சண்முகம் தம்பி வந்திருப்பதாக மனைவி சொன்னாள். சண்முகத்தின் அக்காளைத்தான் நான் மணம் முடித்திருக்கிறேன். அவன் முகம் பார்க்கவே சகிக்காதபடி குராவிப் போயிருந்தது. இது மாதிரியான சோகத்தை நான் அவன் முகத்தில் பார்த்ததே இல்லை. போன வாரம் தான் நானும் என் மனைவியும் அவன் வீட்டுக்குப் போய்விட்டு வந்தோம். என்னைச் சந்திக்க வர வேண்டிய முக்கிய வேலைகள் ஏதுமில்லை. மகளுக்குக் கல்யாண ஏற்பாடுகள்வேறு செய்து கொண்டிருந்தான். மதுரை மாப்பிள்ளை ரொம்பத் திருப்தியென்றும், அதையே பேசி முடித்துவிடலாமென்றும் சொல்லிவிட்டு வந்திருந்தேன். சண்முகம் முகம் பேயறைந்தது மாதிரி இறுகிப்போயிருந்தது. ``என்ன சண்முகம், என்ன விஷயம், எதுக்கு இப்படி டல்லா இருக்க? ``...”

``சொல்லுப்பா என்ன தயக்கம், நானும் ஒன்னோட அக்காவும்தான இருக்கோம், எதுனாலும் தாராளமாச் சொல்லு, கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குதில்ல?’’

``நடக்கு மச்சான், ஆனா அந்த மாப்பிள்ள வேணாமாம், அதுக்குமேல என்னத்தச் சொல்ல, அவகிட்ட ஒரு வார்த்தை கேக்காம நம்ம சரினு சொன்னது தப்பா போச்சு.”

``அவகிட்ட என்ன நம்ம கேக்கிறது, குத்துக்கல்லக் காட்டி, கழுத்த நீட்டுனு சொன்னா நீட்டணும், அப்படித்தானே வளர்த்து வச்சிருக்கோம், சரி, இந்த மாப்பிள்ளை வேணாம், வேற எந்த மாப்பிள்ளை வேணுமாம்.”

``அத நீங்களே வந்து கேளுங்க, மாமாகிட்டயும் அத்தை கிட்டயும் என்ன சொல்றானு பாப்பம்.”

``உன்கிட்ட என்ன சொன்னா.”

``என்கிட்ட இந்த மாப்பிள்ளை வேணாம்னு மட்டும் தான் சொல்றா, கல்யாணம் வேண்டாமினு சொல்லல” நானும் என் மனைவியும் வீட்டுக்குள் நுழைந்தபோது என்றைக்கும்போல் சங்கரம்மாதான் வரவேற்றாள்.
``வாங்க மாமா, அத்தை வாங்க.”

எதுவுமே நடக்காதது மாதிரி என்றைக்கும்போல் இயல்பாக இருந்தாள் சங்கரம்மாள். சண்முகமும் அவன் பெண்டாட்டியும்தான் தலப்புள்ள சாகக் கொடுத்தவர்கள் மாதிரி முகங்குராவி உட்கார்ந்திருந்தார்கள்.

சங்கரம்மாவின் அத்தை மாப்பிள்ளை என்ற முறையில் நான் உரிமையுடன் கேலி பண்ணுவேன். அவளும் யதார்த்தமாகவே பதில் சொல்வாள். அனைவருமே ரசித்துச் சிரிப்பார்கள். அப்படியே மெல்ல விஷயத்திற்கு வந்தேன்.

``என்ன சங்கரி நல்லா இருக்கியா?”

``இந்தா பாக்கீகளே மாமா, எனக்கு என்ன கொறச்சல், எல்லாமே நல்லாத்தானே இருக்கு.”

``ஒங்கய்யாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுறாக.”

“என்ன ஏதுனு தெரியலையே மாமா?”

``வர்ர மாப்பிள்ளைக எல்லாத்தையும் வேணாம்னு சொல்றயாமில்ல, பெறகு வருத்தப்படாம என்ன செய்வாக.”

``மாமா... ஜவுளிக்கடைக்குப்போனா, நமக்குப் பிடிச்ச சேல துணிமணியத்தான் எடுக்கோம், நகைக்கடைக்குப் போனா ஏழு கடை ஏறி இறங்கி நமக்குப் பிடிச்ச நகை டிசைன் பாத்துத்தான் வாங்குறோம், அது மாதிரி எனக்குப் பிடிச்ச மாப்பிள்ள வரட்டும், கல்யாணம் பண்ணிக்கிறேன்.”

``சொல்றத வெவரமா சொல் சங்கரி.”

``இதுக்குமேல என்ன வெவரம் மாமா வேணும்.”

``இப்ப வந்த மதுரை மாப்பிள்ளைக்கு என்னம்மா கொறச்சல், சொந்த வீடு, காரு, கடை கண்ணிகனு நெறய்யா சொத்து வேற இருக்கு, ஒரே பையன், வேற பிச்சுப் பிடுங்கல் ஒண்ணும் கெடையாது, சரினு சொல்ல வேண்டியதான்.”

``எல்லாம் சரி மாமா. மாப்பிள்ள எனக்குப் புடிக்கலையே’’

``ஏன் புடிக்கலனு சொல்லு, சும்மா புடிக்கல, புடிக்கலனா என்ன அர்த்தம், காரணம் வேணுமில்ல.”

``ஆளு அழகேந்தியன், படிப்பு இருக்கு, அந்தஸ்து இருக்கு, சொத்து சுகம் இருக்கு. இன்னும் என்ன வேணும்.”

``எனக்குப் புடிக்கலையே.”

``அதத்தான கேக்கன், ஏன் புடிக்கலனு சொல்லு.”

அந்த இடத்தில் ஆழ்ந்த மௌனம் நிலவியது. சங்கரம்மாவின் வளர்ப்புக் கிளி ரெண்டுமுறை “கீ... கீ...” என்று சத்தம் எழுப்பியது. கூண்டை அண்ணாந்து பார்த்தாள். லட்சுமி கூண்டுக்குள் தியாளம் போட்டது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து கூண்டுக்குள் இருந்த கிண்ணத்தில் ஊற்றினாள். கவிழ்ந்து அலகால் முக்கி... முக்கி அண்ணாந்து தண்ணீர் குடித்ததை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாமா தண்ணீர்ச் செம்பை உற்றுப் பார்ப்பதைக் கவனித்தாள். வேகமாகப்போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

சங்கரம்மா சொன்ன பதிலைக்கேட்டு நானே அதிர்ந்துபோனேன். சண்முகம் மாப்பிள்ளை மகளை வெட்ட அரிவாளை எடுக்கத் தாவினார். அவளுடைய அம்மா அழுகையை அடக்கச் சிரமப்பட்டாள். வீட்டில் மயான அமைதி. சண்முகத்தைச் சாந்தப்படுத்தி உட்கார வைத்தேன். இங்கே நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் லட்சுமி கிளி புரிந்துகொண்டதோ என்னமோ “கீ... கீ...” என்று கத்தியது.

``மாமா, வாக்கப்பட்டா பொன்னுச்சாமிக்குத்தான் வாக்கப்படுவேன், இல்லனா சாவேன்.”

``எந்தப் பொன்னுச்சாமி சங்கரி.”

``நம்மாள் நத்தப் பொன்னுச்சாமிதான இருக்காரு.”

``சங்கரி ஒனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு, களவாணிப்பய, வெட்டிப்பய, வேலவெட்டி இல்லாம ஊரச் சுத்திட்டு அலையிற புறம்போக்கு, ரெண்டு தடவ ஜெயிலுக்குப்போன களவாணிப்பய, குடிகாரன்.”

``எல்லாம் தெரியும் மாமா. எம் மனச அவருகிட்ட குடுத்திட்டன், இனிமே வேற ஒருத்தனுக்குக் கழுத்த நீட்ட முடியாது, மனசு எங்க இருக்கோ, அங்கதான் உடம்பும் இருக்கணும், மனசு ஒரு பக்கம், உடம்பு ஒரு பக்கம்னா, சக்கைதான் இருக்கும், சாறு இருக்காது.”

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சங்கரியின் அம்மா சொன்னாள்.

``பல பட்ற பேசுற பேச்சப் பாத்தியா, எடுப்பெடுத்த கிறுக்கி மனசக் குடுத்திட்டாலாம்ல மனச, எங்கொணம் தெரியாம அலையிறா, கட்டவெளக்குமாரு பிஞ்சு போகும்.”

உணர்ச்சிகளின்மேல் நின்றுகொண்டு எதைப் பேசினாலும் சரி வராது, ஆகவே அறிவைத் தேடிப்பேசலாம் என்று, எல்லாரையும் அமைதிப்படுத்தினேன். பெண்களின் விசும்பலையும் கேட்க முடிந்தது. கொஞ்சம் இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். தனியாகப் பேசலாமா என யோசித்தேன்.

``சரி, சங்கரி, இப்படி ஏங்கூடவா, ஓங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.”

``எதுக்கு மாமா தனியா பேசணும், சும்மா இங்கயே பேசுங்க, நீங்க என்ன கேக்கப் போறீங்கனு தெரியும்.”

``எவ்வளவு நாளா பழக்கம், எப்படிப் பழக்கம், எங்க வச்சு சந்திச்சீக, வயித்துல கொழந்த வளருதா, இது தானமாமா?”

``ஒனக்கு வாயி ரொம்ப நீளம்டி அவிசாரி, எல்லாம் ஒங்கப்பன் குடுத்த செல்லம். நாம்னா இழுத்து வச்சு நாக்க அறுத்திருவன்.”

என்றைக்குமே என் முன்னால் அவள் இப்படிப் பேசுபவள் இல்லை. கேலி கிண்டல் உண்டே ஒழிய, மத்தப்படி சாந்தமான ஒரு சராசரிப் பெண் சங்கரி. எப்படி வந்தது இந்தத் துணிச்சல். வெளியில் ஒண்ணுமே தெரியாத புற்றுக்குள்ளிருந்து சரமாரியாகப் புறப்பட்டு வெளியேறும் ஈசல்களைப்போல் சங்கரியின் வாயிலிருந்து வார்த்தைகள் தடையின்றி வந்து கொண்டிருந்தன.

``இங்க கேளுங்க மாமா, நீங்க நெனைக்கிற மாதிரி எதுவுமே நடந்திரல. அவன்கூடக் குடும்பம் நடத்துல, கூடிக்குலாவல, என்னோட சுண்டு விரல் நகத்தக்கூட அவன் தொட்டதில்ல, அவனோட மேல்ல பட்ட காத்துகூட என்மேல பட்டதில்ல.”

``பெறகு எதுக்குப் பிடிசாதன பண்ற?”

``மனசக் குடுத்திட்டனே மாமா. நான் என்ன செய்ய ரெண்டே ரெண்டாட்ட பத்துப் பத்து நிமிஷம்தான் அவன்கூடப் பேசியிருக்கன், எனக்கு அவன் இல்லனா செத்தே போவேன் மாமா.”

``நீ சொல்றதுல ஏதாவது ஞாயம் இருக்கா சங்கரி, ஊரு ஒலகம் ஒப்ப வேணாமா, என்ன பேசும். நம்ம அந்தஸ்து என்ன, தகுதி என்ன, எங்களையெல்லாம் யாராவது மதிப்பானா?”

சாவு வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களைப் போல் மூலைக்கொருவராய் இருந்த என் மனைவி, சண்முகம், அவன் மனைவி எல்லாரையும் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. முகங்களில் களையில்லை. சிக்கலான விஷயமாகிப்போனது சங்கரம்மாள் விவகாரம். போன வருஷம்தான் என் உறவுக்காரப்பெண் ஒருத்தி காதல் விவகாரத்தில் தற்கொலை பண்ணிச் செத்திருந்தாள். தினமும் பத்திரிகைகளில் தற்கொலைச் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. சங்கரம்மாளின் முகத்தில் இம்மியளவுகூடக் கவலையோ வருத்தமோ தென்படவில்லை.

மனசின் ஆழங்களில் ஏற்படும் காயங்களை ஆற்றுவது என்பது எளிதல்ல. உடல் காயங்களைப் போல் வெளியில் தெரியாது. ஊது புண்ணாக உள்ளேயே ரணமாகி அழுகி நாற்றமெடுத்து ஆறாத வடுவாய்த் தங்கிக்கொண்டு பாடாய்ப் படுத்தும். இரண்டு நாள்கள் அங்கேயே தங்கிப் பிரச்னையைச் சீர்படுத்திவிட்டுப் போகலாம் என்று அங்கேயே தங்கிவிட்டேன். சண்முகம் `புசுக்... புசுக்...’ என்று அரிவாளைத் தூக்குபவன் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

என்னுடைய திட்டத்திற்கு சண்முகம் மாப்பிள்ளை கோயில்மாடு மாதிரி தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தார். பொன்னுச்சாமி எங்கே இருப்பான் என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம். கருப்பசாமி கோயிலின் புளியமர நிழல் இதமாயிருந்தது. பதினெட்டுப் படிக்குமேல் இடது கையில் வல்லயக்கம்பும் வலது கையில் வீச்சரிவாளுமாய் நாக்கைத் துருத்திக்கொண்டு ஆக்ரோஷமாய் நின்றார் கருப்பசாமி. ஏனோ கருப்பசாமியைப் பார்த்தவுடன் சண்முகம் மாப்பிள்ளையின் முகம் ஞாபகத்தில் நிழலாடியது. மாப்பிள்ளை தன் வேஷ்டிக்குள் அரிவாளை மறைத்து மடித்துக் கட்டியிருந்தார். எப்படிப் பார்த்தாலும் வெளியே தெரியவே தெரியாது. அது ஒரு கலை.

சந்தேகமே இல்லை, தூரத்தில் வருவது பொன்னுச்சாமியேதான். மாப்பிள்ளை ஓடிப்போய் புளியமரத்துத் தூரில் ஒளிந்து கொண்டான். நான் கோயிலுக்குப் பின்புறம் சுவரின் மறைவில் பதுங்கினேன். பீடியை இழுத்தபடியே சாதாரணமாக வந்துகொண்டிருந்தான். புளியமர நிழலைத் தொட்டவுடன் சண்முகம் மாப்பிள்ளையும் நானும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டவுடன் பதறிப்போனான். முகம் பேயறைந்தது மாதிரி சிறுத்துப் போயிற்று. மாப்பிள்ளை வேஷ்டிக்குள்ளிருந்து அரிவாளை எடுத்தவுடன் இருவரையும் கையெடுத்துக் கும்பிட்டான். நாங்கள் பேசி வைத்திருந்தபடியே மாப்பிள்ளையைக் கட்டிப்பிடித்தேன். அவர் கவுண்டமணி மாதிரி துள்ளி ஆதாளி போட்டார். ஒரு வழியாக அவரைச் சாந்தப்படுத்தி அரிவாளைப் பிடுங்கி என் கையில் வைத்துக்கொண்டேன்.

``யோ... ஏ... புறம்போக்கு நாயே, சங்கரம்மாளுக்கும் ஒனக்கும் என்னல பழக்கம்.”

``ஒரு பழக்கமும் இல்ல, ஊருணிக்குத் துணிமணி தொவைக்க வந்துச்சு, அந்த வழியா நான் வந்தனா ரெண்டு நாளா பேசிக்கிட்டு இருந்தோம்.”

``தனியா இருக்கிற பொம்பளப்புள்ளைகிட்ட என்னடா பேச்சு.”

``நான் போறன் போறனு சொன்னாலும், என்னய விடவேயில்ல, இரு பொன்னு போவம், இரு பொன்னு போவம்னு, ஓயாம பேசிக்கிட்டே இருக்கு.”

``இனிமேப்பட அவகூடப் பேசக் கூடாது.’’

``சரிங்க அய்யா.”

``நாளைக்கே இந்த ஊரவிட்டுப் போயிறணும், அவளுக்குக் கல்யாணம் முடிஞ்ச பெறவுதான் ஊருக்குள்ள தல காட்டணும், தெரிஞ்சதா.’’

``சரிங்க அய்யா.”

``அத மீறி ஊருக்குள்ள தல காட்னா, ஓந்தல இந்தப் புளிய மரத்துலதான் தொங்கும், தெரிஞ்சுக்கோ, இந்தா இதுல கொஞ்சம் பணம் இருக்கு வச்சுக்கோ, திடுதிப்னு ஊர விட்டுப் போற, எங்க போவ, அதுதான் பணம். இந்தாடா.”

``பணம் வேண்டாங்க, காலையில ஊர விட்டுப்போயிறேன், இருந்தா எந்தலைய வெட்டிருங்க.”

என்ன சொல்லியும் பணத்தை மட்டும் வாங்க மறுத்து விட்டான். வேகவேகமாய் மறைந்து தலைமறைவாய்ப் போய்விட்டான். எங்கள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம். இம்மிகூட எதிர்ப்பு இல்லாமல் எதிரி சரணடைந்துவிட்டால் சந்தோஷம் இருக்காதா என்ன. சொன்னபடியே மறுநாள் காலையில் பயலைக் காணோம். நாலைந்து மாசம் ஆறப்போட்ட பின் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தேன். மாடு வசத்துக்கு வந்துவிட்டது. சங்கரம்மா எந்தவிதமான ஆதங்கத்தையும் காட்டவில்லை.

``இப்படி ஓடிப்போற காடோடிப்பய, ஓடுகாலிப்பயல நம்பி கல்யாணமே வேணாம்னியே, அந்தப் பய இப்ப ஓடிட்டான்ல்ல.”

``சரி மாமா, அது இருக்கட்டும், இப்ப நான் என்ன செய்யணும் அத மட்டும் சொல்லுங்க.”

``இன்னும் சின்னப்புள்ள மாதிரியே பேசாதம்மா, ஓஞ் சோட்டுக் கொமரிகளுக்குக் கல்யாணமாகி புள்ளகுட்டிக இருக்கு. காலாகாலத்துல கல்யாணம் பண்ண வேண்டாமா, பேரன் பேத்திகளப் பாக்குற ஆசை எங்க அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இருக்காதா.”

``மாமா நீங்க எந்த மாப்பிள்ளைக்குக் கழுத்தநீட்டச் சொல்றீகளோ கழுத்த நீட்ட நான் தயார், போதுமா மாமா. குத்துக்கல்லக் கட்டி வச்சாலும் கட்டிக்கிற நான் தயார். ஆனா ஒண்ணு மாமா, கல்யாணம் கட்டி வைங்க, நீங்க கட்டி வைக்கிற மாப்பிள்ளைக்குப் புள்ளையும் பெத்துத்தாரன், ஏம்னா கல்யாணம் கட்டன பெறவு புள்ள பெறாம இருக்கக் கூடாதில்ல, எல்லாம் ஒங்க மனசு மாதிரியே நடக்கும், நெற வீட்ல நின்னு சத்தியம் பண்ணிச் சொல்றன், எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, என்னைக்காவது அவன் வந்து எம் முன்னால நின்னு ‘வாடி போவம்’னு சொல்லிக் கூப்பிட்டா, அடுத்த நிமிஷமே கிளம்பிருவன், இது சத்தியம். அப்பப் புள்ளைக இருந்தாலும், அது எம் புள்ளைக இல்ல, என் மூலமா பொறந்த புள்ளைக, அம்புட்டுத்தான். மனசு இன்னொருத்தன்கிட்ட இருக்கும் போது, எவனோ ஒருத்தனுக்கு முந்தி விரிச்சுப் பெத்தா அது எப்பிடி எம்புள்ளையாகும்.”

``கழுதைக்கு அந்தப் பய மை வச்சிருப்பான்னு நெனைக்கன், பய ஊர விட்டுப்போயி எத்தன மாசமாகுது, இன்னும் மறக்கலையே, என்னமோ ஒண்ணா மண்ணா குடும்பம் நடத்துனவுக மாதிரியில்ல பேசுறா.”
``ஆத்த மாட்டாம, என்னத்தையாவுது பொலம்புவா. கழுதைக்குக் கழுத்துல முடிச்சுப் போட்டாச்சுனா தானா வசத்துக்கு வந்திருவா. அப்புறம் ஒரு புள்ள குட்டியாகிப் போச்சுனா நாய் கெணக்கா புருஷன் கால சுத்திட்டுக் கெடப்பா.”

சங்கரம்மாவின் கல்யாணம் ஏக தடபுடலாக நடந்தது. சந்தோஷமாக மதுரைக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாள் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள், ஆண் ஒன்று, பெண் ஒன்று கல்யாணமாகி மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. இரண்டாம் பிரசவத்திற்கு ஊருக்கு வந்தவள், அதற்குப் பிறகு எட்டு மாசம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்திருந்தாள். முதல் குழந்தைக்கு மூன்று வயசு. பொன்னுச்சாமி ஊருக்கு வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால் அது ஒரு விஷயமாகவே இல்லை.

பொழுது விடிந்தபோது சங்கரம்மாளைக் காணவில்லை. பொன்னுச்சாமியும் ஊரை விட்டுப் போயிருந்தான். பால்குடி மறக்காத எட்டு மாசப் பெண் குழந்தை அழுதது. மூன்று வயசு பையன் அம்மாவுக்காக ஏங்கினான். ஆனால், ஊர் சொன்னது.

``சமர்த்தி சொன்னது மாதிரியே செஞ்சுட்டாளே. என்னைக்கு அந்தப் பய வந்து வாடி போகலாம்னா, புள்ளைகளையும் போட்டுட்டுக் கெளம்பிருவேன்னு சொன்னாளே.”

சங்கரம்மாவின் கதையை அந்தக் கோயிலுக்கு முன்னால் கூடியிருந்த ஏராளமானவர்களில் ஒருவனாக இருந்த பிச்சையா கிழவன் சொல்லச் சொல்ல கூட்டமாகக் கூடியிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தன்னுடைய தொண்ணூறு வயதையும் மீறிக் கிழவன் சந்தோஷமாக இருந்தான்.

``அந்த ரெண்டு புள்ளைகளையும், அவுக அய்யாவும் அம்மாவும் வளர்த்து ஆளாக்கிட்டாக. பொம்பளப் புள்ளைக்கு அஞ்சு புள்ளைக, அந்த அஞ்சும் எங்கெங்கயோ இருக்குக. எனக்கு ஆறு புள்ளைக. இருபத்தாறு பேரன் பேத்திக, இந்தக் கூட்டமெல்லாம் என்னோட பேரன் பேத்திகதான். என் தங்கச்சியோட புள்ளைகளும் இங்க வந்திருக்குக.”

``என்ன தாத்தா சொல்றீரு.’’

``சங்கரம்மாளோட மூத்த புள்ள நான்தான்; தாய் முகமே தெரியாம வளர்ந்தவன், தாய்ப்பாலே சரிவரக் குடிக்காம வளர்ந்தவ என் தங்கச்சி, போன வருஷம் தெய்வமாயிட்டா.”

கிழவன் கண்களில் கண்ணீர் உருண்டது. அது மகாபாரதத்தில் கர்ணன் வடித்த கண்ணீர். தன் வாரிசுகளும் தன் தங்கையின் வாரிசுகளும் தன் தாய் சங்கரம்மாளைக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைக் காணும் ஆனந்தக் கண்ணீராகக்கூட இருக்கலாம். சங்கரம்மாளின் கொடி வழி உறவுகள் சந்தோஷமாகக் கூடியிருந்தார்கள்.

``ஏன் தாத்தா, பெத்த புள்ளைகள தவிக்க விட்டுட்டு ஓடிப்போன பொம்பிளைக்குக் கோயில் தேவையா தாத்தா.’’

``அவ விரும்பி எடுத்த முடிவு இல்ல, விதி அப்படித்தான் வேலை செய்யும். விதிய மாத்தா யாராலும் முடியாது. ரெண்டு புள்ளையவும் போட்டுட்டு ஓடிட்டா, ஆனா அவ மனசு என்ன பாடுபட்டிருக்கும். ஒவ்வொரு தடவையும் அவ எந்தக் கொழந்தையப் பாத்தாலும் ஈரக்கொல கருகி இருக்கும்ல, என்ன அவஸ்தைப் பட்டிருப்பா, அந்த ஏக்கத்தோடதான செத்திருப்பா, அவ மனசு கொதியா கொதிச்சிருக்கும், அந்தக் கொதிப்பு அடங்கணும்னா நம்மதான் அதக் குளிர வைக்கணும், நம்ம அறிவுக்குக் கட்டுப்படாத ஒண்ணக் கும்பிட்டுத்தான் ஆகணும். அவளுக்கும் பொன்னுச்சாமிக்கும் கொழந்தைகூடப் பிறந்திருக்கலாம். அந்தப் புள்ளைக எங்களுக்குக் கோயில் கட்டி எங்கேயாவது கும்பிட்டாலும் கும்பிடலாம்.”

பிச்சையா கிழவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.