எல்லாத்தையும் மாத்துறேன்னு
அய்யா நீங்க சொன்னீங்க
என்ன பாவம் செஞ்சோமின்னு
எங்கள இப்படி கொன்னீங்க?

அம்மாவோட ஆட்சியின்னு
கதய அளந்து விட்டீங்க
சும்மா கெடந்த எங்கள ஏய்யா
சொல்லாமலே சுட்டீங்க?

போராடவே கூடாதுன்னு
போட்டீங்களா திட்டத்த
பொறுக்கியெல்லாம் ஒண்ணாச்சேந்து
பொசுக்கிட்டீங்க சட்டத்த

ஊரே பத்தி எரியிறப்போ
கொடுக்குறீங்க பேட்டிய
அவுந்துபோச்சு ஒங்க மானம்
இறுக்கிக் கட்டுங்க வேட்டிய

காலமெல்லாம் நீங்க போடும்
நாடகத்த நிறுத்துங்க
கவலையோட நாங்க வாழ
கவருமெண்டு எதுக்குங்க?

போலீஸோட பாதுகாப்பில்
போறவரு முதல்வரா?
சொந்த சனத்தக் கொல்லும் நீங்க
சொல்லுங்கய்யா தலைவரா?

ஆலையோட கழிவயெல்லாம்
கொட்டுறாங்க கடலுல
அய்யா ஒங்க ஆட்சியோட
நாத்தம் தாங்க முடியல

பொறுப்பில்லாம நடக்கும் நீங்க
இன்னும் எத்தன நாளைக்கி
வெளுத்துப்போச்சி ஒங்க வேசம்
போங்க வேற வேலைக்கி

அலுவல் ஆய்வு கூட்டமுன்னு
அதட்டுறீங்க மோசமா
எழவு கணக்க எண்ணிப் பாத்து
கொறையுதேன்னு ரோசமா

காக்கா குருவி செத்தாக்கூட
கண்ணீர் சிந்துற நாட்டில
கேக்க நாதி இல்லாமத்தான்
உசுர விட்டோம் ரோட்டுல

வாயில்லாத பூச்சி எங்க
வயித்தெரிச்சல் அடங்குமா?
வாரி வாரி சேக்கும் ஒங்க
வாழ்க்கையாச்சும் வெளங்குமா?

ஆலைகொடுத்த காசு ஒங்க
அறிவுக் கண்ண மறச்சிச்சா
ஏழை எங்க உசுரக் கொல்ல
ஆடர் எழுதி அனுப்புச்சா

கொதிச்சிப்போன நாங்க எங்க
கோவத்தையும் காட்டல
அடக்கி ஆள நெனக்கும் உங்கள
அப்பாவியாப் பாக்கல

ஊழலலால பொழைக்கும் நீங்க
உண்மையான மனுசனா?
உசுரக்கொல்ல எத்தன பர்சென்ட்
வாங்குனீங்க கமிஷனா?

எல்லாத்தையும் மாத்துறேன்னு
அய்யா நீங்க சொன்னீங்க
என்ன பாவம் செஞ்சோமின்னு
எங்கள இப்படி கொன்னீங்க?

அம்மாவோட ஆட்சியின்னு
கதய அளந்து விட்டீங்க
சும்மா கெடந்த எங்கள ஏய்யா
சொல்லாமலே சுட்டீங்க?

போராடவே கூடாதுன்னு
போட்டீங்களா திட்டத்த
பொறுக்கியெல்லாம் ஒண்ணாச்சேந்து
பொசுக்கிட்டீங்க சட்டத்த

ஊரே பத்தி எரியிறப்போ
கொடுக்குறீங்க பேட்டிய
அவுந்துபோச்சு ஒங்க மானம்
இறுக்கிக் கட்டுங்க வேட்டிய

காலமெல்லாம் நீங்க போடும்
நாடகத்த நிறுத்துங்க
கவலையோட நாங்க வாழ
கவருமெண்டு எதுக்குங்க?

போலீஸோட பாதுகாப்பில்
போறவரு முதல்வரா?
சொந்த சனத்தக் கொல்லும் நீங்க
சொல்லுங்கய்யா தலைவரா?

ஆலையோட கழிவயெல்லாம்
கொட்டுறாங்க கடலுல
அய்யா ஒங்க ஆட்சியோட
நாத்தம் தாங்க முடியல

பொறுப்பில்லாம நடக்கும் நீங்க
இன்னும் எத்தன நாளைக்கி
வெளுத்துப்போச்சி ஒங்க வேசம்
போங்க வேற வேலைக்கி

அலுவல் ஆய்வு கூட்டமுன்னு
அதட்டுறீங்க மோசமா
எழவு கணக்க எண்ணிப் பாத்து
கொறையுதேன்னு ரோசமா

காக்கா குருவி செத்தாக்கூட
கண்ணீர் சிந்துற நாட்டில
கேக்க நாதி இல்லாமத்தான்
உசுர விட்டோம் ரோட்டுல

வாயில்லாத பூச்சி எங்க
வயித்தெரிச்சல் அடங்குமா?
வாரி வாரி சேக்கும் ஒங்க
வாழ்க்கையாச்சும் வெளங்குமா?

ஆலைகொடுத்த காசு ஒங்க
அறிவுக் கண்ண மறச்சிச்சா
ஏழை எங்க உசுரக் கொல்ல
ஆடர் எழுதி அனுப்புச்சா

கொதிச்சிப்போன நாங்க எங்க
கோவத்தையும் காட்டல
அடக்கி ஆள நெனக்கும் உங்கள
அப்பாவியாப் பாக்கல

ஊழலலால பொழைக்கும் நீங்க
உண்மையான மனுசனா?
உசுரக்கொல்ல எத்தன பர்சென்ட்
வாங்குனீங்க கமிஷனா?