Published:Updated:

“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

Published:Updated:
“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

`பிரதமர் மோடியைக் கொல்ல சதிசெய்தார்கள்’ என்று  குற்றம் சாட்டப்பட்டு, எழுத்தாளர் களின் கருத்துச்சுதந்திரம் நெறிக்கப்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் ஆனந்த் டெல்டும்டே.  ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.

“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!”

“இந்த விஷயத்தைக் கொஞ்சம் உற்று கவனித்தால், பாஜக அரசு இதைச் சட்ட ஒழுங்குப் பிரச்னையாகக் காட்ட நினைத்தது. இந்த அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், மத சாதியப் பிரிவினை உத்தி, சிறுபான்மையினர், தலித்துகளுக்கு ஆதரவற்ற நிலை போன்றவற்றைக் குறித்துப் பேசும் எல்லோரும், இவர்களால் குறிவைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். `நக்சலைட்’ என்னும் வார்த்தையின் மீது, முற்றிலுமாக எதிர்மறையான கருத்தை அரசு ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. மக்களின் நலன்களுக்காக அரசின் திட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பவர்கள்மீது அதை வசதியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

என் வீடு சோதனைக்குள்ளாகியிருக்கிறது. என் வீட்டில் இருந்தவர்களிடம் கடுமையாக  நடந்திருக்கிறார்கள். எனக்கு நடந்தது இது. நாளை நீங்களாகவும் இருக்கலாம்.”

“நீதித்துறையிடமிருந்து எந்த விதமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறீர்கள்?”

“பீமா கோரேகான் நிகழ்வு, விழாவில் நடத்தப்பட்ட வன்முறை, செயல்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் மீது திணிக்கப்படும் நக்சல் முத்திரை என எல்லாவற்றின் மீதும் உடனடியாக விசாரணை ஆணையம் அமைப்பது நீதித் துறையின் கடமை.”

“அம்பேத்கரின் உறவினர் நீங்கள். அம்பேத்கர் காலத்தில் இருந்த தலித் அமைப்புகளுக்கும், தற்போதைய தலித் அமைப்புகளுக்கும் இருக்கும் வேறுபாடாக எதைப் பார்க்கிறீர்கள்?”

“நல்ல கேள்வி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிடைத்த கல்வி உள்ளிட்ட வாய்ப்புகளின் வழியாக உருவான விழிப்பு உணர்வின் காரணமாக, நாட்டின்  பல்வேறு  இடங்களிலும் தலித் அமைப்புகள் தோன்றின. மிகப்பெரிய அறிவுஜீவியான அம்பேத்கரின் வருகைக்குப் பின்னர், அந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் போக்கு உருவானது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்குப் பின்பு, அனைவருக்கும் வாக்கு என்ற கொள்கையை நாம் ஒப்புக்கொண்டோம். அதிகமான அளவில் இருந்ததாலும், குறைவான செலவில் கிடைத்ததாலும்  தலித் மக்களின் ஓட்டுகள் எல்லாக் கட்சிகளுக்கும் தேவைப்பட்டன. ஆகவே, ஆளுங்கட்சிகள் தலித்துகளை ஆசை காட்டி வளைத்துப் போடத் தீவிரம் காட்டினர். அதன் விளைவாக, 1957-லிருந்தே பட்டியல் இனத்தவரின் இயக்கங்கள் துண்டு, துண்டாகச் சிதறின.  அம்பேத்கர் காலத்திற்கும் இன்றைக்கும் இருக்கும் தலித் அமைப்புகளுக்கான வேறுபாடுகள் அதிகம்.”

“தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


“தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றவர் ஒரு தலித். அந்தக் கோரிக்கையே அபத்தமானது. அரசாங்க நடை முறைகளிலோ, ஆவணங்களிலோ தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்தக் கோரிக்கை, அப்படி இதற்கு முன்னரும் பயன்படுத்தப் பட்டதில்லை. நீதிமன்றத்திற்கு இது குறித்த போதுமான விவரம் தெரிந்திருந்தால் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால், வழக்கை ஏற்றுத் தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது. தொலைத் தொடர்புத்துறை ஊடகங்கள் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

மக்கள் எதைச் சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்ற வரிசையில் எந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கும் அளவுக்கு நகர்ந்திருக்கிறார்கள்.

தலித்  என்பது ஓர் அரசியல் சொல். தொடக்கத்தில் ஜோதிபாய் புலேவும், பின்னர் அம்பேத்கரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சில அறிவுஜீவிகள் அம்பேத்கர் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அம்பேத்கர் இதைப் பல இடங்களில் பயன்படுத்தி யிருக்கிறார். தீண்டப்படாத மக்களை ஒன்றுதிரட்டும் சொல்லாக அதைப் பயன்படுத்தினார். ஒரு சாதிக்குள் சுருங்கும் குறுகல்வாத மனப்பான்மை அவருக்குக் கிடையாது. மகர், பறையர், பள்ளர் போன்றவைதான் சாதியேயன்றி, தலித் என்பது சாதியைக் குறிக்கும் சொல் அல்ல.”

“ஓர் எழுத்தாளராக இன்றைய தேவை என்ன என்று நினைக்கிறீர்கள்?”

“ இன்று அபாயமான, அச்சுறுத்தலான காலத்தில் வாழத் தள்ளப்பட்டிருக்கிறோம். பா.ஜ.க-வைவிட காங்கிரஸ் சிறப்பாக ஆட்சி செய்தது என்ற பொருளில் இதைச் சொல்லவில்லை. பா.ஜ.க அரசாங்கத்தின் அனைத்துக் கொள்கை முடிவுகளுக்கான வேர் காங்கிரஸிடம்தான் இருக்கிறது. வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸிற்குக் குறிப்பான கொள்கை கிடையாது. ஆனால், பா.ஜ.க-வுக்கு பாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட, தங்கள் லட்சியமான இந்து ராஷ்டிரத்தை அமலாக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. அதை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரம் அவர்களுக்கு இருக்கிறது.

ஏனென்றால், மக்களை நீண்ட காலத்திற்கு ஏய்க்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். ஆகவே, அபாயத்தை முன்னுணர்ந்து தற்காலிக வேறுபாடுகளைக் கடந்து, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இணையவேண்டும்.”

ம.குணவதி - ஓவியம்: பிரேம் டாவின்ஸி 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism