Published:Updated:

புக் மார்க்

புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

புக் மார்க்

Published:Updated:
புக் மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக் மார்க்
புக் மார்க்

20-ம் நூற்றாண்டின் மகத்தான இசைக்கலைஞர்களில் ஒருவர் பாலசரஸ்வதி (1918-1984). பரதநாட்டியத்துக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது வாழ்க்கையை விளக்கும் நூல்தான் `பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’. வரலாறு, சமூக மரபுகள், நவீனத்துவத்துடன் இந்தியக் கலை - அறிவுலகத்துக்கு ஏற்பட்ட ஊடாட்டங்கள் ஆகியவற்றைத் தழுவி விரியும் இந்த நூலை, அதன் தீவிரம் குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார் அரவிந்தன். `டக்லஸ் எம். நைட் ஜூனியரி’ன் ஆங்கிலப் பிரதியின் பொருளும் தொனியும் கனமும் தமிழிலும் இருக்கின்றன. இந்த நூலுக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் மொழிபெயர்ப்புக்கான விருது (2017) சமீபத்தில் கிடைத்திருக்கிறது.

புக் மார்க்

``சக புனைவெழுத்தாளர்களுக்கு, நூற்றாண்டைக் கடந்துவிட்ட வளமான தமிழ்ச் சிறுகதையின் நெடும்பரப்பில் விலங்குகளுக்கும் பிராணிகளுக்கும் அது அளித்திருக்கக்கூடிய இடம் மிகக் குறைவு. முன்னோடிகளின் படைப்புகளில் வெகுசில கதைகள் உள்ளன என்றபோதும், அவர்களுடைய மொத்தப் படைப்புலகுடன் ஒப்புநோக்கினால் அது மிகச்சிறு சதவிகிதமே. வைக்கம் முகம்மது பஷீர் (மலையாளம்) போல தமிழில் அவற்றைத் தங்கள் ஆக்கங்களில் நடமாடவிட்டவர்கள், கைவிரல்களின் எண்ணிக்கைக்கும் குறைவானவர்களே. ந.முத்துசாமி (`மாடுகள்’) போலவோ ஜெயமோகன் (`யானைகள்’) போலவோ அவற்றை ஒரு தனித்த பாத்திரமாக அதன் குணவிசேஷ இயல்புகளுடன் படைப்புகளில் கைக்கொண்டவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருக்கிறார்களே ஏன்?’’

- கே.என்.செந்தில்

புக் மார்க்

``என் மாணவப் பருவத்தில் பாதிப்பை உண்டாக்கிய புத்தகம், காந்தியின் `சத்தியசோதனை’. அதே நினைவுகளுடனே ஐந்தாறு மாதங்கள் இருந்தேன். கொள்கையை, கருத்தைத் தன் வாழ்க்கையில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கடைப்பிடித்த அவரின் வாழ்க்கை வரலாறு அந்த அளவுக்கு ஈர்த்தது.

ரசியல் வாழ்க்கைக்குள் வந்த பிறகு, மார்க்சியத்தை வெறும் கோட்பாடாக மட்டும் கருதிக்கொண்டிருந்ததை மாற்றி, நடைமுறையில் அதை எப்படிப் பொருத்திப்பார்ப்பது என்பதை உணர்த்திய லெனினின் `என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலையும் மறக்க முடியாது.

இப்போது, க.அருணபாரதி எழுதிய `பேரழிவில் தமிழர் தாயகங்கள்’ எனும் நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழர் மண் எப்படி மாற்றப்பட்டுவருகிறது என்பதைச் சான்றுகளுடன் முன்வைக்கிறது இந்த நூல்.’’

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

புக் மார்க்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஸ்னோலின். டைரியில் அவர் எழுதி வைத்திருந்த கவிதைகள் தற்போது `ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற த.மு.எ.க.ச-வின் 14-வது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ஸ்னோலினின் குடும்பத்துக்கு வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

புக் மார்க்

`அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்த ஆண்டு யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், விருதைத் தன் அம்மாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை, தற்போது வெளிக்கொண்டுவரும் முயற்சியில் `யாவரும்’ பதிப்பகத்துடன் இணைந்து செயல்பட்டுவருகிறார். நிகோஸ் கசந்தாக்கிஸின் `ஜோர்பா த கிரீக்’ என்ற நாவலையும் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.

புக் மார்க்

Thomas Friedman எழுதிய `Thank you for being late’ என்ற புத்தகத்தை இந்த நூற்றாண்டின் முக்கியக் குரலாகக் கருதுகிறேன். சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிந்தைய உலகத்தின் தன்மையை விரிவாக எழுதியிருக்கிறார்.

``கவிஞர் கலைமதி ஆனந்த் எழுதிய `நிறமி’ கவிதைத் தொகுப்பை வாசித்தேன்.
`சில்லு சில்லாய் நொறுங்கி விழும்
என் பிம்பங்களின்
எதிர்க்காட்சியாய் ஊடுருவும் உன் உருவம்.
நொறுங்கிய ஒளிச்சிதறலை
ஒட்டிவைத்து பொம்மை செய்கிறேன்’
என்று நுட்பமான உணர்வியல் பேசுகிறார்.
`என் அறையின் ஒற்றைச் சாளரம்
விரும்பும் நொடியில்
இயற்கையை இறக்குமதி செய்கிறது’
என்று நவீன இயல்புகளை அலங்காரம் இல்லாமல் பதிவுசெய்கிறார்.

- கபிலன் வைரமுத்து