ஒரு காலத்தில்

ஒரு காலத்தில்
எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன
தூசிப்புகை கண்ணீரில் கலக்க
நள்ளிரவொன்றில் சாம்பலாக்கினோம்.
எங்களிடம் காலத்தைச் சேமித்த
சில புகைப்படங்கள் இருந்தன
பொலித்தீன் பைகளிற் சுற்றி
பெருமரங்களினடியில் புதைத்தோம்
ஊழியில் மரங்கள் சாய்ந்தன
காலமே காலத்தைத் தின்றது
கொல்லப்படுவதற்கு முன் சொல்லப்படுவதற்கென
எங்களிடம் சில வார்த்தைகள் இருந்தன
மேலும் சில காலம் உயிர்வாழ்தலின் பொருட்டு
அவற்றின் கழுத்தை நாங்களே நெரித்துக் கொன்றோம்
ஒரு காலத்தில்
எங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்
அகாலத்தில் சாக்குருவி கூக்குரலிட
அவர்களை ரகசியமாய்ப் புதைத்து
அழுது மீண்டோம்.
‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு’
இரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து
பிள்ளைகள் மெதுவாகத்தான் படிக்கிறார்கள்.

குற்றவுணர்வு

இருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின்
நடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது
எனது குற்றவுணர்வு.
தவறிழைக்காமலே
கண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது
நள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்
முதுகு குலுங்குகிறது
குழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்
தன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது
பூட்டப்பட்ட அறைக்குள் நானிருந்தாலும்
என் பிரதிநிழலாய் எப்போதும்
கூடத்தினுள் நின்றுகொண்டிருக்கிறது
பிச்சைக்காரர்களின் விழிகளைத் தவிர்த்து
சில்லறைகளாகவும்
தெருநாய்களுக்குப் பிஸ்கெட்டாகவும்
சுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்
அவளறியாது விட்டுச்செல்லும் செருப்பாகவும்
விழும் குற்றவுணர்வே!
உன்னைக் கொல்வதென்றால்
புத்தகங்களுக்கு முந்தைய பிராயத்திற்குப்
பின்னகர வேண்டும்!

வீட்டிலிருந்து தப்பித்தல்

வீட்டிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட பெண்
தான் வந்தடைந்த தனி வீட்டின்
சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்
நாட்காட்டியின் தாள்களை
கொத்தாகக் கிழித்தெறிகிறாள்
அலைபேசியை அணைத்துவைத்த பின்
காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை
கண்ணாடியில் பார்க்கிறாள்.
இனி அவளது
பொழுதுகளுக்கும்
உணவுவேளைகளுக்கும் பெயர்களில்லை
நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்
படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு
விசனமுங் கொள்ள வேண்டியதில்லை
இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான
உள்ளாடைகளைக் கழற்றி எறிந்ததுபோல
கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்
கழற்றி சுழற்றி வீசுகிறாள்
அவை மேலே மேலே செல்கின்றன
பூமிக்குத் திரும்பவே மனமற்ற
ஒரு பறவையைப் போல.

இன்னும் வெகுதூரம்

நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்
உன் கண்களிலிருந்த மான்குட்டி வெளியேறிவிட்டது
கனவுகளின் ஒளி அவிந்த விழிகளில்
கடலாழத்தின் இருள்.
நீர்மை வற்றி
சம்பிரதாயத்திற்குக்கூட புன்னகைக்க முடியாமற்போய்விட்ட உன்னுதடுகள்!
புரிகிறது
அவமானங்களின் கருந்துளைகளுள் இறங்கிவிட்டிருக்கிறாய்
ஆயினும்
சிரிக்கப் பயிற்சி எடு
இந்த வாழ்வு மரணத்திற்கு நிகரானது என்றாலுங்கூட
நாம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்!

- தமிழ்நதி,

ஓவியங்கள் : வேலு

ஒரு காலத்தில்

ஒரு காலத்தில்
எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன
தூசிப்புகை கண்ணீரில் கலக்க
நள்ளிரவொன்றில் சாம்பலாக்கினோம்.
எங்களிடம் காலத்தைச் சேமித்த
சில புகைப்படங்கள் இருந்தன
பொலித்தீன் பைகளிற் சுற்றி
பெருமரங்களினடியில் புதைத்தோம்
ஊழியில் மரங்கள் சாய்ந்தன
காலமே காலத்தைத் தின்றது
கொல்லப்படுவதற்கு முன் சொல்லப்படுவதற்கென
எங்களிடம் சில வார்த்தைகள் இருந்தன
மேலும் சில காலம் உயிர்வாழ்தலின் பொருட்டு
அவற்றின் கழுத்தை நாங்களே நெரித்துக் கொன்றோம்
ஒரு காலத்தில்
எங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்
அகாலத்தில் சாக்குருவி கூக்குரலிட
அவர்களை ரகசியமாய்ப் புதைத்து
அழுது மீண்டோம்.
‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு’
இரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து
பிள்ளைகள் மெதுவாகத்தான் படிக்கிறார்கள்.

குற்றவுணர்வு

இருதிரியாய்ப் பிளந்து தர்க்கமிடும் சர்ச்சைப் பாம்பின்
நடு அண்ணத்தில் நின்று திகைக்கிறது
எனது குற்றவுணர்வு.
தவறிழைக்காமலே
கண்ணீரின் முன் தலைகவிழ்ந்து நிற்கிறது
நள்ளிரவில் ஒலிக்கும் வரண்ட இருமலில்
முதுகு குலுங்குகிறது
குழந்தை விழுந்து மூக்குடைத்துக்கொண்ட தரையில்
தன்னால் சிந்தப்படாத தண்ணீரைத் தேடுகிறது
பூட்டப்பட்ட அறைக்குள் நானிருந்தாலும்
என் பிரதிநிழலாய் எப்போதும்
கூடத்தினுள் நின்றுகொண்டிருக்கிறது
பிச்சைக்காரர்களின் விழிகளைத் தவிர்த்து
சில்லறைகளாகவும்
தெருநாய்களுக்குப் பிஸ்கெட்டாகவும்
சுடுவெயிலில் படுத்திருக்கும் முதியவளின் அருகில்
அவளறியாது விட்டுச்செல்லும் செருப்பாகவும்
விழும் குற்றவுணர்வே!
உன்னைக் கொல்வதென்றால்
புத்தகங்களுக்கு முந்தைய பிராயத்திற்குப்
பின்னகர வேண்டும்!

வீட்டிலிருந்து தப்பித்தல்

வீட்டிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட பெண்
தான் வந்தடைந்த தனி வீட்டின்
சுவர்க்கடிகாரத்தைக் கழற்றி மறைத்துவைக்கிறாள்
நாட்காட்டியின் தாள்களை
கொத்தாகக் கிழித்தெறிகிறாள்
அலைபேசியை அணைத்துவைத்த பின்
காலத்துறப்பின் களிப்பேறி மினுங்கும் முகத்தை
கண்ணாடியில் பார்க்கிறாள்.
இனி அவளது
பொழுதுகளுக்கும்
உணவுவேளைகளுக்கும் பெயர்களில்லை
நண்பர்களாலோ எதிரிகளாலோ தட்டப்படாத கதவில்
படியும் காலத்தின் தூசியைக் குறித்தொரு
விசனமுங் கொள்ள வேண்டியதில்லை
இறுக்கமானதும் அவசியமற்றுப் போனதுமான
உள்ளாடைகளைக் கழற்றி எறிந்ததுபோல
கற்பிக்கப்பட்ட ஒழுங்கனைத்தையும்
கழற்றி சுழற்றி வீசுகிறாள்
அவை மேலே மேலே செல்கின்றன
பூமிக்குத் திரும்பவே மனமற்ற
ஒரு பறவையைப் போல.

இன்னும் வெகுதூரம்

நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்
உன் கண்களிலிருந்த மான்குட்டி வெளியேறிவிட்டது
கனவுகளின் ஒளி அவிந்த விழிகளில்
கடலாழத்தின் இருள்.
நீர்மை வற்றி
சம்பிரதாயத்திற்குக்கூட புன்னகைக்க முடியாமற்போய்விட்ட உன்னுதடுகள்!
புரிகிறது
அவமானங்களின் கருந்துளைகளுள் இறங்கிவிட்டிருக்கிறாய்
ஆயினும்
சிரிக்கப் பயிற்சி எடு
இந்த வாழ்வு மரணத்திற்கு நிகரானது என்றாலுங்கூட
நாம் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்!

- தமிழ்நதி,

ஓவியங்கள் : வேலு