பாலைவன லாந்தர்

பெயர் நலிஜத். புனைபெயர் பாலைவன லாந்தர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்தான் பூர்வீகம் என்றாலும், கல்வி மற்றும் வாழ்க்கைத்தளம் எல்லாம் வடசென்னையில் அமைந்தன. இதனால், தன்னை ஒரு சென்னைவாசி என்றே அடையாளப்படுத்துகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வெவ்வேறு புனைபெயர்களில் எழுதிவருகிறார். ‘உப்புவயலெங்கிலும் கல்மீன்கள்’, ‘லாடம் சிகப்புத்தடங்கள்’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

“கவிதைகள் எளிமையாக வாசகனை அடைய வேண்டும் என்பதைவிட அதில் சில மாயைகளைவைத்து மாறுபட்ட கோணத்தில் கவிதைகளை எழுதிப் பார்க்க முயற்சி செய்கிறேன். இப்படித்தான் எழுத வேண்டும் என்ற பழைய சங்கதிகளை மீறி, சில புதிய உத்திகளைக் கையாள்கிறேன். காலத்தைப் பதிவுசெய்யும் படைப்பாளி நான். வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் அந்தந்தக் காலத்திற்கே பயணிப்பதாக எண்ணிப் பிரமித்திருக்கிறேன். இந்த பிரமிப்பு, வரலாற்றைப் பதிந்து வைத்தவர்கள்மீதான அலாதி ப்ரியத்தை ஏற்படுத்தியதைப் பள்ளி நாள்களில் உணர்ந்திருக்கிறேன். இன்றைய காலகட்டத்தைப் பதிவுசெய்ய கவிதை என்னும் ஆயுதத்தைக் கையாள்கிறேன்.

சமகால நிகழ்வுகளைக் கவிதையாக உருவாக்கம் செய்யும்போது, எனது வரிகளின் மீதான விமர்சனங்கள் என்னை நானே பரிசோதித்துக்கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கின்றன. அழகியலையும் அரசியலையும் தவிர்த்து, நடைமுறை நிகழ்வியலை எழுதும்போது கவிதை தானாகச் சிதைந்த மலரின் சாயலைப் பெறுகிறது. ஓவியம், கவிதை, இசை மூன்றும் எண்ணப் பரிமாணங்களின் நீட்சி. சொற்களைக் கையாள்வது ஓர் அற்புதமான கலை. ஒரு கவிதையில் நாம் பிரயோகிக்கும் சொற்கள், வாசிப்பவர்களின் சுயங்களோடு மோதிப் பார்க்கும் தருணம்... மிக நுட்பமானது.

நான் பிறந்தது, வண்டல் மணலும் பனைமரக் காடுகளும் நிறைந்த ஊர் என்றாலும் வளர்ந்தது, கறுப்பு நிற ஹார்பர் (துறைமுகம்) தூசி படியும் வடசென்னை. இப்படி மாறுபட்ட இருவேறு நிலத்தை, மனநிலையை எப்போதும் கையாள வேண்டிய சூழலைக் காலம் பரிசளித்திருக்கிறது. இதைவிட எழுதுவதற்கு வேறென்ன காரணம் வேண்டும். அதேசமயம், எழுதிவிட்டால் மட்டும் என்ன நேர்ந்துவிடும் என்ற கேள்விகளும் என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றன.

ஜீவன் பென்னி

இயற்பெயர், பீ.மதார் மைதீன், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது பாண்டிச்சேரியில். இளங்கலை இயற்பியல் முடித்தவர். தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து கவிதைகளும் கவிதை சார்ந்த விமர்சனங்களையும் எழுதிவருபவர். ‘நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது’, ‘அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

ஒரு விருப்பத்தின் மற்றும் அதன் நுட்பமான தன்மைகளின் பொருட்டும் கவிதைகளின் வழியைப் பின்பற்றியவன் நான், அவ்வளவே. வாழ்வில் படர்ந்திருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறுமனே கனவுகளின் கவிதையை நேசிப்பவனல்ல, அன்றாடங்களை எப்போதும் சகித்துக்கொண்டிருப்பதின் பதிலியாக, மிகச் சுருங்கிய வடிவத்திலிருக்கும் அதன் ஏதேனும் ஒன்றுடன் நேர்க்கோட்டில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருப்பவன் நான். சில வேளைகளில் மிகவும் நம்பும் ஒரு ஞாபகத்தின் கதவுகளை ஓயாமல் தட்டிக்கொண்டிருப்பது போலானதாகவும், பிரபஞ்சத்தின் மிகத் தனிமையில் துலாவிக்கொண்டிருக்கும் தனி மனித இருப்பைச் சார்ந்திருப்பது மாதிரியானதுமே என் சொற்கள். மிகப்பழைமையான சிற்பங்களின் அடையாளங்களைப் போன்றதொரு வடிவத்தில் என் கவிதைகளின் இயங்கியலை முயன்று, பிறகு அதன் வழியே கிடைக்கப்பெற்ற கணக்கற்ற வரைமுறைகளின் நுட்பங்கள் வழியே நிறைய தோல்விகளுக்குப் பிறகு அதைத் தகவமைத்துக்கொண்டேன். சில கவிதைகளில் படர்ந்திருக்கும் மனநிலையின் அழகியல் எப்போதும் என்னைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. லௌகீகத் தேவைகளுக்கான வாழ்தலின் பொருட்டு சிலவற்றில் செலவழித்து வரும் நாள்களின் வேறுவேறு அனுபவங்களையும், அதிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் முடிந்திடாத புறவயமான சாராம்சத்தையும் கடப்பதற்காகவே கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். கடத்த முயன்ற சிறிய இடைவெளிகளின் நுட்பங்களும் அவை சார்ந்த புரிதல்களுமே என் வாழ்நிலைகளை மாற்றியிருக்கின்றன. தமிழகத்தில் இலக்கியச் சூழலென்பது, மிகப் பிரமாண்டமான ஏமாற்றுகளின் ஆள்களைத் தெரிந்து தொடர்பில் வைத்திருப்பவர்களோடு மிகுந்த நெருக்கமுடையது. அதனால், அதற்காக நான் ஒருபோதும் எழுதியதில்லை. இவற்றில் கலந்திடாத தனித்த உதிரிகளுக்கானவைதாம் என் மிகச் சிறிய சொற்கள்.

- படம் : அ.குரூஸ்தனம்