Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

“ `ஜெயலலிதா மனமும் மாயையும்’ என்ற புத்தகத்தைத் தற்போது படித்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். ``ஜெயலலிதா பற்றி நிறைய படிச்சிருக்கேன். ஆனா, அவங்களுடைய ஆரம்பகாலம் எப்படியிருந்ததுங்கிறதை ஒரு பெண்ணோட பார்வையில படிக்கணும்கிறது நெடுநாள் விருப்பம். அது எழுத்தாளர் வாஸந்தியால் நிறைவேறியிருக்கு” என்கிறார்.

புக் மார்க்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லெனின் தலைமையில் நடந்த ருஷ்யப் புரட்சியைக் கண்முன் நடக்கும் சித்திரமாக வரைந்து காட்டும் நாவல்தான் அலெக்செய் தல்ஸ்தோய் எழுதிய `அக்கினிப்பரீட்சை’. இந்த நாவல் 1914-ம் ஆண்டில் உலகப்போரின் மத்தியில் தொடங்கி, 1921-ம் ஆண்டில் நடந்த ருஷ்ய உள்நாட்டுப் போர் வரையிலான பின்னணியில் ருஷ்யப் புரட்சியின் கதையை உயிர்ப்பான மனிதர்களின் வழியாக விவரிக்கிறது. லெனின், ஸ்டாலின், திரேஸ்கி முதலானோர் நாவலில் வந்து போவார்கள். 20 ஆண்டு உழைப்பில் சுமார் 2000 பக்க நாவலாக இதை எழுதியுள்ளார் அலெக்செய் தல்ஸ்தோய். மூன்று பாகங்கள்கொண்ட இந்த நாவல் 1976, 77, 78 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு பாகமாக வெளிவந்தது. வெளியிட்டவர்கள் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம். தமிழின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான தொ.மு.சி. ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்டது இந்நூல்.  கடந்த நாற்பது ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யப்படாமல் இருக்கும் இந்த நாவல், மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய ஒன்று.

புக் மார்க்

யக்குநர் மிஷ்கினுக்குப் புத்தகங்கள்மீது தீராக்காதல். தன்னிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடு வருபவர்களிடம் முதலில் அவர் கேட்பது, ``கடைசியாக எந்தப் புத்தகத்தை வாசித்தீர்கள்?” என்பதுதான். அதேபோல, கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராகச் செல்லும்போது, ``தவறாமல் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்’’ என்று பரிந்துரைப்பார். அந்தப் புத்தகம், ராபர்ட் ஜேம்ஸ் வால்லர் எழுதிய `தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கன்ட்ரி (The Bridges of Madison County)’. மிஷ்கினுடைய பேவரிட் புத்தகம் ஒன்று உள்ளது. அது டேவிட் மம்மட்டின் `ஆன் டைரக்டிங் ஃபிலிம் (On directing film).’

புக் மார்க்

தாராபுரத்தில் பள்ளித்தோழராக இருந்த நண்பர் எஸ்.வி.ராஜதுரைக்கு,

எந்த ஒரு நிறுவனத்தின் பின்புலமும் இல்லாமல், கல்விப்புலம் வியக்கும்வண்ணம் எப்படி இத்தனை தீர்க்கமான நூல்களையும் கட்டுரைகளையும் உங்களால் எழுத முடிந்தது? பார்வைப் பிரச்னையுடன், நூலகங்கள் இல்லாத ஊரில் இருந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரைகளை எப்படி உருவாக்குகிறீர்கள்? இந்த உத்வேகம் எங்கிருந்து வருகிறது? உங்களுடன் பேசும்போது திரைப்படத்தில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த ஆர்வமும் புரிதலும் தெரிகின்றன. ஆனால், ஏன் சினிமா பற்றி எழுதுவதில்லை?

- தியடோர் பாஸ்கரன்

புக் மார்க்

2015, கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள். கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய உக்ரைனில் திடீரென பவர் கட். இது ஏதோ சின்ன டிரான்ஸ்ஃபார்மர் கோளாறு அல்ல. ஏறக்குறைய 2 லட்சம் பேரை பாதித்த கரன்ட் கட். காரணம், ரஷ்ய ஹேக்கர்கள். உக்ரைனின் பவர் சப்ளை சிஸ்டத்துக்குள் புகுந்து அவர்கள் செய்த சில்மிஷம் இது. ``வருங்காலத்தில் இதுபோன்ற சின்னச்சின்ன சில்மிஷங்கள், நாட்டையே அச்சுறுத்தும் போராக மாறலாம்’’ என எச்சரிக்கிறார் நியூயார்க் டைம்ஸ் இதழியலாளர் டேவிட் ஸேங்கர்! அவரின் `The Perfect Weapon’ புத்தகம் இதைப் பற்றியதுதான். வளர்ந்த ஒரு நாட்டின் மின் விநியோகம் தொடங்கி தொலைத்தொடர்பு சாதனங்கள், ராணுவ ரகசியங்கள், அணு ஆயுதப் பராமரிப்பு வரை சகலமும் கணினி வழியேதான் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த கன்ட்ரோல் எதிரி நாட்டின் கைக்குக் கிடைத்தால், போர் தொடுக்கவெல்லாம் அவசியமே இல்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே அந்த நாட்டைப் பணியவைக்கலாம் என ஏகப்பட்ட தரவுகளோடு நிரூபிக்கிறார் டேவிட். அடுத்த உலகப்போர், தண்ணீருக்காக அல்ல... டேட்டாவுக்காக நடக்கும் என்பது அவரின் வாதம். `அவ்வளவு மோசமா எல்லாம் ஆகாது’ எனச் சமாதானம் சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புக் மார்க்

``கடந்த இரண்டு வாரமாக, மறைந்த மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியைப் பற்றிய நினைவுமலரைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பெரியார் நடத்திய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து, குன்றக்குடி அடிகளாரின் பள்ளியில் ஆசிரியராக இருந்து, பிறகு காமராஜர், ஈ.வெ.கி.சம்பத், கலைஞர் போன்ற தலைவர்களின் பத்திரிகைகளில் செய்தி ஆசிரியராக, தலையங்க ஆசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசியின் அனுபவங்கள், அரிதானவை... அருமையானவை! ஒவ்வொரு பத்திரிகையாளரும் வாசிக்கவேண்டிய நூல் இது.’’

- இரா. முத்தரசன், சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர்

புக் மார்க்

மொத்தம் நூறு தலைப்புகளில் மானுடவியல் நோக்கில் தமிழர்களின் பண்பாடு பற்றி எழுதிவருகிறார் மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி. இதுவரை 50 தலைப்புகளிலான கட்டுரைகள் எழுதி முடித்துவிட்டார். இதுதவிர, பல்வேறு வட்டார மொழிகளுக்கான தனித்தனி அகராதிகள் வந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், தமிழர் மானுடவியல் சார்ந்தும் கலைச்சொல் அகராதி கொண்டுவரும் பணியையும் செய்துகொண்டிருக்கிறார்.