Published:Updated:

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

Published:Updated:
காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

சென்னை கலைக்குழுவினரால் ‘காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம்’ எனும் நாடகம், சமீபத்தில் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. ‘மாற்று நாடக இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த 6-ம் ஆண்டு நாடக விழாவில்தான் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடக இயக்குநர் பிரளயன் இதை நெறியாள்கை செய்திருந்தார்.

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

‘மத்தவிலாசப் பிரஹஸனம்’ எனும் பனுவல், கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ அரசன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அங்கதச் சுவைகொண்ட நாடகமாகும். பகவதஜூகம் எனும் இன்னோர் அங்கத நாடகத்தையும் மகேந்திரவர்மன் எழுதியிருக்கிறார். அங்கதம், ஒரு தனித்த இலக்கிய வகைப்பாடாக நமது மரபில் இருந்திருக்கிறது என்பதற்கு இந்நாடகத்தின் பழைமையே சாட்சி.

ஒரு கலவையான மதச்சூழல் நிரம்பிய, இறைவழிபாட்டில் மாறுபட்ட சமய நெறிமுறைகள் பின்பற்றப்பட்ட 7-ம் நூற்றாண்டில் இந்நாடகம் நிகழ்கிறது. வைசம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றுக்கும் இடையே கோட்பாட்டுச் சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது அன்று. ராஜ்ஜியத்துடனான தங்களது தொடர்புகளை விஸ்தரித்துக்கொள்ள ஒவ்வொரு மதமும் தங்களுக்குள் போட்டியிட்டுக்கொண்டது.மகேந்திரவர்மன் சைவத்தை ஆதரிக்கும் மனப்போக்கில் இருந்ததாகத் தெரிகிறது. எனினும், இதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அதனால், அவரது அந்த மதச்சார்பு நிலையை ஏற்காத மற்ற மதங்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டின. இந்நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் சத்தியசோமன் என்கிற காபாலிகன், தேவசோமை என்கிற அவனுடைய காதலி, நாகசேனன் என்கிற புத்த பிக்கு, பாப்ருகல்பன் என்கிற பாசுபதத் துறவி மற்றும் ஒரு பைத்தியக்காரன்.

காபாலிகனும் தேவசோமையும் சிவனை வழிபடுபவர்கள். மது, இறைச்சி, யோகபோகம் என எதையும் விலக்காமல் அதுவே சிவனை அடைவதற்கான முக்தி வழியெனத் தீவிரமாக நம்புகிறவர்கள். இளம் புத்த பிக்குவோ, ஒரு வணிகன் அளித்த விருந்தில் வயிறார மாமிசத்தை உண்டுவிட்டு, ‘ஏன் புத்தர் மதுவையும் மாதுவையும் தமக்கு விலக்கிவைத்தார் எனச் சிந்திக்கிறான். பகவான் புத்தர் அப்படிச் செய்திருக்கமாட்டார், ஒருவேளை தம் மதத்தின் கிழட்டு வயோதிகப் புத்தபிக்குகள் உண்மைகளைத் தம்மிடம் மறைத்திருக்கூடும். எனவே, பௌத்தத்தின் மூலப் பாடத்தைத் தேடிப் படிக்கவேண்டும்’ எனச் சந்தேக மனத்தோடு இருக்கிறான்.

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

காபாலிகனின் பிச்சைப் பாத்திரமான கபால ஓடு காணாமல்போய்விடுகிறது. இனி சிவனை எப்படி அடைவது என அவன் தெருவெங்கும் புலம்பத் தொடங்குகிறான்.  ‘ஒரு நாயோ ஒரு புத்த பிக்குவோதான் கபால ஓட்டைத் திருடிச் சென்றிருக்க வேண்டும்’ எனச் சந்தேகிக்கிறான். அதன்பொருட்டு, புத்த பிக்குவுக்கும் அவனுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது. பரஸ்பரம் மதங்களின் வழிபாட்டு முறைகள் அவர்களது உரையாடலில் கீழ்மைப்படுத்தப்பட்டுக் கேலிக்குள்ளாகின்றன. அவர்களைச் சமாதானப்படுத்த வந்த பாசுபதத் துறவியின் வார்த்தைகளையும் இருவரும் ஏற்க மறுக்கின்றனர். வழக்கு மன்றம் சென்று இதைத் தீர்த்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கும்போது, கபால ஓட்டைக் கவ்விச் சென்ற நாய், அதைக் கவ்வியபடியே அங்கு வருவதை எல்லோரும் பார்க்கின்றனர். உண்மையைப் புரிந்துகொண்டு சமாதானமாகிப் பிரிந்து செல்கின்றனர். இதுவே மகேந்திரவர்மன் எழுதிய பனுவலின் முக்கியக் கதைச் சுருக்கம்.

இந்நாடகத்தின் பாத்திரங்கள், தாம் ஏற்றுக்கொண்டிருக்கும் சமயத்தை அல்லது கடவுள் நம்பிக்கையை உயர்த்திப் பேசுவதிலும் விரும்பாததை ஒதுக்கித் தள்ளுவதிலும் இகழ்வதிலும் புதைந்திருக்கும் சமூக அரசியலை இனங்காண விழைவதே நாடக இயக்குநர் பிரளயனின் பிரதான நோக்கமாக இருக்கிறது. ஒரு நாடகப் பிரதியில் வெளிப்படுகிற குறுகிய அளவிலான உணர்வுச் சொல்லாடல்கள் சட்டென கணநேரத்தில் நாம் தாண்டிப் போவதாகத்தான் இருக்கும். ஆனால், அதன் முழுமைப்பட்ட உள்ளுணர்வு, பிரதிக்குள் மறைந்தேதான் இருக்கிறது. அதை அடையாளம் காணும் தேடலே, தன்னளவில் அந்நாடகப் பிரதியை முழுமையாக்குவதோடு வாசகர் அல்லது பார்வையாளருக்கும் மறுவாசிப்பிற்கான வழியையும் திறந்துவிடும்.

எந்த மதம் ஆகச்சிறந்தது; பின்பற்றத்தக்கது என்கிற மையச்சரடு, மகேந்திரவர்மனின் மத்தவிலாசப் பிரஹஸனத்தில் இழையோடு வதை 7-ம் நூற்றாண்டிலிருந்து இப்போதைய சூழலுக்கும் பொருத்த முடியும் என்கிற அரசியல் புரிதல்தான் பிரளயனின் ‘காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம்’ எனும் நாடகமாக உருமாறியிருக்கிறது. காஞ்சி மாநகரம் அத்தனை சமயக் குளறுபடிகளை மையமாகக்கொண்ட நிலமாக இருந்திருக்கிறது. மாறுபட்ட, தாறுமாறான கலாசாரப் பழக்கங்களைத் தாண்டித்தான் இன்றைய நடைமுறையில் இருக்கிற மத வழிமுறைகள் அமைந்திருக்கின்றன என்ற கருத்தோட்டமே நாடகத்தின் அடிநாதமாக இருக்கிறது. 

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

புத்தரின் சிந்தனைகளைத் திருடித்தான் பிராமணர்கள் பிரம்ம சூத்திரத்துக்குப் பாஷ்யங்களை எழுதுவதாக ஒரு புத்த பிக்கு தீவிரமாக நம்புகிறான். தனது கபால ஓடு (பிச்சைப் பாத்திரம்) காணாமல் போனவுடனேயே, நிச்சயம் அதை ஒரு நாய் அல்லது புத்த பிக்குதான் திருடியிருக்கக்கூடும் என சிவனை வழிபடும் காபாலிகன் தன் மனைவியிடம் சொல்கிறான். நாய் அல்லது புத்த பிக்கு என்கிற ஒப்பீட்டுச் சொல்லாடல், மதங்களுக்குள் இருந்த காழ்ப்புஉணர்வையும் சேர்த்தே நமக்கு உணர்த்திவிடுகிறதல்லவா?

வழக்குமன்றமான நீதிமன்றத்துக்கு அனைவரும் நீதியை நாடிப்போகும் காட்சி, பழைய பனுவலில் இல்லை. எனினும், வழக்கு மன்றத்தைச் சந்தேகமுறும் கூறு அதில் பொதிந்திருக்கிறது. அதைச் சமகாலத்துக்குப் பொருந்துபடியாகச் சித்திரித்ததில் இயக்குநர் பிரளயனின் அரசியல் அங்கதம் மிளிர்கிறது. நீதிமன்றத்துக்கு வரும்போது அங்கு இருட்டு பரவுகிறது.

“என்ன இருண்டுவிட்டது?’’

“இருண்டுவிட்டதெனில், நாம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டோமென்று பொருள்.’’

“நீதியை நீதிபதிகள் தாங்குகிறார்கள், நீதிபதிகளை நிதி தாங்குகிறது.’’

“யாரோ எழுதிக் கொடுத்ததைத்தானே இப்போது நீதிபதிகள் தீர்ப்பாகச் சொல்கிறார்கள்’’ என்ற பிரளயனின் உரையாடல்கள் கூர்மையானவை.

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

சமணத்தை சைவம் விழுங்குகிறது என்பதை நீதிமன்ற விசாரணைக்குவரும் பிற வழக்குகளின் வாதப் பிரதிவாதங்களின்போது எளிதாக உணரமுடிகிறது. நியாயம் என்பது ஸ்தூலமாகத் தெரிந்தாலும் கூட நீதிபதிகள் அதிலிருந்து கைகழுவி நழுவுகிறார்கள். நல்லசேனன் வழக்கு அதற்கோர் உதாரணம். காலம்சென்ற மஹாராஜா சிம்ம விஷ்ணு, 32 ஆண்டுகளுக்கு முன் சமணப் பள்ளியின் ஸ்தாபகர் வஜ்ர நந்திக்குரவருக்கு பள்ளன்குளம் கிராமத்தில் 102 வேலி 16 மா அளவு நிலத்தைப் பள்ளிச்சந்தமாக அளித்திருக்கிறார். அந்த நிலத்தின் வருவாயில்தான் எல்லா வர்ணங்களையும் சார்ந்த 102 மாணவர்கள் படித்துவருகின்றனர். அதற்கான சான்றை நல்லசேனர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். ஆனால், வேகவதி ஆற்றங்கரையில் புதிதாக உருவான கடிகையைச் சார்ந்த பிராமணர்களால் அந்நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. தவிர, அந்தக் கடிகையில் 18 கிராமங்களின் அக்ரஹாரங்களிலிருந்து வருகிற 36 பிராமண மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு மஹாராஜா மகேந்திரவர்மன் அந்த நிலத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார் என்ற சான்றையும் நீதிமன்றத்தில் பிராமணர்கள் சார்பில் உருத்திரசர்மர் சமர்ப்பிக்கிறார்.

மன்னன் ஏதோ அறியாது பிழைசெய்திருக்கிறான் என்பதை நீதிபதிகள் உணர்ந்தாலும் நீதியளிக்கத் தயங்குகிறார்கள். மன்னரின் தவற்றை மன்னரே சரிசெய்ய வேண்டும் எனத் தங்களுக்குள் பேசிவிட்டு, வழக்கைத் தள்ளுபடிசெய்கிறார்கள். இந்தக் காட்சி, இன்றைய நீதிமன்றங்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளின் தீர்ப்புகளைப் பார்வையாளர்களின் நினைவில் நிழலாடச் செய்கிறது.

சமகால அரசியல்போக்குடன் தொடர்புப்படுத்துகிற பல்வேறு புள்ளி களையும் இந்நாடகம் தன்னகத்தே சுமந்திருக்கிறது. ‘ராஜா எல்லா மதத்தையும் சமமாத்தான் பாக்கணும். ஆனா, அவரு எந்த மதத்துக்கு சகாயம் பண்றாரோ அவனுங்க சும்மாவா இருப்பானுங்க, அவனுங்க அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கிட்டு ஆட ஆரம்பிச்சுடுவானுங்க...’ என்ற பொதுமக்களின் குரலாக ஒலிக்கும் வசனம் 7-ம் நூற்றாண்டின் நாடகத்திற்கானது அல்ல. இன்றைய அதிகார பீடங்களைக் குறித்து உருவாகியிருக்கும் அவநம்பிக்கையைக் காட்டுவதாகும்.

காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு

‘காபாலகம், பாசுபதம், காளாமுகம், பிறகு வேள்வி செய்யறது, வேதம் ஓதுறது இதையெல்லாம் கலந்துகட்டி செஞ்சதுதான் இப்ப இருக்கிற சைவம்...’ என்ற குரல் நமக்கு சில மாறிவிட்ட வாழ்முறைமைகளை எடுத்துச் சொல்கிறது. பண்பாட்டுரீதியிலான சிதைவுகளை உள்ளடக்கியே இன்று நாம் பேணும் கலாசாரம் நின்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சைவம் என்ற சொல், இருபொருள் கொண்டதாக நடைமுறையில் தொழிற்படுகிறது.

“சைவம் என்பது மதத்தின் பெயர்தான். உணவுப் பழக்கத்தையும் சைவம்னு சொல்றது வழக்கம்.”

‘சுக்கூர் சாயபு, மூன்று முறை மெக்காவுக்குப் போய் வந்தவர்; நேரம் தவறாமல் நமாஸ் செய்கிறவர்; முட்டைகூட சாப்பிடுவதில்லை; அவரு முஸ்லீமா இருந்தாலும் சுத்த சைவம்!’ என்கிற வசனங்கள் அரங்கப் பார்வையாளர்களிடம் உணர்ச்சி மேலிடச் செய்கின்றன.

இன்றைய அரசியல் கலாசாரச் சூழலுக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்து புரிந்துகொள்கிற குணாம்சங்களையும் இடைவெளிகளையும் மகேந்திரவர்மனின் பழைய நாடகப் பிரதி தன்னியல்பாகவே கொண்டிருக்கிறது. பௌத்தத்தைக் கடுமையாகச் சாடுகிறது. அப்பிரதியின் மையப்பாத்திரம், சிவனை வழிபடும் தேவசோமை. தனது பிச்சைப் பாத்திரமான கபால ஓடு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில், தன்னிலை மறந்து தேவசோமையைப் பைத்தியக்காரனுக்குத் தானமளிக்கத் துணிகிறான் காபாலிகன். தன்னையே ஒரு பொருட்டாகக் கருதாத அளவுக்குத் தாம் வழிபடும் சிவனுடைய ஒரு கபாலப்பாத்திரம் இருக்குமானால், இனியும் அந்த வழிபாடு தேவையில்லை என முடிவெடுத்து பௌத்தத்தைத் தழுவும் தேவசோமை, பிரளயனின் முற்போக்குப் பாத்திரமாக நெஞ்சில் நிறைகிறாள். அசல் பிரதிக்குள் புதைந்திருக்கும் விடுபடல்களின் மீது நின்றே இம்முடிவை பிரளயன் முன்வைக்கிறார்.

தவிர, தனது அரசியல் மற்றும் விசாலமான பண்பாட்டுப் புரிதலை உள்ளிருத்தி, ஒரு நாடக இயக்குநராக பலத்த சலனங்களை இந்த ‘காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்த விலாச பிரஹஸனத்தில்’ பிரளயன் ஏற்படுத்தியிருக்கிறார்.