Published:Updated:

கவிதைகள் - சூ.சிவராமன்

ஓவியங்கள் : டிராட்ஸ்கி மருது

பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள் - சூ.சிவராமன்

சின்னஞ்சிறு வேண்டுகோள்

கவிதைகள் - சூ.சிவராமன்

திப்பிற்குரிய ராணுவத் தலைமையே
உன்னிடம் ஒன்றை யாசிக்கிறோம்
முகாம் ஆயுதக்கிடங்கில் பழுதுபட்டுத் துருவேறிப் புதையும்
எம் மூதாதயரை பற்களில் அரைத்துத் தின்ற
டாங்கியின் உதிரிபாகங்களை
நாங்கள் எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்
வெடிச்சத்தங்கள் நின்றுபோனது
ராணுவ அணிவகுப்புகள் மறைந்தன
பிணக்குவியல் எங்குங்காணோம்
போர் நின்றுவிட்டது
அமைதி திரும்பிவிட்டது
ஆனாலும்...
ஆனாலும்...
பசி துரத்துகிறது
ஒரு கவளத்திற்கான பணம்
உங்கள் ஆயுதங்களில் உறைந்து நிற்கிறது
கடைசி விண்ணப்பமிது
பசியை நிறுத்துங்கள்
அல்லது
போரைத் துவக்குங்கள்
கொஞ்சமே கொஞ்சம் பேர்
இரைப்பைகளோடிருக்கிறோம். 

கவிதைகள் - சூ.சிவராமன்

நிலம்

நா வறள வான்பார்த்துக் கிடக்கும் குளங்கள்
எருமைகள் பழக்கத்தில் வந்து திரும்ப
பிசுபிசுத்தப் பள்ளங்களில் ஆகாயத்தாமரைகள்
நீலம்பாரிக்கின்றன
செழித்த சீமைக்கருவேலத்தில் திறந்துகிடக்கும் காக்கைக்கூடுகள்
குக்கூக்களற்ற காற்றின் இரைச்சல்
வெயிலின் உக்கிரத் தகிப்பு
வயலெங்கும் விளைந்து சிரிக்கிறது கரந்தை
ஆடுடைத்த எருக்கம்புதர் நெடுக வடியும் பால்
பசுவொன்று எக்கியுடைக்கிறது ஒதியங்கிளைகளை
தனித்துவிடப்பட்ட பனை நிழலில் ஒண்டி நிற்கிற முனி
விழுந்து சிதறிய பனம்பழ வாசனையில் கிறங்குகிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு