மின்சார ரயில் சிவுக் என்று இழுபட்டபோது, வாசல் கம்பியைப் பற்றிக்கொண்டு கிட்டத்தட்ட பெட்டிக்குள் வந்து விழுந்த அவளை பாலச்சந்திரன் பார்த்தான். அவனுள் எதுவோ புரண்டது. இது அவளா?

சரியான கூட்டம். அவள் அவனுக்கு முதுகு காட்டி, பெட்டியின் இடுப்புயரத் தடுப்பின்மீது சாய்ந்து நின்றாள். கூட்டம் விலகாமல் அவளைச் சரியாகப் பார்க்க முடியாது என்று புரிந்தது.

கடற்கரை நிலையத்தில் ரயில் நின்றது. இறங்கினான். பிளாட்பாரத்தில் பத்தடி முன்னால் அவள் சென்றுகொண்டிருந்தாள்.

அந்த நடையின் சிறு துள்ளல் அவனுக்கு மிகவும் பழக்கமான ஒன்றாகத் தோன்றியது. காலைக் கொஞ்சம் எட்டி வைத்தான். சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் அவளைக் கடந்து படிகளில் இறங்கினான். ஓரப்பார்வையாகப் பார்த்தான்.

சித்ராவேதான்! மயிர்க்கால்கள் குத்திட்டுக்கொண்டன! உலகம் ரொம்பச் சிறியதுதான். எவளை வாழ்நாளில் இனி பார்க்கவே முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தானோ அதே சித்ரா. முப்பத்திரண்டு வயதிலும் அதே செழிப்புடன் விளங்கினாள்.

அவளும் அவனைப் பார்த்தாள். கண்களில் ஒரு திகில் மின்னல் தோன்றி மறைந்தது. ஆனாலும் அவன் யாரோ, எவனோ என்ற பாவனையில் கடந்து போனாள்.

படியேறியதும் ஒரு வங்கிக் கிளையில் அவள் நுழைய முற்பட்டபோது “சித்ரா...” என்று அழைத்தான்.

அவனது குரல் அவளை ஈர்த்து நிறுத்தியது. இருந்தும் காதில் விழாதவள்போல் வங்கியில் நுழையப்பார்த்தாள்.

பாலச்சந்திரன் வழி மறித்தான். அகன்ற விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தாள். வலது கண்ணின் வெண்பரப்பில் தெரிந்த அந்தப் பழுப்புக் கடுகு மச்சம். செழிப்பான உதடுகளின் குறுக்கோடிய அந்தத் தழும்பு. சித்ராவேதான்!

“சித்ரா, என்னைத் தெரிலன்னு மாத்திரம் சொல்லிடாதே. அது பொய்னு ஒனக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.”

அவள் கண்களில் சிறு அச்சம். உதடுகளில் சிறு புன்னகை.

“ஏன்னு தெரிஞ்சிக்கணும்.. அதானே?”

பாலச்சந்திரன் மௌனமாக இருந்தான்.

“ஒரு மணி நேரம் குடு. பாங்க்ல ஒரு வேலை. முடிச்சிட்டு வந்துடறேன். பக்கத்து ஹோட்டல்ல ஏதாவது சாப்ட்டுக்கிட்டே பேசலாம்” என்றாள்.

வங்கிக்குள் போய்விட்டாள்.

பாலச்சந்திரன் வாசலிலேயே நின்றான். ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஒரு வருஷமோ... அவளைப் பார்த்துவிட்டுத்தான் போவது! பதினைந்து வருஷத் தவிப்பு! அது ஜன்மத் தவிப்பாக ஆகிவிடக்கூடாது.

மனம் பதினைந்து ஆண்டுகளைப் பின்தள்ளியது.

மாற்றல் என்று வந்துவிட்டாலே அப்பாவுக்கு ஆயிரம் கவலைகள்! வாடகைக்கு வீடு. மகனுக்குப் பள்ளி. கைராசி டாக்டர். பண்ட, பாத்திரக்கடை... முடிவே இல்லாத கவலைப் பட்டியல்!

வங்கி வேலை. இந்தியாவில் எந்த மூலை என்றாலும் போகத்தான் வேண்டும். கும்பகோணம் அப்படி ஒன்றும் ‘தண்ணி இல்லாக் காடு’ இல்லை.

இன்னமும் பாரம்பர்யத்தைப் பேணிக்கொண்டிருந்த, வணிகத்தாக்கம் இல்லாத காமாட்சி ஜோசியர் தெருவில் வாடகைக்கு வீடு கிடைத்தது. டவுன் ஹைஸ்கூலில் பாலுவுக்குப் பத்தாம் வகுப்பில் இடமும் கிடைத்துவிட்டது.

பாலுவுக்குப் பழைமை மாறாத அந்த வீடு ரொம்பவும் பிடித்திருந்தது. வாசலை ஒட்டி இருபுறங்களிலும் திண்ணை. நுழைந்ததும் அரை இருட்டுடன் சிறு நடை. அடுத்து திறந்த வெளி முற்றம். முற்றத்தின் விலாவில் கூடம். அதன் இரு எல்லைகளிலும் அறைகள். தவிர சமையல் அறை, ஸ்டோர் ரூமுடன் பின்கட்டு. அதையும் கடந்தால் பாத்ரூம். கழிப்பறை. பின்கதவைத் திறந்தால் சாக்கடை சலசலக்கும் தோட்டம். அங்கே எப்போதும் இரண்டு கொழுத்த பன்றிகள் குட்டிகளுடனும் செல்லமான சிற்றுறுமல்க ளுடனும் மேய்ந்துகொண்டிருக்கும்.

ரயிலடியில் அரட்டை, ஆற்றுப்படுகையில் கபடி, சாரங்கபாணிக் கோயிலில் தாவணிப் பெண்கள் என்று வாழ்க்கை சுவாரசியமாகத்தான் இருந்தது.

ஒரு முன்மாலையில் அம்மா காய்கறி வாங்க மடத்துத்தெரு வரை போயிருந்தாள். திண்ணைச் சுவர்ப் பிறைகளில் அகல் விளக்குகள். நெருப்பு முத்துகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

மாலை வேளைகளில் தெரு அப்படித்தான் காட்சியளிக்கும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஊதுபத்திப் புகை நெளிந்து, நெளிந்து தெருவை அடைந்து திட்டுத்திட்டாய் மணக்கும். நித்தியமல்லி வாசனை, பவழமல்லி வாசனை. தெருவே மணங்களால் ஆனதுபோல் தோன்றும்.

மெல்ல ஊசலாடிய கூடத்து ஊஞ்சலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து பாலு படித்துக்கொண்டிருந்தான்.

‘டொக்.. டொக்..’ என்று சத்தம் கேட்டது. பாலு திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

திறந்திருந்த வாசல் கதவருகே அவள் நின்றிருந்தாள். பாவாடை, தாவணி. நெற்றியில் திலகம். முல்லைச்சரம்.

அவள் முகத்தில் அப்படி ஓர் ஈர்ப்பு! கோயிலில் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்படுவதை உணர்ந்திருக்கிறான். இவள் அவர்களைவிட அதிகக் கிளர்ச்சியை ஏற்படுத்தினாள்.

பாலு அவளைக் கவனித்ததைப் பார்த்ததும், அவள் அவனைப் பார்ப்பதை விட்டுப் பின்கட்டை நோக்கி, “புவனா மாமி...” என்றாள்.

பாலு புத்தகத்துடன் அவளை நோக்கி வந்தான். “அம்மா காய் வாங்கப் போயிருக்காங்க…”

“கோலபுக்கைக் குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். இந்தா.” வாங்கிக்கொண்டான். அவள் திரும்பித் தடதடவென்று படிகளில் இறங்கினாள்.

“யாரு வந்து கொடுத்ததா அம்மா கிட்ட சொல்றது?’

“எதிர்வீட்டுச் சித்ரான்னா மாமிக்குத் தெரியும். நான் யார்கிட்ட புக்கைக் கொடுத்தேன்னு புவனா மாமிகிட்ட சொல்றது?” என்று அவள் கேட்டாள்.

பாலு அவளைப் பார்த்தான். மை தீட்டிய கண்கள் ஒளிர்ந்தன. அவற்றில் கொஞ்சம் குறும்பும் எட்டிப்பார்த்தது.

“பாலு. பாலச்சந்திரன்... ஒனக்கு புவனா மாமி. எனக்கு அம்மா.”

சிரித்தாள். தலையாட்டியபடி இறங்கித் தெருவைக் கடந்து எதிர் வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவள் நின்றிருந்த இடத்தில் முல்லையின் வாசம் மிச்சமிருந்தது.

சித்ரா வேணி மாமியின் மகள் என்று அன்றைக்குத்தான் அவனுக்குத் தெரிந்தது. அவனைவிட இரண்டு வருடம் சீனியர். ப்ளஸ் டூ. அவள் அப்பாவுக்குத் தஞ்சாவூரில் இன்கம்டாக்ஸ் ஆஃபீஸில் வேலை.

வேணி மாமியும், அம்மாவும் நெருக்கமான தோழிகள். இருவரும் மாறி, மாறி இரு வீடுகளிலும் சந்தித்துக்கொள்வார்கள். கோயிலுக்குப் போவார்கள்சினிமாவுக்குப் போவார்கள். சாமி, சமையல் என்று பேசுவார்கள். சர்க்கரை, காபிப்பொடி என்று பண்டமாற்றம் செய்து கொள்வார்கள்.

எதிர்வீட்டிலேயே இவ்வளவு அழகான சித்ரா இருப்பது இத்தனை நாள் தெரியாமற்போயிற்றே என்று ஆதங்கப்பட்டான்.

அதன்பின் தினமும் சாயங்காலங்களில் சித்ரா வீட்டுக்கு வருவாள். அம்மாவிடம் எதையாவது கொடுப்பாள். எதையாவது வாங்கிப்போவாள்.

சமையற்கட்டுக்குப் போகும்போதும், வரும்போதும் பாலுவின்மீது ஒரு புன்னகையை எறிவாள். பாலுவும் பதிலுக்குப் புன்னகைப்பான். ஒன்றிரண்டு வார்த்தைப் பரிமாறல்கள். முறுக்கு, சீடை என்று கையில் உள்ளதை அவன் உள்ளங்கையில் நிரப்பிவிட்டுப் போவாள்.

பாலுவுக்கும் சித்ரா வீட்டுக்குப் போவதென்றால் குஷியாகத்தான் இருக்கும். மோர்க்குழம்பு, காபிப்பொடி, அவர்கள் கொல்லை முருங்கைக்கீரை என்று ஏதோ ஒரு சாக்குடன் எதிர்வீட்டுப் படியேறுவான். தாவணி இல்லாத, பாவாடை-சட்டை அணிந்த சித்ராவைப் பார்ப்பான். அவளும் அவன் வரவை அங்கீகரிப்பாள்.

‘வாடா, போடா - வாடி, போடி’ என்று அந்நியோன்யம் வளர்ந்துவிட்டது.

‘காவிரியில் நீர் வரத்து’ என்று தொலைக்காட்சிப் பெட்டியில் கிளிப்பிங்குடன் அறிவித்துவிட்டால், அதன்பின் கொஞ்ச நாள்களுக்கு ஊரில் அத்தனை பேருக்கும் ஆற்றுக் குளியல்தான். காவிரிக்குப் போகும்போதெல்லாம் பெண்கள் படித்துறையில் சித்ராவைத் தேடுவான். சில நாள்களில் அவள் இருப்பாள். மார்பு வரை உயர்த்திக் கட்டிய பாவாடையுடன் துணி தோய்த்தபடி அவனைப் பார்த்துச் சிரிப்பாள்.

அவள் இல்லாத நாள்களில் காவிரியே வெறிச்சிட்ட மாதிரி இருக்கும். ஆனால் பாலத்துக் கட்டைச் சுவரில் நின்று குதிப்பதற்குத் தயாராகும்போது பின்னாலிருந்து இரண்டு கைகளையும் அவன் முதுகில் பதித்துத் தள்ளி விடுவாள். அப்போதுதான் அவள் ஒளிந்திருந்து அவனுக்கு விளையாட்டு காட்டியிருக்கிறாள் என்பது தெரியும்.

காவிரிக்குப் போகாத ஒருநாள் காலையில் அவன் குளித்துவிட்டு, ஈரமான அரை டிராயருடன், தலை துவட்டிக்கொண்டே பாத்ரூமில் இருந்து வந்தபோது மெத்தென்று மோதிக்கொண்டான். பதறிப் போய்த் துண்டை விலக்கினான்.

சித்ரா நின்றிருந்தாள். வெட்கினான். வெற்று மார்பைத் துண்டால் மூடிக்கொண்டான்.

“தெரியுண்டா. நான் வர்ரதைப் பாத்துட்டுத்தானே துண்டால மூஞ்சியை மூடிட்டு வந்து எம்மேல இடிச்சே.?”

“போடி.. பெரிய சிம்ரன்! இவமேல இடிக்கணுன்றதுதான் என் வாழ்க்கை லட்சியமாம்.”

சித்ரா கண்களை அகல விரித்து, அவனை ஒருமுறை முறைத்துவிட்டுப் போய்விட்டாள்.

அன்றைக்கு மாலையில் தெருவில் சித்ராவும் நான்கைந்து பெண்களும் சேர்ந்து கைகோத்துத் தட்டாமாலை சுற்றினார்கள்.

பாலு திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தான். அவர்களின் பாவாடைகள் ஒரே சீராக மேலெழும்பி அலை அலையாய்த் தாழ்ந்து, ஏறி, தாழ்ந்து, ஏறி... அந்த விளையாட்டு அவனை வசீகரித்தது.

ஆடி முடித்துத் தள்ளாடியபடியே சித்ரா சுழன்று வந்து திண்ணையில் அவனுக்கு அருகில் மல்லாந்தாள். அவளது ஒரு கை அவனது தொடையில் படர்ந்தது. பதறிப் போய் விலகினான்.

மூச்சிரைப்பினூடே சித்ரா சிரித்தாள். “சுட்டுடுச்சா?” என்று கேட்டாள்.

அவள் என்ன கேட்கிறாள் என்று புரியவில்லை. “டீ.. சித்ரா.. என்கூட ஒரு தடவை தட்டாமாலை சுத்தறியா?’’

“ஆசை... தோசை... அப்பளம்... வடை... இது கேர்ள்ஸ் ஆட்டம். பாய்ஸையெல்லாம் சேத்துக்க மாட்டோம்…”

பாலுவின் முகம் சுண்டியது. சித்ரா சிரித்துக்கொண்டே எழுந்து போனாள்.

இரண்டு நாள்கள் கழித்து ஒரு மாலை. விளக்கு வைத்த நேரம். வழக்கம்போல் தெருவை மணங்கள் நிறைத்திருந்தன. பாலு ஊஞ்சலில் குந்தி உட்கார்ந்து கணக்கு நோட்டுக்கு அட்டை போட்டுக்கொண்டிருந்தான்.

அம்மா, சித்ராவின் அம்மாவோடு கோயிலுக்குப் போயிருந்தாள். அப்பா ஒன்பது மணிக்கு முன்னால் வீடு திரும்பியதில்லை.

‘டொக்… டொக்...’

பாலு நிமிர்ந்து பார்த்தான். சித்ரா குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.

“என்னடி?” என்றான்.

“கொஞ்சம் வீட்டுக்கு வரியாடா? அம்மா முருங்கை மரத்துக் கம்பளிப்பூச்சியையெல்லாம் வெரட்டச் சொல்லிட்டுப் போய்ட்டாங்க... எனக்கு அதை எப்படி வெரட்டறதுன்னே தெரியல.”

“எனக்கு மட்டும் எப்பட்ரி தெரியும்?”

“குமுட்டில கம்பியைப் போட்டுக் காய்ச்சிட்டிருக்கேன். பாட்டி அந்தச் சூட்டுக்கம்பியைப் பக்கத்தில கொண்டு போனாலே கம்பளிப்பூச்சியெல்லாம் சுருண்டு விழுந்துடும். நீயும் அதே மாதிரி பண்ணேன்...”

அவள் பதிலுக்குக் காத்திராமல் சிறு துள்ளல் நடையுடன் போனாள். பாலு ஊஞ்சலில் இருந்து குதித்தான். பேய்த்தனமாகப் பின்னுக்குச் சென்ற ஊஞ்சல் அதே விசையுடன் முன்னால் வந்தபோது இடுப்பை லாகவமாக வளைத்து அதன் மோதலில் இருந்து தப்பித்துக்கொண்டான்.

சாமி விளக்கை அமர்த்திவிட்டு வாசலுக்கு வந்தான். தெருவைக் கடந்து எதிர் வீட்டில் நுழைந்தான்.

மாட்டுக்கொல்லையில் சற்றே பள்ளமாக இருந்த முற்றத்தைச் சுற்றி இருந்த தாழ்வாரத்தில், குமுட்டி அடுப்பில் கம்பி காய்ந்துகொண்டிருந்தது. முற்றத்துப் பசு அவனைப் பார்த்தவுடன் ஒரு முறை தலையை ஆட்டியது. கழுத்து மணி கிணுகிணுத்தது. புஸ்ஸென்று மூச்சுவிட்டது.

அடுப்பையே வெறித்தபடி சித்ரா நின்றிருந்தாள். லக்ஷ்மியின் கழுத்து மணிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் ஏதோ ஒரு வெளிச்சப் பிரதிபலிப்பில் நாகக் கண்களாகப் பளபளத்தன. வலது கண்ணில் கடுகளவு பழுப்பு மச்சம் அந்த அரையிருட்டிலும் தெரிந்தது.

“கம்பி இன்னும் சுடலைடா…” என்றாள். தாவணி மறைத்திருந்தாலும் அவளுடைய மார்புகள் ஏறித்தாழ்ந்ததை அவனால் உணரமுடிந்தது.

“ஒனக்குத் தட்டாமாலை சுத்த அவ்வளவு பிடிக்குமாடா?”

“ம்...” என்றான்.

கைகளை நீட்டினாள். “சுத்தலாமா?”

பாலு ஆவலுடன் அவள் கரங்களைப் பற்றினான். தாழ்வாரம் நல்ல அகலம். அதில் அவனுடைய இரு கைகளையும் பற்றி அவள் கரகரவெனச் சுற்றினாள்.

உலகமே சுழல்வதுபோல் இருந்தது. தலை கிறுகிறுத்தது. ஆனாலும் பரவசமாய் இருந்தது. எங்கே விட்டுவிடுவாளோ என்ற பயத்தில் பாலு அவளுடைய கைகளை இறுக்கமாகப் பற்றினான்.

சிரித்தாள். சுற்றிச் சுற்றிச் சுற்றி இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் “போதுண்டி..போதுண்டி..” என்று இரைந்தான். அவள் அவனுடைய கைகளை விடுவித்தாள். அவன் மேலும் இரண்டு சுற்றுகள் சுற்றி, கீழே விழாமல் இருக்க சுவரின் மீது உள்ளங்கையைப் பதித்தபோது சித்ரா அவன்மீது மோதினாள்.

அவள் கண்கள் கிறங்கி இருந்தன. செழிப்பான உதடுகள் துடித்தன. மேலுதட்டின் மேற்புறத்தில் பூத்திருந்த வியர்வை வைரங்கள் நடுங்கின. அவன் உதடுகள் அவள் உதடுகளில் பட்டன. சட்டென்று அவள் அவன்மேல் பூச்சரமாகத் தொய்ந்தாள். அவனுடைய உதடுகளைக் கவ்வினாள்.

பாலுவுக்கு அதிர்ச்சியும் பரவசமுமாக இருந்தது. அவன் கரங்கள் தன்னிச்சையாக அவளது பின்புறத்தை அழுத்தின. திண்ணிய, மெத்தென்ற படுகை. அதில் அவன் கரங்கள் புதைந்தன.

பாலுவால் அந்தக் கிளர்ச்சியைத் தாளமுடியவில்லை.

அவன் அவளது முகத்தைப் பெருமயக்கத்துடன் நோக்கினான். திறந்திருந்த அவளுடைய அரைக்கண்கள் திடீரென்று கோரமாக விரிந்தன. பலங்கொண்ட மட்டும் அவனைப் பிடித்துத் தள்ளினாள். உதடுகள் பிய்த்துக்கொள்ள பாலு மல்லாக்க விழுந்தான்.

“சண்டாளா... சண்டாளா. பாரும்மா. இந்த பாலு பண்ணின அக்கிரமத்தை... தனியா இருக்கறதத் தெரிஞ்சிக்கிட்டு வந்து என்னைப் பிடிச்சி... என்னைப் பிடிச்சி...”- சித்ரா அழத்தொடங்கினாள்.

திகைப்பிலிருந்து மீளாமலேயே பாலு பின்னால் திரும்பிப் பார்த்தான். அம்மாவும், வேணி மாமியும் கண்கள் விரிய, திகிலுடன் நின்றிருந்தார்கள்.

என்ன நடக்கிறது என்று தெரியுமுன்பே சித்ரா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த கம்பியை எடுத்துத் தன் உதடுகளின் குறுக்காக வைத்து ஒரே இழுப்பாக இழுத்தாள்.

‘ஆ’ என்று அரற்றினாள்.

அலறலுடன் வேணி மாமி ஒரே எட்டில் சித்ராவை அணுகி அவள் கையில் இருந்து கம்பியைப் பிடுங்கி வீசி எறிந்தாள்.

பசு துள்ளித் துள்ளிக் குதித்தது. தளையிலிருந்து பிய்த்துக்கொள்ளப் பார்த்தது.

எல்லோரும் சேர்ந்து பாலுவைச் சிலுவையில் அறைந்தார்கள். மானம் போய்விட்டதென்று அம்மா, அப்பா இருவருமே வெளியே தலைகாட்டவில்லை. அவனுடன் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

அப்பா வங்கி நிர்வாகத்திடம் கெஞ்சி, வேறு ஏதோ ஓர் ஊருக்கு மாற்றல் வாங்கிவிட்டார்.

அவனை நிராகரித்துவிட்டு அப்பா புறப்பட்டார். கதறக் கதற அம்மாவை இழுத்துக்கொண்டு போனார். பதினைந்து வயதில் திடீரென்று அநாதையாக்கப்பட்டான். கோயில் அன்னதானத்தில் ஒரு வேளைச் சோறு. தன் மீதே வெறுப்பாக இருந்தது. செத்துப்போய் விடலாம் என்று தோன்றியது. தைரியம் வரவில்லை. கும்பகோணத்துக்குப் பாத்திரம் வாங்க வந்த கடைக்காரர் அவனைப் பார்த்து, காசிக்குக் கூட்டிச் சென்றார்.

விஸ்வநாதரும், அன்னபூரணியும் அவனை அணைத்து, வளர்த்தார்கள்.

பஞ்சலோக விக்கிரகங்கள், பித்தளை விளக்குகள், பஞ்சபாத்திரம், கங்கை நீர் செப்புக்குடங்கள் போன்றவற்றைக் கும்பகோணத்தில் வாங்கிவந்து, காசியில் சில்லறைக் கடைகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தான்.

தனிக்கடை வைக்கும் அளவுக்குப் பணம் சேர்ந்தது. பத்து ஆண்டுகளில் மொத்த வியாபார முதலாளி ஆகிவிட்டான்.

அப்பா வேலை செய்த வங்கிக்குக் காசியில் கிளை இருந்தது. அங்கே விசாரித்து அப்பா எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு அவர்களைப் போய்ப் பார்த்து...

அம்மாவைப் பிள்ளைப்பாசம் வென்றது. அப்பாவைக் காலம் கனிய வைத்திருந்தது. சேர்ந்துகொண்டார்கள். திருமணம் மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கல்லாகவே இருந்தாலும், ஒரு சொல்லும் உதிர்க்காவிட்டாலும் அன்னபூரணி தரும் ஆனந்தத்தை, ரத்தமும் சதையும், கொஞ்சு மொழியும் சிரிப்பும், ஆசையும் வஞ்சமும், காமமும் குரோதமும் கொண்ட எந்தப் பெண்ணாலும் தரமுடியாது என்பதில் அவன் தீர்மானமாக இருந்தான்.

இருந்தாலும் ‘ஏன்?’ என்ற கேள்வி, நாளும் நாளும் அவனது தவிப்பை அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.

இப்போதுகூட கும்பகோணத்துக்குத்தான் பயணம்.

வசீகரமான கும்பகோணம் அவனுக்குத் தவிப்பையும் பரவசத்தையும் கொடுக்கும் ஊர். எப்போதும்போல, கும்பேஸ்வரன் கோயில் அருகில் இருக்கும் பாத்திரக்கடையில் ஆர்டர் கொடுப்பான். சென்னையிலும் தேவையான சில பொருள்களை வாங்கிக்கொண்டு காசி திரும்புவான்.

ஒரு மணி நேரம் கழித்து சித்ரா வங்கியிலிருந்து வெளியே வந்தாள். வாசலிலேயே நின்றிருந்த அவனைப் பார்த்தாள்.

நல்ல ஏ.சி. ஹோட்டல் ஒன்றில் ஒரு மூலை மேஜையைத் தேர்ந்தெடுத்து எதிர் எதிரே அமர்ந்தார்கள். பாலச்சந்திரன் அவளுக்கும் சேர்த்து சாப்பாடு ஆர்டர் செய்தான். ஆர்டர் எடுத்தவன் விலகிச் சென்றதும் அவளை இமைக்காமல் நோக்கினான். அவளும்.

“ஏன்?” என்று கேட்டான்.

அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

“ரொம்ப ஸாரிடா...” தொண்டையில் குரல் சிக்கிக்கொண்டது.

அவன் குறுக்கிடவில்லை.

சாதம் பரிமாற ஆரம்பித்தபோது சகஜமானாள்.

“வயசுதாண்டா காரணம். அது என்னன்னு தெரிஞ்சிக்கற ஆர்வம் ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் இருக்குந்தானே? ஃப்ரண்ட்ஸ் வேற தப்புத்தப்பான புஸ்தகமெல்லாம் படிக்கக் குடுத்தாங்க. படிச்சேன். தெனவேறிப் போய்டிச்சி.. அதான்...”

“அது சரிடீ... என்னை ஏன் மாட்டிவிட்டே?”

“எம்மேலதான் தப்புன்னு சொல்லிக்கறதுக்கு பயம்..! பொம்பளை தப்பு பண்ண மாட்டாளா என்ன? பண்ணுவா! ஆனா மாட்டாத வரைக்கும் எல்லாருமே நல்லவங்கதானே? நான்தான் பண்ணினேன்னு தெரிஞ்சா ஊர் என்னை தேவ்டியான்னு சொல்லிடும். அந்த பயம்தான்!

“ஆம்பிளை மாட்டினா, வெறும் பொம்பளைப் பொறுக்கின்னுதான் பேர் வாங்குவான். ஆனா பொம்பளை? வேசியாய்டுவா. அலையறவன்னு அவமானப்படுத்துவாங்க. அப்படி என்ன தப்புடா அதுல இருக்கு? சாப்பிடறத தப்புன்னு சொல்றோமா? இதுவும் பசிதானே? இதுக்குத் தீனி போட்டா மட்டும் ஏன் தப்புன்னு சொல்லணும்? ஆனா அன்னிக்கு நான்தான்னு ஒத்துக்கிட்டிருந்தேன்னா இன்னைக்கு உயிரோட இருந்திருக்கமாட்டேன். செத்திருப்பேன். எனக்கு வாழணும்ங்கற ஆசை இருந்ததுடா... ரொம்ப ஸாரிடா…” என்று அவனது எச்சில் கையைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

அந்த வயதில் அவள் எடுத்த முடிவு சரிதான் என்று இப்போது தோன்றியது.

“விட்றீ.. துக்கப்பட்டா சரியா சாப்பிட முடியாது.”

ஒரு கவளத்தை எடுத்துச் சாப்பிடுவதற்காக வாய் திறந்தாள். இரண்டு உதடுகளையும் இணைத்திருந்த தழும்பு பிரிந்தது.

“நீ தப்பு பண்ணாதவன்னு நிரூபிக்கறதுக்காக ஒதட்டுல அப்படி சூடு வச்சிட்டிருக்கணுமா என்ன?”

பிளந்த உதடுகளுடன் அவனைப் பார்த்தாள். “அப்படி இல்லடா…” என்றாள் பரிதாபமாக. “பரிகாரம், தண்டனைன்னு எப்படி வேணா நெனைச்சிக்கோ. அலகு குத்திக்கறதில்லையா, தீ மிதிக்கறதில்லையா? அப்படி நெனச்சித்தாண்டா சூடு வச்சிக்கிட்டேன். என் ஒடம்பு இன்னொரு தடவை அந்த மாதிரி நடந்துக்கச் சொல்லாது பாரு” என்று கண்ணீர் புன்னகையுடன் கூறினாள்.

நெகிழ்ந்துவிட்டான். அவன் கண்களில் கண்ணீர் திரண்டது. சட்டென்று விரல் நீட்டி அந்தத் தழும்பை மெல்ல வருடினான். அவள் மறுக்கவில்லை. விலகவில்லை.

“நெருப்புப் பட்ட மாதிரியும் இருந்தது. ஐஸால ஒத்தடம் குடுத்த மாதிரியும் இருந்தது’’ என்றான் பாலு. நெஞ்சில் அந்தத் தாழ்வாரமும், பசுவும், குமட்டி அடுப்பும், அந்த மறக்கமுடியாத அந்தத் தருணமும் தட்டாமாலை சுற்றின.

சித்ரா சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் அந்தப் பழைய குறும்பு. கிளி தொற்றி அமர்ந்ததுபோல் உதடுகளில் அகலமான சிரிப்பு.

“எனக்கும்! காலியான சென்ட் பாட்டில்ல மிச்சமிருக்கற வாசனையை மோந்து பாக்கற மாதிரி... ச்சீ... போடா...’’ என்று வெட்கப்பட்டாள். “இனிமே அப்பப்ப காலி பாட்டிலை மோந்து, மோந்து பாத்துக்கவேண்டியதுதான்!”

சாப்பிட்டு முடித்ததும் ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினாள். “எங்க அட்ரஸ். ஹஸ்பண்டு பிசினஸ்மேன். நான் ஹெல்ப் பண்றேன். அது விஷயமாத்தான் பாங்குக்கு வந்தேன். ரெண்டு கொழந்தைங்க. கல்யாணம் பண்ணியிருக்கமாட்டே. தெரியும். நான் சொல்றேன். பண்ணிக்கோ. பொம்பளைங்க ஒண்ணும் அவ்வளவு மோசமானவங்க கெடையாது. கூப்புடு. எல்லாருமா வரோம்.”

ரத்தமும் சதையும், கொஞ்சு மொழியும் சிரிப்பும், ஆசையும் வஞ்சமும், காமமும் குரோதமும் கொண்ட ஒரு பெண்ணை மணந்துகொள்ளவேண்டும்போல் அவனுக்குத் தோன்றியது.