Published:Updated:

படி படி படி

படி படி படி
பிரீமியம் ஸ்டோரி
படி படி படி

ஏழுக்கு ஏழுப.தினேஷ்குமார்

படி படி படி

ஏழுக்கு ஏழுப.தினேஷ்குமார்

Published:Updated:
படி படி படி
பிரீமியம் ஸ்டோரி
படி படி படி
படி படி படி

பிடித்த தாய்மொழி புத்தகம்

அர்த்தனா பினு (நடிகை)

மலையாளத்துல எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டாமூழம்’ நாவல் என் ஆல்டைம் ஃபேவரைட். பொதுவாக இதிகாசங்களில், மனிதர்களால் செய்ய முடியாத அற்புதங்களை நிகழ்த்தும் சாகச கதாபாத்திரங்களை வடிவமைப்பாங்க. ‘ரண்டாமூழ'த்தின் கதாபாத்திரங்களைச் சாதாரண மனிதர்களாகத்தான்  உருவாக்கி யிருப்பாங்க. அந்த மனிதர்களுக்குள் நிகழும் ஒவ்வொரு எமோஷனையும் அவ்வளவு அழகா சொல்லியிருப்பாங்க. அற்புதமான மகாபாரதக் கதையை பீமனுடைய `பாயின்ட் ஆஃப் வியூ'வில் அழகா  சொல்லியிருப்பார் வாசுதேவன் நாயர்.

படி படி படி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம்

நிர்மலா கொற்றவை (எழுத்தாளர்)

ரங்கநாயக்கமா எழுதிய Economics for Children [Lessons based on Marx’s ‘Capital’] நூல் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சமுதாயத்தை எப்படிப் புரிந்துகொள்வது, பிரச்னைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பது போன்ற மிகவும் அவசியமான விஷயங்களை விளக்க, காரல் மார்க்ஸ் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். அவர் எழுதிய முக்கியமான நூல் `மூலதனம்'. மூலதனம் பற்றிக் குறிப்பிடும்போது, ‘அந்தப் புத்தகத்தைப் படிக்கவே முடியலை. புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கு’னு நிறைய பேர் சொல்வாங்க. அந்தப் புத்தகத்தைக் குழந்தைகளுக்கே புரியும் வண்ணம் எளிமைப்படுத்தி ரங்கநாயக்கமா எழுதியிருக்காங்க.

2015-ம் ஆண்டு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இப்போது அந்தப் புத்தகத்தை ‘குழந்தைகளுக்கான பொருளாதாரக் கல்வி’ என்ற பெயரில் நானே மொழிபெயர்த்திருக்கிறேன்.

படி படி படி

பிடித்த ஆன்மிகப் புத்தகம்

மகதி
(பாடகி)


பரஹம்ச யோகானந்தா எழுதிய ‘Autobiography of a yogi’ புத்தகம்தான் அது. நான் பத்தாவது படிக்கும்போது இதைப் படிச்சேன். இது கதைப் புத்தகம் கிடையாது. ஆனால், ஆச்சர்யப்படுத்தக்கூடியது. தனிமையிலும் பயணங்களிலும் படிக்க மிகவும் உகந்தது. மகாவதார் பாபாஜி வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் நயத்தோடு சொல்லியிருப்பாங்க.

படி படி படி

பிடித்த காதல் புத்தகம்

ரவீணா ரவி
(டப்பிங் கலைஞர்)


காலேஜ் டைம்லதான் சேத்தன் பகத்தின் ‘2 ஸ்டேட்ஸ்’ படிச்சேன். ரொம்பவும் விறுவிறுப்பான காதல் கதை. சவுத் இந்தியன் பொண்ணும் நார்த் இந்தியன் பையனும் காதலிக்கிற லவ்லி ஸ்டோரி.

ஆலியா பட்  நடிப்புல இந்தக் கதையைப் படமாகவும் எடுத்தாங்க. புத்தகத்துல இருந்த நிறைய விஷயங் களைப் படத்துல மிஸ் பண்ணாங்க. அதனால, படத்தைவிட எனக்கு புத்தகம்தான் ரொம்ப பிடிச்சிருந்தது.

படி படி படி

பிடித்த நகைச்சுவை புத்தகம்

தேனம்மை லெக்ஷ்மணன் (எழுத்தாளர்)

சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ மிக இயல்பான நகைச்சுவைகளை உள்ளடக்கிய அற்புதமான புத்தகம். ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் நடக்கும் திருமணத்தை வெளிநாட்டு தம்பதி நடத்தி வைப்பது போன்ற கதையமைப்பு எக்காலத் துக்கும் சுவராஸ்யமாக இருக்கும். இந்தக் கதையை யாரையும் பாதிக்காத கண்ணியமான நகைச்சுவை அம்சங்களுடனும் மிகவும் நேர்த்தியாக  எழுதியிருப்பார் சாவி.

படி படி படி

திரும்பத் திரும்பப் படிக்கும் புத்தகம்

 தேவிகா (செய்தி வாசிப்பாளர்)

‘பொன்னியின் செல்வன்’தான். அந்தக் காலத்து சோழர்கள் பற்றி பல அரிய தகவல்களைச் சொல்லியிருப்பாங்க. படிக்கும் போது நம்ம தமிழ்நாட்டுல இவ்வளவு அழகும் வீரமும் இருந்ததான்னு அவ்வளவு ஆச்சர்யமா இருக்கும். ஒவ்வொரு காட்சியும் நம்ம கண் முன்னாடி ஒரு படமாவே ஓடும். இந்த அற்புதத்துக்காகவே `பொன்னியின் செல்வன்' புத்தகத்தை அடிக்கடி படிப்பேன்.

படி படி படி

பிடித்த நாவல்

டோஷிலா உமாசங்கர் (நிகழ்ச்சித் தொகுப்பாளர்)

கல்லூரி நாள்கள்லதான் ‘சிவகாமியின் சபதம்’ நாவல் படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. முதல் பத்து பக்கங்களிலேயே நாவல் அவ்வளவு விறுவிறுப்பாக மாறிவிட்டது. தினமும்  கல்லூரி முடிச்சு வந்த உடனே நாவல் வாசிப்பில் மூழ்கிடுவேன். ஒரு வாரத்தில் `சிவகாமியின் சபதம்' நாவலை முழுசா படிச்சு முடிச்சேன். அதன்பிறகு சில நாவல்கள் படிச்சிருந்தாலும்கூட, சிவகாமியின் சபதம் எப்போதுமே எனக்கு ஒருபடி மேலதான்.