வளர்பருவம்

எனது பூனைக்குட்டி
என்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று
வேறு யாரையோ பார்த்து
வாலாட்டும்போதும்
அதற்கு உணவிடுகிறேன்.

நேற்றைய கொண்டாட்டங்கள்
முகத்தில் நிறைந்திருக்க
‘அய்யோ... உன்னை எப்படி
அழைக்க மறந்தேன்?’
என்று நீ பதைபதைப்பதை
மென்புன்னகையுடன் ரசிக்கிறேன்.

முப்பத்திமூன்று
குட்நைட்டுகளுக்குப் பிறகும்
தூங்கட்டுமா என்று கேட்பவள்
இப்போது
முதல் குட்நைட்டிலேயே
தூங்கிப்போவதை
மிகுந்த சிரமத்துடன்
ஏற்றுக்கொள்ள முயல்கிறேன்.

‘இன்று என்ன நடந்தது தெரியுமா?’
என்று விவரிப்பதை
நிறுத்திக்கொண்ட அந்த நாளிலிருந்து
உனக்கு சுவாரஸ்யமாக எதுவுமே
நடக்கவில்லையென்றே
தீர்க்கமாக நம்புகிறேன்.

சமீபகாலமாக நான்
அதிகமாக டாட்டா காட்டுகிறானோ
என்று தோன்றுகிறது.
விரைவில் டாட்டா காட்டுவதில்
நான் நிபுணத்துவம் பெற்றுவிடுவேன்.

- தி.விக்னேஷ்

காதல் மறுப்பு

நெருப்புத்துண்டொன்று
சரியாகக் கழுத்தில் வீழ்ந்து
தலையைத் துண்டிக்கிறது
கழன்று ஓடும் தலை
உன் காலடியில் வீழ்கிறது
நடனமாடிக்கொண்டே நீ உதைக்கிறாய்
உதைக்கப்பட்ட என் தலை
நெருப்போடு என் வனத்திலேயே வீழ்கிறது
என் வனம் தீப்பற்றுகிறது
முழுவதுமாய் எரிந்து அழியத்துவங்குகிறது.

- சௌவி

விளையாட்டு நிலம்

சிதறிவிழுந்த கற்களை
கண்களால் சிறிது
நோட்டமிட்ட இளமதி
சொட்டாங்கல்லை
தூக்கிப்போட்ட கணப்பொழுதில்
ஒன்னான்....
ரெண்டான்...
மூணான்...
நாலான்....
என்றபடி லாவகமாய்
தோழிகளுடன்
விளையாடிக் கொண்டிருந்த
வேளையில்
பேய்க்காட்டைத் தாண்டி
நீலமலைக்குச் செல்ல
மேப்பிடம் வழி
கேட்டுக் கொண்டிருந்தனர்
டோரவும்..... புஜ்ஜியும்....!

- வைகை சுரேஷ்

ரோம பாவனை

மறைத்துவைத்த பாலை
குடித்துச்சென்ற பூனை
அம்மாவைப் பார்த்து
மீசையைத் தடவுகிறது

- அரவிந்தன்

வளர்பருவம்

எனது பூனைக்குட்டி
என்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று
வேறு யாரையோ பார்த்து
வாலாட்டும்போதும்
அதற்கு உணவிடுகிறேன்.

நேற்றைய கொண்டாட்டங்கள்
முகத்தில் நிறைந்திருக்க
‘அய்யோ... உன்னை எப்படி
அழைக்க மறந்தேன்?’
என்று நீ பதைபதைப்பதை
மென்புன்னகையுடன் ரசிக்கிறேன்.

முப்பத்திமூன்று
குட்நைட்டுகளுக்குப் பிறகும்
தூங்கட்டுமா என்று கேட்பவள்
இப்போது
முதல் குட்நைட்டிலேயே
தூங்கிப்போவதை
மிகுந்த சிரமத்துடன்
ஏற்றுக்கொள்ள முயல்கிறேன்.

‘இன்று என்ன நடந்தது தெரியுமா?’
என்று விவரிப்பதை
நிறுத்திக்கொண்ட அந்த நாளிலிருந்து
உனக்கு சுவாரஸ்யமாக எதுவுமே
நடக்கவில்லையென்றே
தீர்க்கமாக நம்புகிறேன்.

சமீபகாலமாக நான்
அதிகமாக டாட்டா காட்டுகிறானோ
என்று தோன்றுகிறது.
விரைவில் டாட்டா காட்டுவதில்
நான் நிபுணத்துவம் பெற்றுவிடுவேன்.

- தி.விக்னேஷ்

காதல் மறுப்பு

நெருப்புத்துண்டொன்று
சரியாகக் கழுத்தில் வீழ்ந்து
தலையைத் துண்டிக்கிறது
கழன்று ஓடும் தலை
உன் காலடியில் வீழ்கிறது
நடனமாடிக்கொண்டே நீ உதைக்கிறாய்
உதைக்கப்பட்ட என் தலை
நெருப்போடு என் வனத்திலேயே வீழ்கிறது
என் வனம் தீப்பற்றுகிறது
முழுவதுமாய் எரிந்து அழியத்துவங்குகிறது.

- சௌவி

விளையாட்டு நிலம்

சிதறிவிழுந்த கற்களை
கண்களால் சிறிது
நோட்டமிட்ட இளமதி
சொட்டாங்கல்லை
தூக்கிப்போட்ட கணப்பொழுதில்
ஒன்னான்....
ரெண்டான்...
மூணான்...
நாலான்....
என்றபடி லாவகமாய்
தோழிகளுடன்
விளையாடிக் கொண்டிருந்த
வேளையில்
பேய்க்காட்டைத் தாண்டி
நீலமலைக்குச் செல்ல
மேப்பிடம் வழி
கேட்டுக் கொண்டிருந்தனர்
டோரவும்..... புஜ்ஜியும்....!

- வைகை சுரேஷ்

ரோம பாவனை

மறைத்துவைத்த பாலை
குடித்துச்சென்ற பூனை
அம்மாவைப் பார்த்து
மீசையைத் தடவுகிறது

- அரவிந்தன்