கலையும் இலக்கியமும் அரசியலும் வரலாறும் எப்போதும் ஆண்மையம் கொண்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றன. எல்லாக் காலங்களிலும், அழுத்தம் தாங்காத முனகல்களும் அரசியல் புரிதலுடன் காத்திரமாக எழுப்பப்பட்ட பெண்குரல்களும் உண்டு. எனினும், அவற்றில் தொகுக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட குரல்கள் மிகக் குறைவானவையே. மேலும், பெண்ணுடலை நுகர்வுக்கும் கண்காணிப்பிற்குமானதாகக் கற்பித்துவைத்திருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் பண்பாட்டு அமைப்பு, ஒவ்வொரு தன்னிலையின் நனவிலியிலும் அதன்வழியே உருவாகும் கலை இலக்கியத்திலும் ஒரு சுயதணிக்கையை உருவாக்கி
வைத்திருக்கிறது. சங்ககாலம் தொடங்கி, நவீனகாலம் வரையிலான இலக்கிய வெளியில் இதை நாம் காண முடியும்.

தமிழ் நிலத்தின் வாழ்வியலை அறிந்துகொள்வதற்கான மிக வளமான ஆதாரமாக சங்க இலக்கியப் பாடல்கள் திகழ்கின்றன. தொகுப்பு மற்றும் உரைகள் சார்ந்து இவற்றில் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் மாற்றுக் கருத்துகளும் ஆய்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. என்றாலும், சங்க இலக்கியங்கள், தமிழர் வாழ்வின் அழுத்தமான சித்திரங்கள்தாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. காமம் எனும் உணர்வு எல்லாக் காலத்திலும் இலக்கியத்தின் ஆதாரமாக இருந்துவந்துள்ளது. அது சார்ந்த நேரடிப் பாடல்களை, குறியீட்டுரீதியிலான பாடல்களை உலகம் முழுமையிலும் தமிழைப்போலவே தொன்மையாக வழங்கிவந்த அத்தனை மொழிகளிலும் காணமுடிகிறது. ஆயினும், காமம் சார்ந்த வெளிப்பாடுகளில் பெண்ணின் குரல் அடங்கியே ஒலிக்கிறது. மீறி, ஒலிக்கும் குரலையும் உரையாசிரியர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள் தொனி மாற்றி விளக்கம் தருவதே பெரும்பான்மைப் போக்காக இருந்துவந்திருக்கிறது. அல்குல், முலை போன்ற சொற்களுக்கே இறுதியான அர்த்தங்களை வரையறுக்க முடியாத நிலைதான் உள்ளது.

இவ்விடத்தில், சங்க இலக்கியத்தில் கைக்கிளை, பெருந்திணை சார்ந்த பாடல்கள் மிக மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்களின் மீது கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழர்களின் அகவொழுக்கம், இலக்கிய வெளிப்பாட்டு முறை போன்றவை முதன்மைக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், ஒரு வாசகனாக அதன்மீது தீரா சந்தேகம் இருந்தேவருகிறது. சங்ககாலம் ஒத்த சீனக் கவிதைகளில்கூட காமம் சார்ந்த மீறல் மனதை வெளிப்படுத்துகிற சில குரல்களைக் கேட்க முடிகிறது. தமிழில், ஆண்களின் பரத்தையர் நாட்டம் குறித்த பெண்களின் வருத்தம், கோபம், ஊடல், காத்திருப்பு, ஆற்றாமை போன்றவை பதிவாகியுள்ள அளவோடு ஒப்பிட்டால், ஒரு பெண், தனது மீறலை வெளிப்படுத்திய குரலின் ஒலி மிகச் சன்னமானது. தொன்றுதொட்டு வரும் நாட்டார் வழக்காற்றியலில், பால் பாகுபாடின்றி காமம் மிக இயல்பான உணர்வாக வெளிப்பட்டு வந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். எனவே, நமது சந்தேகம் வலுக்கிறது. ‘வெள்ளிவீதியும் ஔவைகளும் நிரம்பிய சங்க இலக்கியத்தில், கைக்கிளைப் பாடல்களும் பெருந்திணைப் பாடல்களும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்க வாய்ப்புண்டு’ எனச் சந்தேகப்படுவதற்கும் அக்கவிதைகளைக் கனவு காண்பதற்கும் வாசகருக்கும் படைப்பாளருக்கும் உரிமை உண்டு.

இப்படியாக நாம் அக்கவிதைகள் குறித்துக் கனவு காண்பதற்கும் நமது சந்தேகத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் துணைநிற்கிறது, காஹா சத்தசஈ (தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள்). பேராசிரியர் சுந்தர் காளி - பரிமளம் சுந்தர் ஆகியோரால் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கங்கையைத் தன் தலையில் சூடவிருக்கும் சிவன், சிவனின் மீது ஊடல்கொண்டு விலகி நிற்கும் பார்வதி என அட்டையிலுள்ள சிற்பப் படத்திலேயே நூலின் சுவை தொடங்கிவிடுகிறது.

முற்கால இந்தியாவில் வழங்கிவந்த பல்வேறு பிராகிருதக் கிளைமொழிகளில் ஒன்று, மகாராஷ்டிரீ பிராகிருதம். ‘காஹா சத்தசஈ’ இம்மொழியில் அமைந்த அகப்பாடல் தொகை நூல் என்று குறிப்பிடப்படுகிறது. ஆந்திர நாட்டை ஆண்ட 17-வது அரசன் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிற ‘ஹால’ எழுதிய பாடல்கள் இவை. ‘முழுமையாக ஹால எழுதியது’ என்றும் ‘இல்லை, ஹால தன்னுடைய பாடல்களோடு பழைய பாடல்களையும் செம்மையாக்கித் தொகுத்த ஒரு தொகை நூலே’ என்றும் கருத்து மாறுபாடுகள் உள்ளன. இந்நூல் ஆந்திர-மகாராஷ்டிரப் பகுதியில் கி.பி.200-க்கும் 450-க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். காலம் சார்ந்தும் மாறுபட்ட கருத்துகள் உண்டு.

‘காஹா சத்தசஈ-யின் பாடல்கள், தமிழ்ச் சங்ககால அகப்பாடல்களால் தாக்கமுற்றவை. செவ்வியல் சம்ஸ்கிருத மரபுக்கு மாறாக வெகுஜனத்தன்மை கொண்டதாகவும், திராவிட தக்காணப் பண்பாட்டின் பல மரபு உத்தி முறைகளைக் கொண்டதாகவும் இருப்பினும், சங்க இலக்கியத்தை அவை முழுமையாகப் பின்பற்றவில்லை. திணை, கூற்று ஆகியவற்றை வகுத்துக்காட்டும் தமிழ் மரபு, அதில் இல்லை. குறிப்பாக, சத்தசஈ சித்திரிக்கும் சமூகமும் பண்பாடும் பலவிதங்களில் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டவை. குறிப்பாக, பெண்களின் கற்பு பெறும் உயரிய இடம் சத்தசஈ-யில் காணப்படவில்லை’ என்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

காமம், கலவிச் சித்திரங்கள், பெருமிதம், வெட்கம், உடல் சார்ந்த வர்ணனைகள், கலவிக்குறிகள், ஊடல், பிரிவு, காத்திருத்தல், உடல்மெலிதல், கைவளை நெகிழ்தல், பழம்பொழுதுகளை நினைத்து ஏங்குதல், உறக்கமின்மை, வேறு பெண்ணை நாடிச்சென்ற கணவன்மீது கோபம் கொள்ளுதல், புலம்பல், புறக்காட்சிகளை அக உணர்வுக்குக் குறியீடு செய்யும் நுட்பம் எனத் தமிழ் அகப்பாடல்களுக்கு மிக நெருக்கமானவை சத்தசஈ-யின் பாடல்கள். ‘பிரசவ வைராக்கியம்’ என்று சொல்வார்களே அதை அப்படியே சித்திரிக்கிறது ஒரு பாடல். காகம் கரைவது, இடக்கண் துடிப்பது போன்றவை தலைவன் திரும்பும் நற்குறியாகக் காண்பது தமிழ் நாட்டார் மரபுக்கு நெருக்கமான சித்திரங்கள்.

இவற்றுக்கு அப்பால், தமிழ் அகப்பாடல் எல்லைக்கு வெளியே ‘காஹா சத்தசஈ’ மீறிச் செல்லும் இடம்தான் எனக்கு வாசிப்பில் முக்கியமாகப்பட்டது. நவீன வாசிப்பில் இப்பாடல்களை மீறல் எனக்கொள்வதே சரி என்று எண்ணுகிறேன். பரத்தையரிடம், சக்களத்தியிடம் செல்லும் கணவர்களுக்குக் கிலியூட்டும் குரல்களை வெகுவாகக் கேட்க முடிகிறது. பெண்ணின் உடல்மீதான, காம உணர்வின்மீதான ஆண் மனதின் பிரமிப்பு, அச்சம் போன்றவையும் வெளிப்படுகின்றன. பொருந்தாக்காமம், ஒவ்வாக்காமம் என்று குறிப்பிடப்படுகிற பெருந்திணையின் குரலாக நமக்கு அவை ஒலிக்கின்றன. தலைவன் கூற்று, தலைவிக்கூற்று, செவிலிக்கூற்று எனத் தனியே குறிப்பிடும் வழக்கமற்றவையாக இப்பாடல்கள் இருப்பினும், கொஞ்சம் கூர்மையாக அவதானிப்பதன் வழியே அது யாரின் குரல் என வாசகர் அறிந்துகொள்ள முடியும்.

‘விசுவாசமான மனைவிமார்
என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும்.
நான் அவருடன் படுப்பதில்லை
அவருடன் படுக்கும்போதுகூட.’

இந்தப் பாடல் யார் கூற்று என்று யாருக்கும் சொல்லவேண்டியதில்லை அல்லவா? அப்படியானவைதாம் மொத்தப் பாடல்களும்.

‘முட்டாளே,

ஏன் இலவங்கப் பூக்களோடு வீணே காலங்கழிக்கிறாய்?
கழற்று என் பாவாடையை
யாரை நான் அழைக்கப் போகிறேன் இந்தக் காட்டினுள்?
கிராமம் வெகுதொலைவில்.
நானோ இங்கு தன்னந்தனியள்.’

‘பார்,
கலவியின் அவசரத்தில் அவள் உதைத்துத் தள்ளிய
புதிதாய்ச் சாயமிட்ட பாவாடை
உதறியெறிந்த நாணத்தின் பதாகை போல்
உயரத் தொங்குகிறது மரக்கிளையில்.’

மிகுந்து பொங்கும் பெண்ணின் காமம் பற்றிய இத்தகைய சித்திரிப்புகளில் அக்கணத்தின் வெம்மையும் தீவிரமும் நம்மையும் பற்றிக்கொள்கின்றன. ‘பசிய மூங்கில் காட்டுக்குள் நெடிய மூங்கில்களை முறித்து உண்ணும் யானை’ என்று காட்சிப் படிமங்கள் வழியே மன உணர்வைச் சித்திரிக்கும் தமிழின் உத்தி, இதில் மிக மிகக் குறைவு. ‘கழற்று என் பாவாடையை’ என்று நேரடியாகவே ஒலிக்கிறது.

‘சொல்,
சரியில்லாத பொழுதில் சரியில்லாத இடத்தில் தொந்தரவு செய்தால்
உனக்குக் கோபம் வராதா என்ன?
கட்டிலறையில் கலவியிலிருக்கையில்
காதல் மகனே ஆனபோதிலும்
அநாவசியமாய் அழுதுகரைந்தால்
எந்தத் தாய்தான் அவனைச் சபிக்கமாட்டாள்?’

கலவியிலிருக்கும் தாய், தொட்டிலில் அழுதுகரையும் மகன்மீது, கோபம்கொள்ளும் இந்தப் பாடல் காட்சி, தமிழின் ‘தாய்’ எனும் புனித பிம்பக் கற்பிதத்திற்கு மனச்சிக்கலைத் தரவல்லது. இதுபோலவே மாமி, கொழுந்தன் போன்ற உறவுகளுடன் நிகழும் உரையாடல்களும் பாடல்களில் இடம்பெறுகின்றன.

தமிழ்ப் பாடல்களில் காணப்படாத, சத்தசஈ பாடல்களில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ‘பயணி’. காதலன், வணிகன், ‘கள்ளக்’காதலன், வழிப்போக்கன் இவர்களில்... யார் அந்தப் பயணி? முழுமையாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆயினும், பயணி இடம்பெறும் பாடல்களை அனுபவம்கொள்ள அதுவொரு தடையாக இல்லை.

‘இவள்தான் அரைமனசோடு அந்தப் பயணிக்குப்
படுக்கக் கொஞ்சம் வைக்கோல் கொடுத்தாள்
மறுநாள் காலை
அதே வைக்கோலைக் கூட்டிப்பெருக்குகிறாள்
கண்ணீர் சிந்தியபடி.’

நிலம், பொழுது, ஒழுக்கம், கூற்று, கருப்பொருள் எனச் சங்க அகப்பாடல்களுள் நிறைந்திருக்கும் நுட்பமான குறிப்புகள் இதில் இல்லை. இந்தப் பாடல்களின் வெகுஜனத் தன்மைக்கு (நேரடித் தன்மை) அது ஒரு குறையாகவும் படவில்லை.

தலைவன், வேறு பெண்களுடன் காம உறவுகொண்டிருப்பதைப்போலவே, தலைவியும் வேறு ஆண்களுடன் உறவுகொள்கிறாள். உறவுகொள்ள விரும்பும் ஏக்கத்தை, தேவையைப் பகிர்கிறாள். கணவனின் வயது மூப்பு, வேறு பெண்ணுடன் உறவுகொண்டு பிரிந்து செல்லுதல், பொருள் மற்றும் போர் காரணமாகப் பிரிந்து செல்லுதல், இளமையான ஆடவர்மீது வேட்கையுறுதல் எனப் பல காரணங்கள் பாடல்களில் தொனிக்கின்றன. காமத்திற்கு ஏங்கிப் பெருமூச்சுவிடுவதும், தோழிகள் உதவியுடன் கள்ளக்காதலன் சேர்வதும் இயல்பாக நடக்க, ஒரு பாடலில் ‘சோரம்போன மனைவி’ என்கிற சொல்லும் வருகிறது. ஆய்வாளர்கள் தரப்பு எதுவாக இருப்பினும், ஒரு நவீன வாசகன், இக்குரல்களின் வழியே தனக்கான ஒரு சுதந்திர வாசிப்புப் பிரதியை உருவாக்கிக்கொள்ளலாம்.

உதாரணமாக,

‘கணவன்மார்களுக்கு வயதாகிறது.
வறுமை வந்து சேர்கிறது.
அவலட்சணமாகிறார்கள்.
அப்போதும்
நல்ல மனைவிமார் அவர்களை விரும்புகிறார்கள்.’

‘உன் கணவன்
உன் முலைகளில் வரைந்த தொய்யிலைக் கண்டு
ஏன் இத்துணைக் கர்வம்?
கைமட்டும் நடுங்காதிருந்தால்
என் கணவனும்கூட இதையே செய்திருப்பான்.’

‘ஊர் முழுவதும் இளம்பையன்கள்
வசந்தம்
இளமை
வயதான கணவன்
கடுங்கள்
இன்னது செய்யென்று சொல்ல யாருமில்லை.
வழிதவறாதிருக்க ஒரே வழி
சாவதுதான்.’

‘சற்றே திறந்திருக்கும் கதவினைப்போல்
தன் கருநீலக் கச்சினைத் தளர்த்தியிருக்கிறாள்
இளைஞர்களின் கண்களுக்கு
லேசாகத் தன் முலைகளைக் காட்ட.’

‘தேள் கடித்ததென்று சொல்லி
கணவனின் கண்ணெதிரிலேயே அவள் புத்திசாலித் தோழிமார்
அவளை அழைத்துச் செல்லுகிறார்கள் கைத்தாங்கலாக
மருத்துவக் கள்ளக்காதலன் வீட்டுக்கு.’

‘சோரம் போகிற பெண் சோறும் நீரும் கொடுத்து
நாயைப் பழக்கியிருக்கிறாள்
காதலனை வாலாட்டி வரவேற்க
கணவன் வருகையில் கண்டு அவனைக் குரைக்க.’

மெள்ள மெள்ள ஓர் உடலும் மனமும் ஊர்ந்து, நகர்ந்து ஒரு மீறலுக்கு, பாய்ச்சலுக்குத் தயாராவதை இப்பாடல்களின் வழியே உணர முடியும். இந்நூலில் உள்ள 251 பாடல்களில் இப்படிப் பல கதைகளை வாசகர்கள் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்நூலில் நவீனக் கவிதைக்கு மிக நெருக்கமான, சர்ரியலிஸத் தன்மைகொண்ட கவிதையைக் கண்டபோது, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

‘கார்காலம் தொடங்கிவிட்டது
பயணி வீடுநோக்கி விரையத் துடிக்கிறான்
பாதையை மூட்டைகட்டி முதுகிலேற்றுகிறான்
அதை சிறுசிறு துண்டுகளாய் வெட்டியெடுக்கிறான்
பிறகு,
அதை ஒரே வாயில் விழுங்கித் தீர்க்கிறான்.’

பாதையை வாயிலிட்டு விழுங்கும் இந்தப் பயணியின் உணர்வு இன்றைய மனதினது.

மிகுதியும் நாட்டார்தன்மை கொண்ட (அப்படிச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்) இந்தப் பாடல்களை மிக எளிமையான வகையில் தமிழுக்குப் பெயர்த்துள்ளனர் மொழிபெயர்ப்பாளர்கள். ‘நாசமாய்ப்போன’, `லேசாக’, ‘சில்மிஷம்’, ‘தாஜா பண்ணுகிற’ போன்ற சொற்களைப் பயன்படுத்த அவர்கள் தயங்காததிலிருந்து இக்கவிதைகளின் வாசிப்பில் எவ்விதத் தடையும் வாசகருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அவர்களது விருப்பம் வெளிப்படுகிறது. செவ்வியலுக்கான இசைத்தன்மை, நாட்டார் உணர்வுக்கான துள்ளலான வெளிப்படைத்தன்மை, அனுபவம்கொள்ளச் சிரமமற்ற எளிமையான சித்திரப்படுத்துதல் என வாசகருக்கு மகிழ்ச்சியளிக்கும் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்திருக்கிறார்கள்.

பாடல்களில் இடம்பெறும் ‘முற்பிறவி’, ‘கைம்பெண்’, ‘கடவுள்’, ‘தீட்டு’, ‘தீப்பாய்தல்’ போன்ற சொற்களுக்குப் பின்னே ‘இயங்கும்’ அன்றைய சமூகப் பண்பாட்டு நிலைகள் குறித்த தேடலோடு, கூடுதல் கவனம் கொடுத்து மிக விரிவான முறையில் இப்பாடல்களை வாசிப்பு செய்துபார்க்கவும் இடமுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே சென்று காதலின், காமத்தின் அபூர்வக் கனவுகளில் திளைத்திருக்கும்

சமயத்தில், ஒரு கவிதையில் தவறுதலாக இடம்பெறும் ‘பேனா’ எனும் சொல், சட்டெனத் தற்காலத்திற்கு நம்மைத் தூக்கி எறிந்துவிடுகிறது. ஒரு பாடலில் நிகழ்ந்துள்ள அந்த மிகச் சிறிய கவனக்குறைவைத் தவிர்த்து, அனைவரும் வாசித்து அனுபவம்கொள்ள வேண்டிய மனித மனதின் உணர்ச்சி நுட்பமிக்க நூல் காஹா சத்தசஈ.

‘பனிக்கால இராப்பொழுதுகள் நீண்டவை
உன் கணவனோ பல மாதங்களாய் ஊரிலில்லை
நன்றாகத்தான் உறங்க வேண்டும் நீ
பிறகேன் காலை வேளைகளில் தூங்கி வழிகிறாய்?’

தமிழ் அகப்பாடல்களுள் பெருந்திணைப் பாடல்கள் வாசிக்கக் கிடைக்காத ஏக்கம் கொண்டவர்களுக்கு, இந்நூல் புதிய அனுபவமாக வாய்த்திருக்கிறது!

காஹா சத்தசஈ
(தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள்)
மொழியாக்கம்: சுந்தர் காளி - பரிமளம் சுந்தர்.
அன்னம் வெளியீடு, விலை: 100/-

- வெய்யில், ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி