ஒரு பருவத்தில் துளிர்த்து
மறு பருவத்தில்
மலர்ந்து குலுங்கி
வேறு பருவத்தில் உதிர்ந்த பிறகும்
இன்னுமொரு பூப்பிற்கான
ஈரத்தைத் தனது
வேரடி மண்ணில்
தேக்கி வைத்திருக்கிற
தாவரத்தின் நினைவில்
தலைகீழாகப் பூத்து நிற்கிறதுதொரு
காடு
அங்கு ஒருபோதும்
மண்ணில் இலைகளும்
மலரிலிருந்து இதழ்களும்
உதிர்வதேயில்லை.

பிள்ளை நிலா

அற்றைத் திங்களில்
அறியாப்பருவத்தில்
கூடவே வருகிறதாவென
வானத்தைப் பார்த்தபடி
தெருவின் முடிவுவரை
ஓடித் திரும்புவது சலியாத
ஒரு விளையாட்டு

இற்றைத் திங்களில்
ஏறிட்டுப் பார்க்க
நேரமில்லை என்றபோதும்
செல்லும் இடம்தோறும் உடன்வரவே செய்கிறது

அதே ஊரில் அடுத்ததெருவில்தான்
ஜீவிதம் கழிகிறது
ஆயினும்
சுற்றிச் சுழலும் கோள்களின்
அறிவியலைக்
கற்றுத் தேர்ந்தபிறகு
வெகு தொலைவு விலகிப் போய்விட்டது
அதன்மீதான ஈர்ப்பு

மின்சாரம் அணைந்த
முன் இரவில்
திறந்திருந்த சாளரத்தின் வழியே
விழியுயர்த்திப் பார்த்தபோது
புரிந்தது
நினைவில் பால்யமுள்ள
ஒவ்வொருவரிடமும்
நீங்கிப்போகாத
நிலவொன்று
ஒளிர்ந்துகொண்டிருப்பதை.

ஒரு பருவத்தில் துளிர்த்து
மறு பருவத்தில்
மலர்ந்து குலுங்கி
வேறு பருவத்தில் உதிர்ந்த பிறகும்
இன்னுமொரு பூப்பிற்கான
ஈரத்தைத் தனது
வேரடி மண்ணில்
தேக்கி வைத்திருக்கிற
தாவரத்தின் நினைவில்
தலைகீழாகப் பூத்து நிற்கிறதுதொரு
காடு
அங்கு ஒருபோதும்
மண்ணில் இலைகளும்
மலரிலிருந்து இதழ்களும்
உதிர்வதேயில்லை.

பிள்ளை நிலா

அற்றைத் திங்களில்
அறியாப்பருவத்தில்
கூடவே வருகிறதாவென
வானத்தைப் பார்த்தபடி
தெருவின் முடிவுவரை
ஓடித் திரும்புவது சலியாத
ஒரு விளையாட்டு

இற்றைத் திங்களில்
ஏறிட்டுப் பார்க்க
நேரமில்லை என்றபோதும்
செல்லும் இடம்தோறும் உடன்வரவே செய்கிறது

அதே ஊரில் அடுத்ததெருவில்தான்
ஜீவிதம் கழிகிறது
ஆயினும்
சுற்றிச் சுழலும் கோள்களின்
அறிவியலைக்
கற்றுத் தேர்ந்தபிறகு
வெகு தொலைவு விலகிப் போய்விட்டது
அதன்மீதான ஈர்ப்பு

மின்சாரம் அணைந்த
முன் இரவில்
திறந்திருந்த சாளரத்தின் வழியே
விழியுயர்த்திப் பார்த்தபோது
புரிந்தது
நினைவில் பால்யமுள்ள
ஒவ்வொருவரிடமும்
நீங்கிப்போகாத
நிலவொன்று
ஒளிர்ந்துகொண்டிருப்பதை.