இரவின் விளிம்பில்

எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
கனமானதொரு மழைத்துளி விழுகிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
எங்கோ ஒரு பறவை இசைத்துப் பறக்கிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
நிழல் பரப்பும் பெருமரங்கள் சற்றே அசைகிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
தாவும் அணிலொன்று நின்று பார்க்கிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
தண்ணொளிர் நிலவு உற்று நோக்குகிறது
எனக்காக ஒரு கவிதை என்கிறாய்
உற்றுநோக்குமிந்தக் கண்களின் சோகம்
மூடா இமைகளுக்குள் புரளும் கனவு
தீக்கொழுந்தாய்ப் படரும் தேகம்
கொல்லும் தனிமை
புரண்டு புரண்டழும் நினைவின் புழுதி
கடக்காது நிற்குமிந்த இரவின் விளிம்பு
வெறுமையின் சரிதல்
எல்லாம்
எல்லாம் திரட்டி எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவிதை

ஒற்றைச் சுடர்

தீப்பட்டெரியும் வானத்தையணைத்து அணைக்க முயல்கிறது நிலா
பயந்து வெறிக்கும் நெடிய மரங்களின் உச்சிகளில் பிரதிபலித்த தீப்பிழம்பு மாறித் தழும்பென
குழம்பும் காடு
அன்றாடங்களின் அல்லல்களுள் சிக்கியலறும் பறவைகளவை
தாழவே பறப்பவை
வெருவி வெருவி மறுகி நிற்கின்றன
காடுள் மறையும் வானைத் தேடியலைகின்றன கிரணங்கள்
ஒற்றையொற்றைப் பொட்டுகளாய் மிதக்கும் காசுகளை மதியாது துள்ளும் மான் கூட்டம்
வேங்கையின் கண்களால் மிரள்கின்றன
தவ்வும் முயல்களின் கால்களுள் கிழிந்து துண்டுகளாய்ச் சிதறும் வானம்
ஏங்கி
ஏங்கி
ஏங்கிக் கதறுகிறது மழை

வெறும்பொழுதொன்றில்
கால்போக்கில் அலைகையில் கண்டெடுத்ததோர் இரும்பு வளையம்
விளையாட்டாய் உட்செலுத்திய இரு கால்களையும் சிக்கெனப் பற்றிக் கொண்டது
நகரவியலாத பிறிதொரு வெறும்பொழுதில் கிடைத்த சங்கிலியால் கைகளைப் பிணைந்தேன்
வளர்ந்த சங்கிலி அணைந்தது உடலெங்கும்
கலகலவெனும் ஓசையில் புல்லரிக்கிறது உடல்
புரண்டு புரண்டு இசை நுகர்கிறேன்
இரும்பின் அழுத்தத்தில் கூடலின் சுவை
அழுத்த அழுத்த
ஓசை ஓசை இசை

துயர் மிகுந்த திவ்விரவு
காற்றில் அலை பாய்கிறது