் இருக்கும். என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். இன்னும் அவருக்கு அதைத் திருப்பித் தரலை. தரப்போறதும் இல்லைன்னு இதன் மூலமா தெரிவிச்சுக்கிறேன்” - நலன் குமாரசாமி

புக் மார்க்

ந்தியாவில் நெடுங்காலமாகக் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் வெற்றிக் கதைகளைப் பேசுகிறது ‘Building Alternatives’ என்கிற புத்தகம். கூட்டுறவுச் சங்கத்தின் உழைப்பு, ஏற்றத்தாழ்வுகள், கற்றுக்கொண்ட பாடங்கள், கூட்டுறவுச் சமூகத்தால் எழுப்பப்பட்ட சகாப்தம் என பல கதைகளைச் சொல்கிறது.  சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோயிஸ உழைப்பை, நிஜத்தில் வாழ்ந்துகாட்டி உயர்ந்த பலரின் உண்மைக் கதைகள் நிரம்பிய கதைப்பெட்டிதான் இந்த ’Building Alternatives’ புத்தகம்.  மார்ச் மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம், தனித்தனி மனிதர்களாக வாழ்வதில் இருக்கும் வெறுமையையும், கூட்டு உழைப்பின் மகத்துவத்தையும் சொல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism