‘பரதக் கலைஞர் ராஜஸ்ரீ வாரியர், தமது ‘நர்த்தகி’ என்ற நூலின் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘மனம் சோர்வடைந்துபோகும்போதெல்லாம் உணர்வின் கரை நோக்கி என்னைத் திரும்ப அழைத்துச் சென்ற சஞ்சய் சுப்ரமணியனின் ஆனந்த பைரவி தில்லானாவுக்கு நன்றி.’ அது உண்மை! இசை தவிர்த்த பிற துறைப் படைப்பாளிகளின் செல்லப்பாடகர் என்று சஞ்சயைப் பாராட்டலாம். இங்கு இடம்பெறும் மூவரின் கவிதைகள் அதற்குச் சாட்சி’ - சுகுமாரன்

மகத்தான ஈ - இசை

நீள்விசும்பினில் உயரப் பறந்தும்
மா நிலத்திடை ஆழ உழுதும்
சஞ்சய் பாடுகிறார்
சஞ்சய் பாடுகையில்
மைக்கும் ஓர் இனிப்புப் பண்டம்தான்
அதன் வடவடப்பில் மொய்த்துக்கொண்டிருக்கிறது ஓர் ஈ
அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும்
அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது.
மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும்
விரட்டுவதற்குப் பதிலே
அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது.
அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென
மின்சார ஒயர்களின்மேல்
ஊர்ந்துகொண்டிருக்கிறது.
மகத்தான விஷயங்களின் மீது
ஈயாயிரு மடநெஞ்சே!

கான மூர்த்தி - சுகுமாரன்

பாடகர் பாடுகிறார்
இரு வினைகள் நிகழ்கின்றன

ஆழ்ந்து மூழ்கி
சமுத்திரத்தின் ஆதி அலையைத் தேடுகிறார்
அதுவோ
அநாதி காலமாக
வற்றாத ஊற்றில் குமிழியாக முகிழ்த்து
ரீங்கரித்துக்கொண்டேயிருக்கிறது

எவ்விப் பறந்து
ஆகாயத்தின் முதல் விண்மீனைத் துளாவுகிறார்
அதுவோ
இருளின் வெளியில்
மின்னி மின்னி ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

பாடகர் திரும்புகிறார்
இரு கொடைகள் கிடைக்கின்றன

கொண்டுவந்த குமிழி கடலாக அலைகிறது
கொண்டுவந்த விண்மீன் வானாக விரிகிறது

அந்தக் கொடைப்பொழுதில்
பாடகர் மண்ணில் கடலாகிறார்
கேட்பவன் குமிழியாகிறான்
அவர் நிலத்தின் விசும்பாகும்போது
கேட்பவன் நட்சத்திரமாகிறான்
பாடகர் மௌனமாகும் வசிய கணத்தில்
நெரித்த திரைக்கடலாகிறது குமிழி
பாயுமொளியாகிறது வான்சுடர்.

மாத்திரைகள் மட்டுமே - வி.எம்.கிரிஜா

‘கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’
உருகிக் கசிகிறாள் அருமை ஆண்டாள்
சஞ்சயன் பாட்டினூடே.

நள்ளிரவு நட்சத்திரம் உதிக்கிறது
நீள உதிர்கின்றன பவளமல்லிகள்

வந்து நீ மெல்ல முனகுகிறாய் காதில்
‘இதோ நான்
உன் ஆசைப்படி எடுத்துக்கொள்’

எவ்வாறு என் இதழ்களில் வாயில்
என் வயது மணக்கும்?
நான் முதிர்வதன் வாடையை
மூடிமறைக்க முடியுமோ
என் முத்தங்களால்?

என் தண்விரல் மென்மைகளை
சிறிதேனும் உணருமோ உன் மெய்?
இளமைத் துடிப்பிலும் நான் அறியவில்லை
மெய்யாக உடலின் ரகசியம்.
இரவு தோறும் அரும்பும் முல்லையின்
தேனூறும் கர்ப்பூர நறுமணம்

நான் இன்று பாதி நிரம்பிய பாத்திரம்
நான் இன்று பாதி பழுத்திருக்கிறேன்
நிலாவும் கதிரும் காற்றும் ஒளியும்
மின்னியும் அணைந்தும் குளிர்ந்தும்
மீண்டும் வெம்மையாய்ப் புரண்டும்
உதிரத்துள் முல்லைகள் வாடின.

‘உனக்குள்ளே விரும்புவது எதுவு’மென்று
நேற்று வந்ததோர் இரவும் கிசுகிசுத்தது
எனினும் தளிரை முத்தமிட்ட பொழுதிலிருந்தாற்போல்
குழந்தையை மாரோடு அணைப்பதுபோல் தழுவத் தவிக்கும்
சாந்த மஞ்சத்தில் ஒன்றாகவே நாம் உடனிருந்தோம்.
என் நரைச்சிகை விபூதிச்சடைபோல்
உன் மார்பின் மேல் ஒளிர்ந்தது

வெள்ளித் தளையணியும் பிஞ்சுக்கால் உயர்த்தி
வயிற்றின்மேல் வைத்தாய் நீ.
துள்ளித் ததும்பும் ஓடையின் நீரில்
அந்த நேரம் நடந்தோம் நாம்.

அப்பாவுடன் கதகளி பார்க்கும் மழலையாய்
எப்படி மாறினேன் நான்?
யாரெல்லாம் எதுவெல்லாம் எவரெவரெதன்ற
கேள்வியெல்லாம் மறந்தேன் நான்.

சாந்தமாய்ப் பாடுகிறான் சஞ்சயன்
பெற்ற தாய் மகமறந்ததையும் மாறானதையும்
உற்ற தேகம் உயிர் மறந்ததையும் மாறானதையும்.

கண்ணிமைக்க மறந்தாலும் மறவாவிட்டாலும்
மறக்கக்கப்படாமல் நின்று ஒளிரும் ‘நமச்சிவாயம்’
அது என்ன? இமைநொடிகள் மாத்திரமே.

‘பரதக் கலைஞர் ராஜஸ்ரீ வாரியர், தமது ‘நர்த்தகி’ என்ற நூலின் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘மனம் சோர்வடைந்துபோகும்போதெல்லாம் உணர்வின் கரை நோக்கி என்னைத் திரும்ப அழைத்துச் சென்ற சஞ்சய் சுப்ரமணியனின் ஆனந்த பைரவி தில்லானாவுக்கு நன்றி.’ அது உண்மை! இசை தவிர்த்த பிற துறைப் படைப்பாளிகளின் செல்லப்பாடகர் என்று சஞ்சயைப் பாராட்டலாம். இங்கு இடம்பெறும் மூவரின் கவிதைகள் அதற்குச் சாட்சி’ - சுகுமாரன்

மகத்தான ஈ - இசை

நீள்விசும்பினில் உயரப் பறந்தும்
மா நிலத்திடை ஆழ உழுதும்
சஞ்சய் பாடுகிறார்
சஞ்சய் பாடுகையில்
மைக்கும் ஓர் இனிப்புப் பண்டம்தான்
அதன் வடவடப்பில் மொய்த்துக்கொண்டிருக்கிறது ஓர் ஈ
அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும்
அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது.
மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும்
விரட்டுவதற்குப் பதிலே
அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது.
அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென
மின்சார ஒயர்களின்மேல்
ஊர்ந்துகொண்டிருக்கிறது.
மகத்தான விஷயங்களின் மீது
ஈயாயிரு மடநெஞ்சே!

கான மூர்த்தி - சுகுமாரன்

பாடகர் பாடுகிறார்
இரு வினைகள் நிகழ்கின்றன

ஆழ்ந்து மூழ்கி
சமுத்திரத்தின் ஆதி அலையைத் தேடுகிறார்
அதுவோ
அநாதி காலமாக
வற்றாத ஊற்றில் குமிழியாக முகிழ்த்து
ரீங்கரித்துக்கொண்டேயிருக்கிறது

எவ்விப் பறந்து
ஆகாயத்தின் முதல் விண்மீனைத் துளாவுகிறார்
அதுவோ
இருளின் வெளியில்
மின்னி மின்னி ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

பாடகர் திரும்புகிறார்
இரு கொடைகள் கிடைக்கின்றன

கொண்டுவந்த குமிழி கடலாக அலைகிறது
கொண்டுவந்த விண்மீன் வானாக விரிகிறது

அந்தக் கொடைப்பொழுதில்
பாடகர் மண்ணில் கடலாகிறார்
கேட்பவன் குமிழியாகிறான்
அவர் நிலத்தின் விசும்பாகும்போது
கேட்பவன் நட்சத்திரமாகிறான்
பாடகர் மௌனமாகும் வசிய கணத்தில்
நெரித்த திரைக்கடலாகிறது குமிழி
பாயுமொளியாகிறது வான்சுடர்.

மாத்திரைகள் மட்டுமே - வி.எம்.கிரிஜா

‘கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’
உருகிக் கசிகிறாள் அருமை ஆண்டாள்
சஞ்சயன் பாட்டினூடே.

நள்ளிரவு நட்சத்திரம் உதிக்கிறது
நீள உதிர்கின்றன பவளமல்லிகள்

வந்து நீ மெல்ல முனகுகிறாய் காதில்
‘இதோ நான்
உன் ஆசைப்படி எடுத்துக்கொள்’

எவ்வாறு என் இதழ்களில் வாயில்
என் வயது மணக்கும்?
நான் முதிர்வதன் வாடையை
மூடிமறைக்க முடியுமோ
என் முத்தங்களால்?

என் தண்விரல் மென்மைகளை
சிறிதேனும் உணருமோ உன் மெய்?
இளமைத் துடிப்பிலும் நான் அறியவில்லை
மெய்யாக உடலின் ரகசியம்.
இரவு தோறும் அரும்பும் முல்லையின்
தேனூறும் கர்ப்பூர நறுமணம்

நான் இன்று பாதி நிரம்பிய பாத்திரம்
நான் இன்று பாதி பழுத்திருக்கிறேன்
நிலாவும் கதிரும் காற்றும் ஒளியும்
மின்னியும் அணைந்தும் குளிர்ந்தும்
மீண்டும் வெம்மையாய்ப் புரண்டும்
உதிரத்துள் முல்லைகள் வாடின.

‘உனக்குள்ளே விரும்புவது எதுவு’மென்று
நேற்று வந்ததோர் இரவும் கிசுகிசுத்தது
எனினும் தளிரை முத்தமிட்ட பொழுதிலிருந்தாற்போல்
குழந்தையை மாரோடு அணைப்பதுபோல் தழுவத் தவிக்கும்
சாந்த மஞ்சத்தில் ஒன்றாகவே நாம் உடனிருந்தோம்.
என் நரைச்சிகை விபூதிச்சடைபோல்
உன் மார்பின் மேல் ஒளிர்ந்தது

வெள்ளித் தளையணியும் பிஞ்சுக்கால் உயர்த்தி
வயிற்றின்மேல் வைத்தாய் நீ.
துள்ளித் ததும்பும் ஓடையின் நீரில்
அந்த நேரம் நடந்தோம் நாம்.

அப்பாவுடன் கதகளி பார்க்கும் மழலையாய்
எப்படி மாறினேன் நான்?
யாரெல்லாம் எதுவெல்லாம் எவரெவரெதன்ற
கேள்வியெல்லாம் மறந்தேன் நான்.

சாந்தமாய்ப் பாடுகிறான் சஞ்சயன்
பெற்ற தாய் மகமறந்ததையும் மாறானதையும்
உற்ற தேகம் உயிர் மறந்ததையும் மாறானதையும்.

கண்ணிமைக்க மறந்தாலும் மறவாவிட்டாலும்
மறக்கக்கப்படாமல் நின்று ஒளிரும் ‘நமச்சிவாயம்’
அது என்ன? இமைநொடிகள் மாத்திரமே.