Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

மணவிழா

வா
யிலில்
யாசகர்கள் கையேந்தி நிற்க
வயிறு வீங்கிய இலை
பிரசவிப்பது குப்பைகளை.

பரிமாறும்போது
தடுக்காதவை
இடம் கிடைத்த அவசரத்தில்
கழுவாதவை.

பீடா போட்ட பிறகு
ஐஸ்கிரீம் குளிர
வாய் கொப்புளிக்க
வாஷ்பேசினில்
தலை குனியும் வேளை
யாரும் பார்க்காமலிருக்க வேண்டும்.

மொய் எழுதாத விழாக்களில்
பெயருக்கு மேலே
தொகையை எழுதிய கவருடன்
கைகுலுக்கும் நிழற்படம்
முக்கிய சாட்சி.

காலணிகள் தொலையாத
கல்யாண மண்டபத்தில்
புகையும் மேடையில்
புனிதப் பொருள்களுடன்
சரிசமமாய் உலாவும் காலணிகள்
சமத்துவத்தின் காரணிகள்.

-  காரைக்குடி சாதிக்

சொல்வனம்

மிச்சம்

றந்த நாய்க்குட்டி
உடை பிடித்திழுக்கும்
புதைத்த இடத்தின் முட்செடி!

- தக்ஷன், தஞ்சை

வீடு பேறு

னசுக்குப் பிடித்த வண்ணம் பூச
வாசலில்  மல்லிகைச் செடி நட
கல்யாண போட்டோவைப் பயமில்லாமல்
சுவரில் ஆணி அடித்து மாட்ட
குழந்தைகளின்
சுவர்ச் சித்திரங்களை
நாள் கணக்கில்
அழிக்காமல் ரசிக்க
நினைக்கும்போதெல்லாம்
வாட்டர் டேங்க் நிரம்ப நிரம்ப மோட்டார்போட
சத்தம்போட்டு பிஞ்சுகள்
ஓடியாடி விளையாட 
ஐந்தாம் தேதிக்கு அதிகமானாலும் எல்லோர் கண்ணிலும் பயமில்லாமல் தென்பட 
மனசுக்குப் பிடித்த 
உறவுகளும்  பறவைகளும் எப்போதும் வந்து
இஷ்டம்போல் தங்கிச் செல்ல
எப்படியாவது
ஒவ்வொருவருக்கும் வேண்டும்
சொந்தமாய் ஒரு வீடு..!

- பழ.அசோக்குமார்

அருவா...

ரியாய் நினைவில் இல்லை
சமையலுக்கு
முள் நறுக்கும்போதுதான்
அறிமுகம் ஆகியிருக்க வேண்டும் அருவா எனக்கு.
சாமிக்குத் தேங்காய் உடைப்பதற்கு
சுத்தியல் கிடைக்காத நேரங்களில்
சுவரில் ஆணியடிக்க
பம்பரம், கில்லி செய்து விளையாடவென
அத்தியாவசியமான
ஒன்றாகவேபட்டது.
போனமாதம்
ஊரில் நடந்த சாதிக்கலவரத்திற்கு
முன்புவரை.
பிறகான நாள்களில்
மரம் வெட்டும் சத்தம் கேட்டாலே
மனம் அதிர்கிறது...
யாரும் கையில் வைத்திருக்கும் எதுவும்
அருவாவெனக் காட்சிப்பிழை செய்கின்றன கண்கள்.
கொலைக்கருவியைச்
சுமந்திருக்கும்
குலசாமிமீதும்
கொஞ்சம் கோபம் முற்றத்தான் செய்கிறது.

- சாமி கிரிஷ்

ஓவியம்: ரமணன்