பொம்மைகள் விளையாடும் குழந்தை

நவநாகரிக நகரமொன்றின்
அடுக்குமாடிக் குடியிருப்பில்
பூட்டிய அறைக்குள்
சிரிப்புமின்றி
அழுகையுமின்றி
அமர்ந்திருக்கும்
அக்குழந்தையைப் பற்றி
யோசித்துக்கொண்டிருக்கின்றன
அறை முழுக்க
நிறைந்திருக்கும் பொம்மைகள்

ஒன்று அம்மாவாக
மற்றொன்று அப்பாவாக
மற்றவையெல்லாம்
தோழமைகளாகவும் மாறி
விளையாட முடிவெடுத்தன.
நேரம் ஆக ஆக விளையாட்டு
களைகட்டியது.
எதனோடும் சேர்ந்து விளையாடாமல்
வெறித்து வெறித்து மரத்துப்போன
அக்குழந்தையின் கண்களில்
நடுநிசி வரையில்
விளையாடிக்கொண்டிருக்கின்றன
பொம்மைகள்!

- மு.பன்னீர்.

கதவின் கடவு ஓசைகள்

தட்டும் ஓசையைவைத்து
தட்டுவது யாரென்று
தீர்மானித்துவிட முடிகிறது.

தீபதர்சினிக் குட்டி எனில்
ஓசை கீழிருந்து வரும்.

ஜெயஅருணா என்றால்
ஓசை தள லயத்தில்
குறும்பைக்காட்டும்.

மனைவியெனில்
ஓசையில் சிக்கனம் தொனிக்கும்.

அப்பா எனில்,
ஓசை அவர் கை வலிக்காதபடி
இருக்கும்.

அம்மா எனில்
ஓசை கதவுக்கு வலிக்காதபடி
இருக்கும்.

நான் பலவிதத்தில்
தட்டுகிறேன்
ஆயினும் தட்டுவது நான்தான் எனப்
புரிந்துகொள்கிறார்கள்
அவர்கள் அனைவரும்
ஒருவேளை அதுவே
எனது கடவு ஓசை போலும்.

- வீ.விஷ்ணுகுமார்.

ஹோல்டரைப் போன்றது வாழ்வு

இந்த வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும்
ஒரு ஹோல்டரைப்போலவே நமக்கு வாய்த்திருக்கிறது.
அது, ஒன்று அல்லது இரண்டு வருட உத்தரவாதத்தோடு
நாம் மாட்டிக்கொள்ளும்
சி.எஃப்.எல்.,
எல்.இ.டி பல்புகளையும்
ஏற்றுக்கொண்டு எரிகிறது...
சமயத்தில் அவசரத்திற்குப்
போட்டுக்கொள்ளும்
பத்து ரூபாய்
குண்டுபல்புகளையும்
எந்த மறுப்புமின்றி ஏந்தி ஔி வீசுகிறது.
எப்போது
வெளிச்சத்தின் ஆயுள் முடியுமென்பது
ரகசியமென்றாலும்
இருட்டைப் போக்கிக்கொள்ளும்
வாய்ப்புகளை
இந்த வாழ்வு
தந்துகொண்டுதான் இருக்கிறது.

- சாமி கிரிஷ்

பொம்மைகள் விளையாடும் குழந்தை

நவநாகரிக நகரமொன்றின்
அடுக்குமாடிக் குடியிருப்பில்
பூட்டிய அறைக்குள்
சிரிப்புமின்றி
அழுகையுமின்றி
அமர்ந்திருக்கும்
அக்குழந்தையைப் பற்றி
யோசித்துக்கொண்டிருக்கின்றன
அறை முழுக்க
நிறைந்திருக்கும் பொம்மைகள்

ஒன்று அம்மாவாக
மற்றொன்று அப்பாவாக
மற்றவையெல்லாம்
தோழமைகளாகவும் மாறி
விளையாட முடிவெடுத்தன.
நேரம் ஆக ஆக விளையாட்டு
களைகட்டியது.
எதனோடும் சேர்ந்து விளையாடாமல்
வெறித்து வெறித்து மரத்துப்போன
அக்குழந்தையின் கண்களில்
நடுநிசி வரையில்
விளையாடிக்கொண்டிருக்கின்றன
பொம்மைகள்!

- மு.பன்னீர்.

கதவின் கடவு ஓசைகள்

தட்டும் ஓசையைவைத்து
தட்டுவது யாரென்று
தீர்மானித்துவிட முடிகிறது.

தீபதர்சினிக் குட்டி எனில்
ஓசை கீழிருந்து வரும்.

ஜெயஅருணா என்றால்
ஓசை தள லயத்தில்
குறும்பைக்காட்டும்.

மனைவியெனில்
ஓசையில் சிக்கனம் தொனிக்கும்.

அப்பா எனில்,
ஓசை அவர் கை வலிக்காதபடி
இருக்கும்.

அம்மா எனில்
ஓசை கதவுக்கு வலிக்காதபடி
இருக்கும்.

நான் பலவிதத்தில்
தட்டுகிறேன்
ஆயினும் தட்டுவது நான்தான் எனப்
புரிந்துகொள்கிறார்கள்
அவர்கள் அனைவரும்
ஒருவேளை அதுவே
எனது கடவு ஓசை போலும்.

- வீ.விஷ்ணுகுமார்.

ஹோல்டரைப் போன்றது வாழ்வு

இந்த வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும்
ஒரு ஹோல்டரைப்போலவே நமக்கு வாய்த்திருக்கிறது.
அது, ஒன்று அல்லது இரண்டு வருட உத்தரவாதத்தோடு
நாம் மாட்டிக்கொள்ளும்
சி.எஃப்.எல்.,
எல்.இ.டி பல்புகளையும்
ஏற்றுக்கொண்டு எரிகிறது...
சமயத்தில் அவசரத்திற்குப்
போட்டுக்கொள்ளும்
பத்து ரூபாய்
குண்டுபல்புகளையும்
எந்த மறுப்புமின்றி ஏந்தி ஔி வீசுகிறது.
எப்போது
வெளிச்சத்தின் ஆயுள் முடியுமென்பது
ரகசியமென்றாலும்
இருட்டைப் போக்கிக்கொள்ளும்
வாய்ப்புகளை
இந்த வாழ்வு
தந்துகொண்டுதான் இருக்கிறது.

- சாமி கிரிஷ்