Published:Updated:

ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

உணர்வுகள்ஆர்.வைதேகி

ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

உணர்வுகள்ஆர்.வைதேகி

Published:Updated:
ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா
ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

`உன்னை எண்ணிப்பார்க்கையில் கவிதை கொட்டுது...

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...’ என யாருக்கோ, எதையோ எழுத நினைத்தபோது, கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வார்த்தைகள் சிக்காமல் தவித்திருக்கிறீர்களா?

கடிதம் எழுத நினைத்து என்ன எழுதுவது, எப்படி எழுதுவது எனத் தெரியாமல் காகிதங்களைக் கசக்கி வீசிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

`குணா’ படத்தில் கமலின் உளறல்களைப் பாட்டாகப் படித்துக்காட்டிய நாயகியைப்போல உங்களுக்கும் இருக்கிறார் நிஜ நாயகி ஒருவர்!

சென்னைப் பெண் கவிப்ரியா மூர்த்தியிடம் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டால் போதும். அடுத்த இரண்டு நாள்களில் உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கித் தருவார். ஒவ்வோர் எழுத்திலும் அழகியல் மிளிரும்.

Poetarita மூலம் கவிப்ரியா முன்னெடுத்திருக்கும் முயற்சி, உறவுச் சிக்கல்களுக்கும் உணர்வுச் சிக்கல்களுக்கும் மறைமுகத் தீர்வாகிறது.

``இன்ஜினீயரிங்கும் எம்.பி.ஏ-வும் முடிச்சிட்டு ஒரு நிறுவனத்துல வேலைபார்த்திட்டிருந்தேன். எழுதுறது சின்ன வயசுலயிருந்தே ரொம்பப் பிடிச்ச விஷயம். படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு வந்தப்போ மறுபடி தீவிரமா எழுத ஆரம்பிச்சேன். `ஐ டோன்ட் வியர் சன் ஸ்க்ரீன்’, `டர்ட்டி மார்ட்டினி’னு ரெண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டேன்.  ஃப்ரெண்ட்ஸ்ல யாருக்கு என்ன எழுதணும்னாலும் என்கிட்டதான் வந்து கேட்பாங்க. சாதாரண லெட்டரா இருந்தாக்கூட `சொல்ல வந்ததை கரெக்டா சொல்லியிருக்கேனான்னு பாரு’னு கேட்பாங்க. இன்னும் சிலர், `எனக்கு நிறைய சொல்லணும்னு தோணுது. ஆனா, அதையெல்லாம் கவிதை நயத்தோடு சொல்லத் தெரியலை. கொஞ்சம் அழகுபடுத்திக் கொடுக்கிறியா?’னு கேட்பாங்க.

கிரீட்டிங் கார்டு வாங்க கடைக்குப் போனா, பொதுவான வரிகளோடுதான் கிடைக்கும். தான் சொல்ல நினைக்கிற விஷயத்தை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கணும்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கும். ரெடிமேடு கார்டுகளில் அது சாத்தியமில்லை. இவங்க எல்லோருக்குமானதுதான் என் முயற்சி’’ - இன்ட்ரோ சொல்கிற கவிப்ரியா, பெங்களூரில் வசிக்கிறார். ஆனாலும், இந்தியாவின் எந்த மூலையில் இருப்போருக்கும் கடிதங்களும் கவிதைகளும் எழுதித் தருகிறார்.

ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இ-மெயில் அல்லது ஃபேஸ்புக் மூலமா என்னைத் தொடர்புகொள்ளலாம். அப்புறம் அவங்களுக்கு வசதியான நேரத்துல போன்ல பேசுவேன். அவங்க சொல்ற தகவல்களைக் குறிச்சுப்பேன். அதுல பெஸ்ட் நினைவுகளையும் எமோஷன்ஸையும் முக்கியமா வெச்சு எழுதுவேன். யார், யாருக்கு என்ன சொல்ல நினைக்கிறாங்கங்கிறதை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் யோசிச்சு எழுதிக் கொடுக்கிறதுதான் இதுல ஹைலைட்.

கடிதமாகவா, கவிதை வடிவிலா எப்படி வேணும்னு கேட்கிறாங்களோ, அந்த வடிவத்துல அவங்க சொல்ல நினைக்கிற விஷயத்தை அழகான வார்த்தைகள் சேர்த்து எழுதி, பிரின்ட் பண்ணிக் கொடுப்பேன்...’’ - ஆர்வம்கூட்டுகிற கவிப்ரியா, வார்த்தைக் கணக்கு வைத்துக்கொண்டு கடிதங்களோ, கவிதைகளோ எழுதுவதில்லை.

``உணர்வுகளை அப்படி வார்த்தைக் கணக்கில் அடக்கிட முடியாதில்லையா? என்கிட்ட மத்தவங்க பகிர்ந்துக்கிற சம்பவம் தொடர்பான முன்கதைகளையும் நான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். அதுல உள்ள மெல்லிய உணர்வுகளை மிஸ்பண்ணிடக் கூடாது.  என்னுடைய வேலை அவங் களுடைய உணர்வுகளை எழுத்தாக்கிக் கொடுக்கிறது மட்டும்தான். என் சொந்தக் கருத்துகளுக்கு அங்கே இடமில்லை.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது ரகசியம் காப்பது. ஃபேஸ்புக் மூலமாகவும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும்தான் முதலில் இந்த முயற்சியை ஆரம்பிச்சேன். முதல் போஸ்ட் போடும்போதே அடுத்தவங்களுடைய பர்சனலை எந்தக் காரணம் கொண்டும் வெளியில் கசியவிட மாட்டேன்னு  அழுத்திச் சொல்லியிருந்தேன்.  இதுவரைக்கும் நான் எழுதிக் கொடுத்த அத்தனை பேரும்தான் இதற்கு சாட்சி’’  - நம்பிக்கை தருபவர், ஆங்கிலம் தவிர்த்து வேறு மொழிகளில் எழுதாததற்கும் அதையே காரணமாகச் சொல்கிறார்.

``எனக்கு ஆங்கிலம்தான் சரளமா வரும். வேறு மொழிகள்ல செய்யணும்னா, அதுக்கான ஆள்களை நான் தேடணும். அவங்க எந்தளவுக்கு ரகசியம் காப்பாங்கன்னு யோசிக்கணும். இப்படி நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறதுதான் காரணம்.’’

ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

கடிதங்களும் கவிதைகளும் பெரும்பாலும் ரசனை சுமப்பவை. கவிப்ரியாவின் அனுபவமோ வேறாக இருக்கிறது.

``உறவுச்சிக்கல்கள் குறித்த விஷயங்களுக் காகக் கேட்கிறவங்கதான் அதிகம். பேச்சின் போது தன்னை அறியாம விடுற ஒரு வார்த்தை, உறவுகளுக்குள்ள பிரிவை ஏற்படுத்திடலாம். அப்படிச் சொன்ன வார்த்தைக்கு எந்த உள்ளர்த்தமும் இல்லைங்கிறதை மறுபடி பேச்சுவார்த்தையின் மூலம் புரியவைக்க, பலரும் சிரமப்படுறாங்க. அந்த மனநிலையை என்கிட்ட பகிர்ந்துப்பாங்க. காயப்பட்டதா நினைக்கிறவங்களுக்கு எதிராளியின் மனநிலையைக் கடிதமாகவோ, கவிதையாகவோ அழகு சேர்த்துக் கொடுக்கும்போது சட்டுனு இளகிடுறாங்க, புரிஞ்சுக்கிறாங்க’’ - எழுத்தோடு உளவியலையும் சேர்த்துச் செய்கிறவர், இந்த வேலைக்காக வாங்குவது 199 ரூபாய் மட்டுமே.

``பணத்தையெல்லாம் தாண்டிய மனநிறைவுதான் எனக்குப் பெரிது. ஒருவருக்குப் பயன்படுத்திய வார்த்தை களையும் வரிகளையும் இன்னொருவருக்குப் பயன்படுத்த மாட்டேன். புதுசுப் புதுசா யோசிப்பேன். என்னுடைய வாசிப்புப் பழக்கம்தான் என்னை இந்த விஷயத்துல அப்டேட்டடா வெச்சிருக்கு. அதையும் தாண்டி வார்த்தைகளே தோணாம நின்ற தருணங்களும் இருக்கு. ஆனாலும், வாசிப்பைவிட மாட்டேன்.  ஏதோ ஒரு புத்தகம் என் தேடலுக்கு வழிகாட்டிடும்.’’

வாசிப்பின் வசியம்!