சிந்துசமவெளி நாகரிகம், தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தித் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்த பானைகளைக் கொண்டு, ‘திராவிடப் பண்பாடு இந்தியா முழுக்கப் பரவியிருந்தது’ என்கிறார்.

“சிந்துசமவெளி தொடங்கி குமரி வரை திராவிடக் கூறுகள் ஒளிந்து கிடப்பதாகச் சொல்கிறீர்கள். அதேசமயம் ‘வடக்கே வேங்கடம் முதல் குமரி வரை’ என்றுதானே தமிழ் எல்லையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?’’

“குமரி முதல் வேங்கடம் வரை என்பது நம் தமிழ் அரசியல் பரப்பாக இருந்தது. ஆனால், மொழிப் பரவல் அதையும் தாண்டியது. இந்தியா முழுக்க யாரை ஆய்வு செய்து பார்த்தாலும் சிந்துசமவெளி டி.என்.ஏ-வைப் பார்க்க முடியும். சிந்து நாகரிக காலத்துக்குப் பின் வந்தவர்களிடம் அந்த டி.என்.ஏ இல்லாமல் போகலாம்.

சிந்துசமவெளிப் பகுதி எனப் பார்த்தால் பாகிஸ்தான் பகுதியில் சிந்து, பஞ்சாப், கீதார் மலைத் தொடருக்குக் கீழே சுலைமான் மலைத் தொடர், ராக்கி கார்டி என்ற ஹரியானாவில் இருக்கும் பகுதி ஆகியவை. மொத்தம் 900 கிலோ மீட்டர் பரப்பு. வட ஆப்கானிஸ்தான் தொடங்கி பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத் வரைக்கும் நீண்டிருந்த குடியிருப்புப் பகுதி.

கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளிப் பகுதியில் பிரமாண்ட நகரம் இருந்தது. அப்படியே தமிழகத்துக்கு வாருங்கள். சங்க இலக்கியத்தில் பிரமாண்டமான நகர வர்ணனைகள் வருகின்றன. நகரங்களைப் போற்றும் பல குறிப்புகள் நம் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன. ‘மொழிபெயர் தேயத்து புலம்பெயர் மக்கள் இனிது வாழ்ந்தனர்’ எனச் சங்க இலக்கியம் சொல்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் திராவிட நாகரிகம் இந்தியா முழுக்க இருந்ததை உணரலாம்.’’

‘‘ ‘கலம்செய்யும் கோவே’ எனப் பாடல் வெளியிட்டிருக்கிறீர்கள். குயவர்களுக்கும் சிந்து சமவெளிக்கும் தமிழர்க்கும் உள்ள தொடர்பு என்ன?’’

‘‘நான் எழுதி தாஜ்நூர் இசையில் வேல்முருகன் பாடிய பாடல் அது. ‘கலம் செய்யும் கோவே’ என்பது சங்க இலக்கியத்தில் வரும் வரி. ‘கலம் செய்யும் தலைவனே’ என்று எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லாத அளவுக்குக் குயவர்கள் பெருமை பேசுகிறது நம் இலக்கியம். சிந்துசமவெளி நாகரிகத்தையும் தமிழர் நாகரிகத்தையும் இணைப்பதுதான் பானைத்தடம். சிந்துசமவெளி தொடங்கி குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம் எனப் பயணப்பட்ட பானைகளின் தடம்.

இந்தப் பானைத் தடத்தில் கிடைத்த ஆதாரங்கள், சங்க இலக்கியக் குறிப்புகள் இரண்டையும் இணைக்கும்போது சிந்து சமவெளி, தமிழர்களின் வாழ்க்கையோடு பொருந்திப்போகிறது. இன்னும் சொல்லப்போனால் வட இலக்கியங்கள் குயவர்களை நான்காம் வருணமாக இழிவுபடுத்துகின்றன. ஆனால் சங்க இலக்கியமோ அவர்களை உயர்வான நிலையில் சித்திரிக்கிறது.’’

‘‘சுட்ட செங்கல், தாழிகள், பானைகள் எனக் களி மண்ணைக் குழைத்துப் படைக்கப்பட்ட புதையுண்ட நகரங்களின் வரலாறு, ‘பானைத் தடம்’ என்று உங்களால் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதில், திராவிடத் தன்மை இருப்பதாக எப்படிச் சொல்கிறீர்கள்?’’

“திராவிடம் என்ற பதத்துக்கு ஒரு நிறம் உண்டு என்றால் அது சிவப்பு. சிந்துசமவெளிப் பகுதியே செங்கல் கட்டடங்களால் சிவந்து கிடக்கும். அவர்கள் பயன்படுத்திய பானைகள், தாழிகள் எல்லாம் சிவப்பு. சிவப்பு என்பதை அவர்கள் பெருமைக்குரியதாக எண்ணினார்கள். செங்கோல், செங்கதிர், செந்தமிழ் எனச் செம்மையைச் சிவப்பைப் பார்த்தார்கள்.

செங்கல் என்பது சிவப்பு மட்டுமல்ல... செம்மையானதும்கூட. மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் உள்ள அத்தனை கல்லுமே ஒரே நீள, அகல, உயரம் கொண்டவை. செங்கல் செய்யும் அச்சைக் கட்டளைக் கல் என்பார்கள்.

குறிப்பாக அந்தப் பானைகள்... அவற்றின் உட்புறம் கறுப்பு நிறமும் வெளிப்புறம் சிவப்பு நிறமும் கொண்டிருக்கும். அது பிரத்யேகத் தன்மை கொண்ட நிறம். அது சிந்து சமவெளியிலும் ஆதிச்சநல்லூரிலும் கீழடியிலும் கிடைப்பது எதேச்சையானது அல்ல.’’

‘`இலக்கிய ஆதாரம் வரலாற்றுக்கு எந்த அளவுக்கு உதவுவதாக நினைக்கிறீர்கள்?’’

‘`சிந்துசமவெளிக்கும் சங்க இலக்கியத்துக்கும் ஒரு மரபின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. ‘ஞாயிறு போற்றுதும்’, ‘திங்களைப் போற்றுதும்’ என்ற கவிஞன், ‘பூம்புகார் போற்றுதும்’ என்றும் சொல்கிறான். இறைவனுக்கு நிகராக நகரத்தைப் போற்ற நினைக்கிறான். ஒரு வாரமாகப் பசியில் அலைந்து நடந்து வந்த ஒட்டகம், அந்தப் பாலைவனத்தில் இருக்கும் ஓர் எலும்பைக் கடித்துக்கொண்டிருக்கிறது என்ற காட்சி நம் பழம் இலக்கியத்தில் இருக்கிறது. தமிழகத்தில் ஒட்டகம் இல்லை. இருந்த ஆதாரமும் இல்லை. அதை எப்படி கவிஞன் எழுதினான்? தமிழகத்தில் சிங்கம் இல்லை. அதைப் பற்றிய வர்ணனை எப்படி வருகிறது? இந்தியா முழுக்கத் திராவிட நாகரிகம் பரவி இருந்ததன் நினைவுகளே தலைமுறைதோறும் கடத்தப்பட்டிருக்கின்றன. இதுதான் பண்பாட்டுத் தொடர்ச்சி. இந்தவகையில் இலக்கியங்களும்கூட வரலாற்று ஆய்வுகளுக்கு வலுச்சேர்க்கின்றன.’’

தமிழ்மகன் - படம்: ப.சரவணகுமார்