சினிமா
Published:Updated:

மன்னாரு & கம்பெனி

மன்னாரு & கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னாரு & கம்பெனி

குணா கந்தசாமி, ஓவியம்: ஹாசிப்கான்

சொர்க்கம் மற்றும் நரகத்திற்குச்
செல்லும் வழிகளைக் குறித்த
தொடர்பற்ற சிந்தனைகளூடே
இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்
இது அலுவலகத்திற்குச் செல்லும் வழி
என்னும் மெய்யுணர்ந்த திடுக்கிடலில்
தத்துவத்திலிருந்து தரையிறங்கிய
நினைப்புக்கு உடனே ஓர் ஏக்கம்
உலகத்தில் நுழைந்து-அதன்
உயிர்ப்பு கூடிய சந்தடிகளை
இயங்கும் அதன் அழகுகளை
உணரவேண்டிய காலத்தில்
வெற்றிகளை மட்டுமே கோரும்
அலுவலகத்திற்குப் போகவேண்டியிருக்கிறது
நமக்குத் தொப்பை சரிந்துவிட்டது
வாழ்வு தேங்கிவிட்டதின்
வாய்வுக்கோளாறு வேறு
பழகியதை மாற்றும் தெம்புமில்லை

மன்னாரு & கம்பெனி

ஆனாலும் ஓர் ஆசை
இப்படியே வண்டியைத் திருப்பினால்
கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பிடிக்கலாம்
பாண்டிச்சேரியோ மகாபலிபுரமோ போகலாம்
கடலாடிக் குதூகலிக்கலாம்
அவ்வளவு தூரமில்லாவிட்டாலும்
பெசன்ட் நகரோ மெரீனவோ
அட அதுவுமில்லாவிட்டாலும்
சும்மாவேனும் சாலை சாலையாய்ச் சுற்றி
பள்ளிக்குழந்தைகளின் கல்லூரிப்பெண்களின்
கள்ளமற்ற முகங்களைப் பார்க்கலாம்
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பூங்காவில்
பகல் தூக்கம் போடலாம்
இப்படித்தான் தினமும்
உலகத்திற்கும் அலுவலகத்திற்கும்
கிளைபிரியும் பாதையில்
வந்து கூட்டும் பகற்கனவுகளின் தத்தளிப்பில்
தவித்துப்போகும் நொடி நேரத்தில்
வெகு சராங்கமாய் நீளும்
இரைப்பையின் கரங்கள்
அலுவலகத்திற்குச் செல்லும் வழியில்
அதுவாகவே வண்டியைத் திருப்பிவிடுகிறது.