குளிர் நிழலென
பறவைக் கூடுகையின் கீழ்
குந்திக் கொண்டு
எச்சத்
தெறிப்புகளுக்கெல்லாம்…
நெற்றிக் கண்ணைத்
திறந்தால் எப்படி…?

கூடுகளில் குஞ்சுகளின் சத்தம்
கேட்ட பிறகு
கூடுதல் பொறுப்பு.
உச்சந் தலையை உலுக்கும்
காற்றுக்கெல்லாம்…
தாங்கிப்பிடித்து மெல்ல
கிளைகளை அசைக்கிறது -
மரம்.

பசியாற்றுவதுதான் நோக்கமெனினும்
உரிக்காமல் கொரிக்காமல்
அப்படியே விழுங்குகிற
பறவைகளைத்தான்…
அதிகம் நேசிக்கின்றன -
விதைகள்.

சேகரிப்பில் சிக்கிய
விதை மணி.
ஈரங் கண்டால்
முளைக்கப் பார்க்கும்.
மூக்கைக் கிள்ளி
வளைக்குள் வைத்தது -
எறும்பு.

உழவில் மிதந்த விதை.
மறுமழையிலேயே முளைத்தும்
மணிக்கதிரைக்
கொண்டு போவதற்குள்…
அறுவடை.
கொல்லைக்காரனுக்கு
இல்லையென்றாலும்
குருவிகளுக்கானதில் -
மகிழ்ச்சிதான்.

தரம் பிரிப்பில் தவறிவந்த
நோஞ்சான் விதை.
கவனத்திற் கொள்ளாமல்
முளைக்கவும் வைத்துவிட்டது -
நிலம்.
பாவம்…
இளம் வெயிலையும்
எதிர்கொள்ள முடியாமல்
வதங்கிச் சுருள்கிறது -
செடி.

விழுந்து கிடந்த
வேப்பங்கொட்டைகள் எல்லாமும்
முளைத்துக்கொள்ளவும்
ஆண்மைப் பெருமையில்
அகமகிழ்ந்து போகிறது -
மரம்.

தரையைத் துண்டித்து வைத்த
தாழ்வார தொட்டிச்செடி.
வட்டச் செடியடியில்
சோலைகளாட்டிய
புல்லைப் பிடுங்கினேன்.
பஞ்சு வேர்களில்
தொற்றிக்கொண்டு நெளிந்தது…
புதுமண்ணில் முளைத்தவோர்
பிஞ்சு மண்புழு.

கொட்டிக் கொட்டிக்
கொடுத்தாலும்
தொட்டிக்குள் அடங்கவில்லை.
துளை வழியே
எட்டிப் பார்க்கின்றன -
வேர்கள்.

அரும்பிய
புதுவேர் முனைகளை
சீண்டிச்சீண்டி விளையாடுகின்றன -
குட்டி மண்புழுக்கள்.
கூச்சத்தில்
சிலிர்த்துச் சிலிர்த்து
அழகுகாட்டுகின்றன…
புத்தம்புதிதாய் ஊன்றிய -
சின்னஞ்சிறு செடிகள்.

அங்குமிங்குமாய்
அலைமோதி அல்லல்படுகிறது…
சருகின்
பூதவுடல்.
மரித்து மக்கவைத்து
ஆன்மாவை
அமைதியடையச் செய்தது -
மண்.

செடிகளற்ற தொட்டியில்
முளைத்திருக்கும்
புற்கள்.
புதைமேடையை
நினைவுபடுத்துகின்றன.

தோட்டத்தில்
இடையூறாய் ஒரு துத்தி.
உச்சியில்
ஒற்றைச்சடையின் மேல்
துலங்கும் சாமந்தியாய்…
சற்று முன்னர் பூத்தவொரு-
மஞ்சள் மகிழ்ச்சி.
நாளை
பிடுங்கிக்கொள்ளலாமென
மனம் மாறுகிறேன்.

பழுத்து உதிர்கிற
எலுமிச்சையை
ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
கனியாத கொய்யாவுக்கே -
கன்னம் வைக்கின்றன…
அணிற்பிள்ளைகள்.

ஒடிந்து
விழுந்துதான்
தனது உச்சபட்ச
காய்ப்புத் திறனை
மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது -
முருங்கை.

இடித்துப் புடைத்து
கீழ்மாரி கொண்டு வந்த
மேகம்.
முதலில்
முருங்கைப் பூக்களை
உலுக்கிப் போட்டுதான்
மழைமுரசு கொட்டுகிறது.

காய்ச்சலில் கிடந்த
செடி.
காலடியில் ஊற்றிய
தண்ணீர்.
வேர்களின் தாகம்
அடங்குவதற்குள்…
வெங்காந்த பூமியே -
குடித்துவிடுகிறது.

பூக்களற்ற
தோட்ட வெளி.
மாளாப் பெருவழியாய்
நீண்டு கொண்டேயிருக்கிறது…
வண்ணத்துப் பூச்சியின் -
பயணம்

முறிந்த கிளை.
உறுத்தும் ஊனம்.
சுற்றிலும்
தளிர்களாய்த் துளிர்த்து
தழைகளால்
போர்த்தின.

கனியை உண்ட
களிப்பில்
விதைக்கூட்டை உடைத்து
விடுதலை செய்கிறாய்.
தண்டனை என்கிறது…
பறக்கத் தடுமாறி உருளும் -
வண்டு.

எவரையுமே திரும்பிப்
புன்னகைக்க வைக்கிற
அக் குழந்தைக்கு…
கன்னங்கள், கரங்கள், பாதங்களென…
ஏகமாய்
திருஷ்டிப் பொட்டுகள்.
உண்மையில்
வைத்திருக்க வேண்டியது…
மடியில்
குந்த வைத்துக் கொஞ்சுகிற
அவளுக்குத்தான்.
செல்ல சீவுதலில்கூட
கொத்தாய்
சீப்போடு வந்துவிடுகிற
கூந்தல் இழைகள்…
வேரோடு கோத்து
விரல்களால் வளைக்கும்
இரவின் வன்பிடிகளில் மட்டும்
இரும்பிழையாய்
ஊன்றிக்கொள்கின்றன.

தாலிகட்டிய கையோடு
தனிக்குடித்தனம் வந்தவள்
காய்கறிக்கடையில்
வளையல்கள் குலுங்க
வெண்டையின்
முனைகளை ஒடிக்கிறாள்.
மருதாணிப் பூச்சோடு
விரல்கள் முறிகிற
ஓசை கேட்கிறது.

அதிர்வில் சிறகடித்தோடும்
புறாக்களைப் பார்த்துப் பார்த்து
இப்போதெல்லாம்
பறக்கத் தொடங்குகிற
கணத்திலேயே
ஒலிக்கப்
பழகிக்கொண்டுவிட்டன…
கோயில் மணிகள்.

பலிபீடத்தில் ஓங்கியிருக்கும்
கொடுவாளுக்கு
முதல்முயற்சியிலேயே
துண்டித்துவிட வேண்டுமென்பது தவிர…
நோக்கம்
வேறு என்னவாக
இருக்க முடியும்.

குளிர் நிழலென
பறவைக் கூடுகையின் கீழ்
குந்திக் கொண்டு
எச்சத்
தெறிப்புகளுக்கெல்லாம்…
நெற்றிக் கண்ணைத்
திறந்தால் எப்படி…?

கூடுகளில் குஞ்சுகளின் சத்தம்
கேட்ட பிறகு
கூடுதல் பொறுப்பு.
உச்சந் தலையை உலுக்கும்
காற்றுக்கெல்லாம்…
தாங்கிப்பிடித்து மெல்ல
கிளைகளை அசைக்கிறது -
மரம்.

பசியாற்றுவதுதான் நோக்கமெனினும்
உரிக்காமல் கொரிக்காமல்
அப்படியே விழுங்குகிற
பறவைகளைத்தான்…
அதிகம் நேசிக்கின்றன -
விதைகள்.

சேகரிப்பில் சிக்கிய
விதை மணி.
ஈரங் கண்டால்
முளைக்கப் பார்க்கும்.
மூக்கைக் கிள்ளி
வளைக்குள் வைத்தது -
எறும்பு.

உழவில் மிதந்த விதை.
மறுமழையிலேயே முளைத்தும்
மணிக்கதிரைக்
கொண்டு போவதற்குள்…
அறுவடை.
கொல்லைக்காரனுக்கு
இல்லையென்றாலும்
குருவிகளுக்கானதில் -
மகிழ்ச்சிதான்.

தரம் பிரிப்பில் தவறிவந்த
நோஞ்சான் விதை.
கவனத்திற் கொள்ளாமல்
முளைக்கவும் வைத்துவிட்டது -
நிலம்.
பாவம்…
இளம் வெயிலையும்
எதிர்கொள்ள முடியாமல்
வதங்கிச் சுருள்கிறது -
செடி.

விழுந்து கிடந்த
வேப்பங்கொட்டைகள் எல்லாமும்
முளைத்துக்கொள்ளவும்
ஆண்மைப் பெருமையில்
அகமகிழ்ந்து போகிறது -
மரம்.

தரையைத் துண்டித்து வைத்த
தாழ்வார தொட்டிச்செடி.
வட்டச் செடியடியில்
சோலைகளாட்டிய
புல்லைப் பிடுங்கினேன்.
பஞ்சு வேர்களில்
தொற்றிக்கொண்டு நெளிந்தது…
புதுமண்ணில் முளைத்தவோர்
பிஞ்சு மண்புழு.

கொட்டிக் கொட்டிக்
கொடுத்தாலும்
தொட்டிக்குள் அடங்கவில்லை.
துளை வழியே
எட்டிப் பார்க்கின்றன -
வேர்கள்.

அரும்பிய
புதுவேர் முனைகளை
சீண்டிச்சீண்டி விளையாடுகின்றன -
குட்டி மண்புழுக்கள்.
கூச்சத்தில்
சிலிர்த்துச் சிலிர்த்து
அழகுகாட்டுகின்றன…
புத்தம்புதிதாய் ஊன்றிய -
சின்னஞ்சிறு செடிகள்.

அங்குமிங்குமாய்
அலைமோதி அல்லல்படுகிறது…
சருகின்
பூதவுடல்.
மரித்து மக்கவைத்து
ஆன்மாவை
அமைதியடையச் செய்தது -
மண்.

செடிகளற்ற தொட்டியில்
முளைத்திருக்கும்
புற்கள்.
புதைமேடையை
நினைவுபடுத்துகின்றன.

தோட்டத்தில்
இடையூறாய் ஒரு துத்தி.
உச்சியில்
ஒற்றைச்சடையின் மேல்
துலங்கும் சாமந்தியாய்…
சற்று முன்னர் பூத்தவொரு-
மஞ்சள் மகிழ்ச்சி.
நாளை
பிடுங்கிக்கொள்ளலாமென
மனம் மாறுகிறேன்.

பழுத்து உதிர்கிற
எலுமிச்சையை
ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
கனியாத கொய்யாவுக்கே -
கன்னம் வைக்கின்றன…
அணிற்பிள்ளைகள்.

ஒடிந்து
விழுந்துதான்
தனது உச்சபட்ச
காய்ப்புத் திறனை
மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது -
முருங்கை.

இடித்துப் புடைத்து
கீழ்மாரி கொண்டு வந்த
மேகம்.
முதலில்
முருங்கைப் பூக்களை
உலுக்கிப் போட்டுதான்
மழைமுரசு கொட்டுகிறது.

காய்ச்சலில் கிடந்த
செடி.
காலடியில் ஊற்றிய
தண்ணீர்.
வேர்களின் தாகம்
அடங்குவதற்குள்…
வெங்காந்த பூமியே -
குடித்துவிடுகிறது.

பூக்களற்ற
தோட்ட வெளி.
மாளாப் பெருவழியாய்
நீண்டு கொண்டேயிருக்கிறது…
வண்ணத்துப் பூச்சியின் -
பயணம்

முறிந்த கிளை.
உறுத்தும் ஊனம்.
சுற்றிலும்
தளிர்களாய்த் துளிர்த்து
தழைகளால்
போர்த்தின.

கனியை உண்ட
களிப்பில்
விதைக்கூட்டை உடைத்து
விடுதலை செய்கிறாய்.
தண்டனை என்கிறது…
பறக்கத் தடுமாறி உருளும் -
வண்டு.

எவரையுமே திரும்பிப்
புன்னகைக்க வைக்கிற
அக் குழந்தைக்கு…
கன்னங்கள், கரங்கள், பாதங்களென…
ஏகமாய்
திருஷ்டிப் பொட்டுகள்.
உண்மையில்
வைத்திருக்க வேண்டியது…
மடியில்
குந்த வைத்துக் கொஞ்சுகிற
அவளுக்குத்தான்.
செல்ல சீவுதலில்கூட
கொத்தாய்
சீப்போடு வந்துவிடுகிற
கூந்தல் இழைகள்…
வேரோடு கோத்து
விரல்களால் வளைக்கும்
இரவின் வன்பிடிகளில் மட்டும்
இரும்பிழையாய்
ஊன்றிக்கொள்கின்றன.

தாலிகட்டிய கையோடு
தனிக்குடித்தனம் வந்தவள்
காய்கறிக்கடையில்
வளையல்கள் குலுங்க
வெண்டையின்
முனைகளை ஒடிக்கிறாள்.
மருதாணிப் பூச்சோடு
விரல்கள் முறிகிற
ஓசை கேட்கிறது.

அதிர்வில் சிறகடித்தோடும்
புறாக்களைப் பார்த்துப் பார்த்து
இப்போதெல்லாம்
பறக்கத் தொடங்குகிற
கணத்திலேயே
ஒலிக்கப்
பழகிக்கொண்டுவிட்டன…
கோயில் மணிகள்.

பலிபீடத்தில் ஓங்கியிருக்கும்
கொடுவாளுக்கு
முதல்முயற்சியிலேயே
துண்டித்துவிட வேண்டுமென்பது தவிர…
நோக்கம்
வேறு என்னவாக
இருக்க முடியும்.