ஃபாரீன் ட்ரிப் சென்றுள்ள த்ரிஷா, நீச்சல் குளத்தில் டால்பினுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்ற வாசகத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு செம ரெஸ்பான்ஸ்!

‘சவரக்கத்தி’ படத்துக்குப் பிறகு தமிழில் சரியானபடி வாய்ப்பு அமையாததால், டோலிவுட் பக்கம் பறந்துவிட்டார் நடிகை பூர்ணா. ‘அதுகோ’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார்.

ராஜபாண்டி இயக்கத்தில் அர்விந்த்சாமி - ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கும் புதிய படத்துக்கு ‘கள்ளபார்ட்’ எனப் பெயர் வைத்துள்ளனர். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

‘சுந்தரபாண்டியன்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்’ படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடி, கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆரவ் கமிட்டாகியிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. 45 நாட்கள் நடக்க இருக்கும் இந்த ஷெட்யூலில் பாதி படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘மாரி 2’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை வரலட்சுமி. ஜேகே இயக்கும் புதிய படத்தில் பார்வையற்றவராக நடித்து வருகிறார். படத்துக்கு ‘ராஜபார்வை’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

டோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் டாப்ஸி, தமிழில் ஹீரோயினை மையப்படுத்திய கதை ஒன்றில் நடித்து வருகிறார். அது இந்தியில் அவர் நடித்த ஒரு ஹாரர் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்கிறார்கள்.

கேள்வி கார்னர்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எப்படிப் பார்க்குறீங்க?

சன்னி லியோன்: எல்லாத் துறைகளிலுமே இந்தப் பிரச்னை இருக்கு. நம்ம சமூகம் பெண்களுக்கு எதையும் எதிர்கொள்ற மனப்பக்குவத்தையும் விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தணும். யாரையும் துன்புறுத்தவோ வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை கிடையாதுங்கிறதை புரிஞ்சுக்கிட்டாலே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சிடும்னு நினைக்கிறேன்.

அர்த்தனா பினு: இந்த ஒரு போட்டோவுலதான் என் மொத்த வாழ்க்கையும் இருக்கு. ஏன்னா, எனக்கு எல்லாமும் என் அம்மாவும் தங்கையும்தான். அவங்களோட இருக்கற இந்த போட்டோவை நான் எப்பவும் பாதுகாக்க நினைக்கிறேன். இதை எடுத்த நண்பர் பகத் சிங்குக்கு நன்றி.

சைலன்ஸ்

நேஷனல் ஹைவேஸிலிருந்து விலகிவந்து தனிக்கட்சி நடத்திவரும் தலைவரை அடிக்கடி கிழக்குக் கடற்கரை சாலையில் பார்க்க முடிகிறதாம். முன்னாள் வெள்ளித்திரை, இந்நாள் சின்னத்திரை யங் குயின் நடிகைக்கு இங்கு தனியாக சொகுசு பங்களா கட்டிக்கொடுத்துள்ளாராம் அவர்.

கட்சி சர்ச்சையில் தலைநகருக்கும் தன் நகருக்குமாக கவலையுடன் பறந்துகொண்டிருக்கிறார் அந்தத் தெற்கத்தித் தலைவர். அவரின் வாரிசுக்கு சினிமாவில் உள்ள சில்மிஷப் புள்ளிகளுடன் நெருக்கம் அதிகம். இப்போது ஆக்டிவாக இல்லாவிட்டாலும், திரையுலகத் தொடர்பு தொடர்கிறது. ஆனால், ‘‘எல்லோரும் நம்மை கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துவருகிறார்கள். இப்போதைக்கு யாருடனும் சுற்ற வேண்டாம்’’ என்று வாரிசுக்குக் கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறாராம் தலைவர்.